பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரின் ஆழ் மனதிலும் நிறைய கனவுகள் இருக்கும். நான் சொல்லுவது , தங்கம் , வெள்ளி, உடைகள், பாத்திரம் பண்டங்களும் , இந்த பாண்டசி பொருள்களையும் அல்ல. அதையும் தாண்டி அவர்களுக்கான ஆத்மார்த்தமான கனவுகள் இருக்கும். அது எத்தனை வீதமான பெண்களுக்கு ஈடுயேறுகிறது என்றால் ஒரு எட்டு சதவீதம் என்கிறது கணக்கெடுப்பு. அதில் 5வீதம் நினைத்தை விட்டு வேற ஒன்றில் வெற்றி அடைந்து இருக்கலாம்.
பெண் பிறந்த வீட்டில் தன் கனவை வளர்த்து கொள்கிறாள். ஆனால் அது திருமணத்தின் பின் மறந்து போக வைக்கிறது அவளது குடும்ப வாழ்க்கை அதன் அமைப்பும். நிறைய பெண்களின் கேரியர் தொடர முடியாமல் போக காரணம் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். முன்னுரிமை கொடுக்கிறார்கள். அது இயற்கையின் அதிசயம் தாய்மை. எதை முன்னுக்கு கொண்டு வந்தாலும் குழந்தையின் முன் அவை இரண்டாம் பட்சமே.
அவர்கள் கனவுகளை அவர்கள் முடக்கி கொள்கிறார்களா என்றால் , நிச்சயமாக ஆம் தான். அவர்களின் முன்னுரிமை ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு மாதிரி அமைகிறது. கணவனின் தொழிலுக்கும் , அவரின் கனவுகளுக்கும் , குழந்தைகளின் எதிர்காலத்துக்கும் என்று ஒவ்வொரு காலத்திலும் மாறிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் அவர்கள் தங்கள் தொழிலை செய்ய தவறுவது இல்லை. அது குடும்ப வருமானம் , பிள்ளைகளின் எதிர் காலம் சார்ந்த எண்ணிய ஒரு பயணமாக தான் இருக்கிறது.
பெண் பன்முக திறமை கொண்டவள், அவளால் எதையும் பொறுப்பாக , அக்கறையுடன், கவனம் சிதறாமல் செய்ய கூடியவளை, எல்லோரும் தங்களுக்கு சாதமாக பாவிக்கிறார்கள். அது அவள் வேலை செய்யும் இடமாகட்டும் , குடும்பம் ஆகட்டும், உறவுகள் ஆகட்டும். ஆனால் ஒருவர் கூட அவரின் ஆழ் மனதின் ஆசைகளை இருத்தி வைத்து ஒரு நிமிடமாவது கேட்டவர்கள் உண்டா. எல்லோரும் அவளால் என்ன முடியுமோ அவ்வாறான அவளின் திறமைகளை பயன் படுத்திக்கொள்கிறார்கள். வேலை பார்க்கும் இடத்தில் அவள் திறமைசாலி என்று தெரிந்தாலும், அந்த பதவியும் பெயரும் இன்னொருவருக்கு போகிறது. வீட்டில் அவள் , அம்மாவாக , மனைவியாக தெரிகிறாளே தவிர, அவள் ஒரு திறமைசாலி என்பதை கவனிக்க தவறி விடுகிறார்கள்.
ஒரு மனைவியை இருத்தி வைத்து , உன் கனவு என்ன , எதிர்பார்ப்பு என்ன, உனக்கு என்று எதாவது இலட்சியம் இருக்கிறதா, என்று கேட்ட தமிழ் ஆண்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. இது ஆணை குறை சொல்வதற்காக சொல்லவில்லை. நடைமுறையை சொல்கிறேன். அப்படி கேட்டு இருக்க மாட்டார்கள். கொஞ்சம் ஆளுமை பொருந்திய பெண்கள் தாங்களே தங்கள் கனவுகளை முன் வைத்து, என் கோல் இது என்று வாக்குவாத பட்டு போராடி கொண்டு முன்னுக்கு வந்தவர்கள் ஒன்றிரண்டு பேர் உண்டு. ஆனால் ஒவ்வொரு பெண்ணின் கனவை , குழந்தைகள் வளர்ந்த பிறகு கூட வளர்த்து கொள்ளலாம். ஆனால் அதற்கு இனி என்னத்தை செய்து கிழிக்க போகிறாய் எனும் பாணியில் அவர்கள் பதில் அமைவதால், மீண்டும் மனமுடைந்து போய் ஒதுங்கி இல்லை ஒடுங்கி விடுகிறார்கள்.
ஒரு பெண்ணுக்கு குடும்பம் குழந்தைகள் எவ்வளவு முக்கியமோ, அவள் அதற்கு பிறகாவது அவளின் ஆதாமார்த்தமான அந்த இலட்சியத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் . அதை உயிர்ப்பிக்க வேண்டும். அதுவே அவளுக்கு வாழ்வின் ஆத்மார்த்தமான நிம்மதியை, மகிழ்ச்சியை கொடுக்கும்.
பெண்களின் கனவுகளை இலட்சியங்களை பற்றி சிந்திக்க இவர்கள் வளர்க்க படவில்லையா, எங்கள் சமூகத்தில் இப்படியான ஒரு சிந்தனை ஏற்பட வாய்ப்புக்கள் அமையவில்லையா. எந்த ஒரு நல்லெண்ணத்துக்கும் எல்லா நேரமும் நல்ல நேரமே. இந்த கண்னோட்டத்தில் ஆண்கள் சிந்திப்பது இல்லையா, சிந்திக்க தூண்ட படவில்லையா. இல்லை பெண்கள் தானே என்ற அலட்சியமா?
பெண்கள் என்றால் குடும்பத்துக்காக நேர்ந்து விடுபட்டவர்கள் அல்ல. அவர்களும் இரத்தமும் சதையும் உணர்வும் கொண்டவர்கள். தாய்மை என்பது கடவுளுக்கு ஈடாக அவர்கள் , இந்த உலகில் உயிர்களை படைக்கும் மகா சக்திகள். அந்த பெண் எல்லோரின் தேவைகளையும் அறிந்து பார்த்து பார்த்து செய்யும் போது, என்றாவது வாழ்வில் ஒரு நாள் அவளின் கனவையும் கேட்டு பாருங்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக