ஒரு உலகம் எவ்வளவு தான் மறுமலர்ச்சி அடைந்து இருந்தாலும், முன்னேறி இருந்தாலும் இன்னும் ஆண்கள் மத்தியில் பெண்களுக்கான அங்கீகரிப்பு என்பது பரிபூரணமாக இல்லை என்பதே உண்மை. அது வார்த்தைகள் மூலமும் மேடைகளிலும் வேண்டுமானால் மறுதலிக்கலாம். ஆனால் உணர்வு ரீதியாக சொன்னால் அது உண்மையில்லை. அடுத்து பெண்களின் கலை சார்ந்த பங்களிப்பு பெரிதாக கண்டு கொள்ள படுவது இல்லை, இதில் எவ்வளவு திறமை இருந்தாலும் பெண்களுக்கு பின்னடைவு செய்வதற்கான வழிமுறைகள் உள்ளன. மீடியா, சினிமா துறையை பொருத்தவரை Couch casting , அவர்களோடு ஒத்துழைக்க வேண்டும், அவற்றை தாண்டி வெற்றி அடைந்தவர்களும் உண்டு. இப்படி எந்த துறை எடுத்து கொண்டாலும் பெண்கள் என்றால் நேரடியாகவோ மறைமுகமாகவோ நெருக்கடிகள் உண்டு. இன்று சோசியல் மீடியாவை எடுத்து கொண்டால் முகநூல், இன்ஸ்ட்ரா இங்கேயும் உள்பெட்டியில் முகம் தெரியாத நபர்களால் இடைஞ்சல் செய்யும் கூட்டம் , இவற்றை எல்லாம் கடந்து போக கற்றுக் கொண்டாலும், எம் கூடவே இருந்து நையாண்டி செய்யும் ஆண்கள் சிலர் இருக்கவே செய்கிறார்கள். அவர்களை நாம் கண்டு கொள்ள இல்லை என்றால் கூட , உலகின் எந்த மூலைக்கு போனாலும் மனதளவில் பின்தங்க...
இடுகைகள்
மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது