அவள் பெயர் கண்ணு , அவளை நான் சந்தித்தது கொழும்பில், வெள்ளவத்தையில் தான். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வருவோருக்கு எல்லாம் குட்டி யாழ்ப்பாணம் வெள்ளவத்தை தான் காரணம் மொழிப் பிரச்சனை இல்லாமல் ஓரளவு சமாளிக்க கூடிய இடம் என்றால் இந்த பகுதி என்றால் மிகையாகாது. ஏனைய இடங்களில் சிங்களம் அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். எனக்கு எந்த மொழி தடங்கல் இல்லாத போதும் ஒரு தற்காலிக பாதுகாப்புணர்வு தந்தது இந்த வெள்ளவத்தை.
நான் குடியிருந்த வீட்டு உரிமையாளர் ஒரு தமிழர். மிகவும் உதவி மனப்பான்மை மிக்கவர். அவருக்கு வயது வந்த பெண் குழந்தைகள் இருப்பதால் எந்த ஆண்களுக்கும் வாடகைக்கு கொடுப்பதில்லை என்பது கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் என அங்கு உள்ளவர் மத்தியில் ஒரு நம்பிக்கை.
அங்கே தான் கண்ணு ஒரு முப்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க, அவள் பத்து வயது மகன் கண்ணன். பெயருக்கேற்ற கண்ணன் குழப்படி செய்வதில். கண்ணு அப்படி ஒன்றும் அழகி கிடையாது.எப்போதும் முகத்தில் ஒரு கடுகடுப்பு, அழகு என்று சொல்ல தன்னை அலங்கரித்து கொண்டதில்லை.சிக்கல் நிறைந்த கூந்தலை அள்ளி முடித்தபடி, எப்போதும் கண்ணன் உடன் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்பதை காணலாம் . பொழுது கிடைக்கும் பொது ஊர் வம்பு பேசியபடி படியில் குந்தியிருப்பது காணக்கூடியதாக இருக்கும்.
திருமணமான சில மாதங்களிலேயே உள்ள இரண்டு மூன்று நகைகளையும் சுத்தி கொண்டு ஓடிவிட்டான் அவள் கணவன், கையில் குழந்தையோடு வறுமையில் வாடும் வயோதிப பெற்றோரிடம் தஞ்சம் அடைந்தாள் கண்ணு. சின்ன சின்ன வேலைகளை செய்து வறுமையோடு காலம் கடத்திய கண்ணு மகன் வளர தேவைகள் வளர அவனின் குறும்பும் சேட்டையும் சேர்ந்தே வளர் இப்படி வாழ்ந்தால் சரி வராது என்று எங்காவது வெளிநாடு போய் உழைத்தால் தான் என்ற முடிவுக்கு வந்தாள் .
அவளின் சகோதரியும் கணவரும் இத்தாலியில் குடியிருப்பதாகவும் அவர்கள் மூலம் நானி (Nanny ) வேலை எடுத்துக்கொண்டு போகலாம் என்று ஏற்பாடுகள் செய்து கொள்ள கொழும்புக்கு வந்து சேர்ந்தவள் தான் கண்ணுவும் மகனும்.
அது என்னவோ கண்ணுக்கு யாரோடு ஒத்துப் போகாது, தொட்டதுக்கு எல்லாம் பிரச்சனை பட தொடங்கி விடுவாள்.ஆனால் சிலர் விலகி இருந்தனர் நான் உட்பட . ஹாய் பை அவ்வளவே.
ஒரு நாள் கதறிக்கொண்டு ஓடிவந்து கண்ணு கதவை தட்டினாள் .என்னை பக்கத்தில் இருக்கும் டெல்மோன் ஆஸ்பத்திரிக்கு கூட்டி போக முடியுமா? மிக ஆழமாக கத்தி வெட்டி விட்டது சமைக்கும் போது என்றபடி வழியும் ரத்தத்தை ஒரு துணியால் அழுத்தி பிடித்தபடி. “சரி வாங்க அக்கா , என்று அம்மாவிடம் சொல்லி விட்டு அக்காவோடு போன போது கையில் மூன்று தையல் போட்டு அனுப்பி வைத்தார்கள்.
வழியில் வரும்போது கண்ணு பேசிக்கொண்டு வந்தாள் . எனது தங்கையின் கணவர் தான் இத்தாலி போக உதவி செய்கிறார். அங்கு போன போனபின் உழைத்து போன காசு கொடுப்பதாக சொல்லி இருக்கிறேன். இந்த கண்ணன் தான் சொல் பேச்சு கேட்க மாட்டேன் என்கிறான்.நீங்களும் தானே பார்க்கிறீங்க தினமும் என்றாள் . “ இந்த வயதில் எல்லா பிள்ளைகளும் அப்படித்தான், வளர்ந்ததும் சரியாகி விடுவான், பாருங்கள் “ என்றேன்
எனக்கு இருக்கும் ஒரே பயம் இவன் அப்பன் போல ஆகி விடுவானோ என்பது தான் என்று அங்கலாய்த்துக் கொண்டாள் . பேசும் போது கண்கள் கலங்கியது. “ அழ வேண்டாம் அக்கா, எல்லாம் மாறும் , கவலை எல்லாம் தீரும், அது சரி நீங்கள் போனால் கண்ணனை யார் பார்த்துக் கொள்ளுவார்கள் “ என்றேன்.
“வீட்டுக்கார அங்கிள் தான் ஒரு ஸ்கூல் உடன் ஹாஸ்டல் எடுத்து தந்து இருக்கிறார் , அவரிடம் தான் பொறுப்பு கொடுத்து இருக்கிறேன்” என்றாள் . “ அது நல்ல ஐடியா மட்டுமில்ல படிப்புக்கும், பழக்கவழக்கத்துக்கும் உத்தரவாதம். கண்ணன், நல்ல ஒருவர் கைகளில் தான் போயிருக்கிறான் , யோசிக்க வேண்டாம் அக்கா “ என்று ஆறுதல் சொன்னேன். “ ஒரு வருடத்துக்கு பிறகு கண்ணனை இத்தாலிக்கு கூப்பிடலாம் என்று தங்கையின் கணவர் சொன்னார், அதுக்கு கவலை இல்லை, எல்லாம் அவன் செயல் “ என்று பெருமூச்சு விட்டார் கண்ணு.
மனிதரது வாழ்க்கை மிகப்பெரிய சொத்து , அந்த நம்பிக்கை தான். அது மட்டும் இல்லை என்றால் வாழ்வே சுடுகாடு தான். சில நாட்களில் நானும் வந்து கண்ணு இத்தாலி போனதாக அறிந்தேன். கண்ணன் ஸ்கூல் ஹோட்டலில் படித்து கொண்டு இருந்தான்.
நான் வந்து ஒரு வருடம் ஆகி இருக்கும். நான் கொழும்புக்கு போன் செய்த போது தான் அந்த அதிர்ச்சி தரும் செய்தி கிடைத்தது.. கண்ணு இத்தாலியில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனாள் என்பது, என்னால் நம்பவே முடியவில்லை. ஏன் எதற்கு தற்கொலை செய்தாள் என்ற விபரம் தெரியாது, கண்ணனுக்கு என்ன ஆச்சு?கண்ணு அந்தளவு கோழை அல்ல மகனை பரிதவிக்க விட்டு போக ,அவனுக்காக இவ்வளவு தூரம் போனவள் எப்படி உயிரை துறந்தாள் ? அங்கு எதிர்பார்த்து போன மாதிரி வேலை அமையாமல் சிக்கலில் மாட்டிக்கொண்டு கொடுமை படுத்த பட்டாளா? இல்லை யாரும் அவளை கொலை செய்து தற்கொலை என்று கதையை திசை திருப்பினார்களா ?எதற்காக உயிரை மாய்த்து கொண்டாள் ? தன் மகனை தனியே தவிக்க விட்டு உயிரை துறக்க முடிந்ததா கண்ணுவால் , இப்படி பல கேள்விகள் பதில் இல்லாமல் மனதில்
Oh my god.... 😳
பதிலளிநீக்குஎன்ன இப்படி முடித்துவிட்டீர்கள் 😢
உடைந்து போனேன்
உண்மையில் நடந்தது இவ்வளவே இதற்கு பிறகு சினிமாவா அவன் வளர்ந்து பெரியவன் ஆக , இப்போ வளர்ந்து இருப்பான்.
பதிலளிநீக்கு