பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரின் ஆழ் மனதிலும் நிறைய கனவுகள் இருக்கும். நான் சொல்லுவது , தங்கம் , வெள்ளி, உடைகள், பாத்திரம் பண்டங்களும் , இந்த பாண்டசி பொருள்களையும் அல்ல. அதையும் தாண்டி அவர்களுக்கான ஆத்மார்த்தமான கனவுகள் இருக்கும். அது எத்தனை வீதமான பெண்களுக்கு ஈடுயேறுகிறது என்றால் ஒரு எட்டு சதவீதம் என்கிறது கணக்கெடுப்பு. அதில் 5வீதம் நினைத்தை விட்டு வேற ஒன்றில் வெற்றி அடைந்து இருக்கலாம். பெண் பிறந்த வீட்டில் தன் கனவை வளர்த்து கொள்கிறாள். ஆனால் அது திருமணத்தின் பின் மறந்து போக வைக்கிறது அவளது குடும்ப வாழ்க்கை அதன் அமைப்பும். நிறைய பெண்களின் கேரியர் தொடர முடியாமல் போக காரணம் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். முன்னுரிமை கொடுக்கிறார்கள். அது இயற்கையின் அதிசயம் தாய்மை. எதை முன்னுக்கு கொண்டு வந்தாலும் குழந்தையின் முன் அவை இரண்டாம் பட்சமே. அவர்கள் கனவுகளை அவர்கள் முடக்கி கொள்கிறார்களா என்றால் , நிச்சயமாக ஆம் தான். அவர்களின் முன்னுரிமை ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு மாதிரி அமைகிறது. கணவனின் தொழிலுக்கும் , அவரின் கனவுகளுக்கும் , குழந்தைகளின் எதிர்காலத்துக்கும் என்று ஒவ்வொர...
இடுகைகள்
மார்ச், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது