மங்களத்தை சுற்றி பிள்ளைகளான மூத்த மகன், வசந்த், மகள் மேகலா, கடைசி மகன் வினோத் எல்லோரும் கையில் ஒவ்வொரு பூங்கொத்தை வைத்துக் கொண்டு ஆச்சரிய படுத்தினார்கள். மங்களம் எதிர் பார்க்கவே இல்லை, மதர்ஸ் டே அன்று சொல்லாமல் கொள்ளாமல் எல்லோரும் ஒன்று சேர்ந்து வந்து , தாயை மகிழ்வித்து கொண்டு நின்றார்கள். மூத்த மகன் வசந்த் அமெரிக்காவில் ஒரு பெரிய கம்பெனியில் CEO, மகள் டாக்டர், இளைய மகன் நாசாவில் விஞ்ஞானி . எல்லோரும் திருமணம் செய்து தங்கள் குடும்பம், குழந்தைகள் வேலை என்று ஆகி விட்டார்கள். ஆனாலும் இப்படி தீடீர் என்று எல்லோரும் அப்பப்ப அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது உண்டு. அம்மாவை அன்பு வெள்ளத்தில் மிதக்க விட்டார்கள். மங்களத்தின் கணவன் ஒரு பொறியியலாளர், வசதியான வாழ்க்கை, தேவையான அளவு பணம், ஒன்றுக்கு இரண்டு மூன்று வீடு . இரண்டு வருடங்களின் முன் ஒருநாள் இரவு படுக்கைக்கு போன கணவர் எழவே இல்லை. அன்று முதல் வாழ்வே சூனியமாக போனது. பேச்சு துணைக்கு ஆள் இல்லை, சண்டை போட கூட ஆள் இல்லை, கோபம் கொள்ள, பேசி சிரிக்க என்று எதையும் பேசி சிலாகிக்க யாருமே இல்லாமல் தனியாக விட பட்டது , இனம்புரியாத ஒரு பயம். பிள்ளைகள் எல்லோர...
இடுகைகள்
ஏப்ரல், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது