ஒரு பழைய சேலையில் தன்னால் சுமக்க கூடிய சில உடைகள் , சில பொருட்களை போட்டு கட்டிக்கொண்டு கொண்டு பக்கத்தில் ஓட்டை பாயில் பசியால் சுருட்டு போய் படுத்து இருக்கும் இரண்டு மகள்களையும் பார்த்தாள் தங்கம்மா . மூத்தவள் 21வயது , இரண்டாவது 13 வயது , . இரண்டு நாளாக வெறும் பச்சை தண்ணீரை குடித்து குடித்து இப்ப தண்ணீரை குடிக்கவே வாந்தியாக வந்து கொண்டு இருந்தது. பசி உயிரை வாட்டி எடுத்தது , பிச்சை எடுக்க தன்மானம் இடம் கொடுக்கவில்லை. அந்த கிராமத்தில் மரியாதையை உடன் வாழந்த குடும்பம் என்ற பெயர் எடுத்தவர்கள் , ஆனால் எல்லாமே ஒரு நாள் வாழ்வை புரட்டி போட்டது . கணவர் கடைகளுக்கு கணக்கெழுதி கொண்டு வரும் பணத்தில் மரியாதையோடு சிவனே என்று நிம்மதியாக வாழ்ந்தவர்கள் . மகன் சேது சொல்லாமல் கொள்ளாமல் பள்ளியில் இருந்து ஓடிப்போனான் , அனுப்பி வைத்த புத்தகங்களுக்கு இடையே ஒரு துண்டு கடுதாசி. “ நாட்டுக்காக போராட போராளி ஆகிறேன். அன்று உடைந்து போனார் சேதுவின் தந்தை, ஆனாலும் மனைவி , மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் கருதி , உயிர் இருந்தும் இல்லாத மாதிரி போனார், பலன் வேலையை ஒழுங்காக செய்ய முடியவில்லை, அதனால் வேலையில் இருந்து நீக்கப்...
இடுகைகள்
டிசம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது