இப்படியும் மனிதர்கள்
நாங்கள் நல்லவர்கள் , நல்ல மாதிரி என்று காட்டிக்கொள்ளவே மனிதர்களுக்கு பிடிக்கும், அதுவே யதார்த்தமாக கொள்ள படுகிறது. நான் ஆஸ்திரேலியா சென்ற போது, என் அக்காவை பார்க்க Sevem hill station, வரை சென்று, அதில் இருந்து சிறிது தூரத்தில் தான் அக்கா வீடு. என் பிரியமான பாசமான அக்காவை பார்த்து விட்டு திரும்பி ரயில் நிலையத்துக்கு வந்து கொண்டு இருந்தோம். ஒரு 60 வயது மதிக்க தக்கவர் கொஞ்சம் கறுப்பு, (கறுப்பு இனத்தை சேர்ந்தவர் அல்ல ) இலங்கை அல்லது இந்தியாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும். அதுசரி எந்த நாடாக இருந்தால் என்ன, அவரும் எங்களை பார்த்தார். நாங்களும் அவரை பார்த்தோம். அதில் என் கவனிப்பும் அதில் இருந்தது. அந்நேரம், கண் பார்வை இழந்த 14 வயது மதிக்க தக்க சிறுமி, white cane உடன் இன்னொரு பெண்ணின் உதவியோடு ரயிலை நோக்கி படிகளில் இறங்கி ஓடி வந்து கொண்டு இருந்தாள் .அவர்கள் வரவும் ரயில் வரவும் சரியாக இருந்தது. அவளை கூட்டி வந்த பெண் சிறுமி ரயில் ஏற வைத்து விட்டு திரும்பி போய்க்கொண்டு இருந்தாள் . எல்லோரும் ஏறிக்கொண்டோம் . எல்லோரும் என்றால் அந்த சிறுமி, அந்த 60 வயது மதிக்க தக்க மனிதர் , நான் என் கணவர்....