இடுகைகள்

டிசம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
உற்சாகமான வார்த்தைகள் கஷ்டத்தில் இருக்கும் ஒருவரால் அவ்வளவு எளிதில் ஜீரணித்து விட முடிவது இல்லை, மனசு கஷ்டத்தையும் கவலையை நோக்கியே நீர் பள்ளத்தை நோக்கி ஓடுவது போல மனமும் ஓடும், அந்த மனதை இழுத்து பிடித்து ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வர படாத பாடு வேண்டி இருக்கும். என்ன கஷ்டப்பட்டு உற்சாகப்படுத்திக் கொண்டு வர யாரோ ஒருவர் வந்து தேவையில்லாமல் ஒன்றை சொல்லி சாண் ஏற முழம் சறுக்கிய கதையாக முடிகிறது பலநேரத்தில். வேண்டும் என்று எந்த வார்த்தைகளையும் யாரும் அநேகமானவர்கள் சொல்வதில்லை , என்ன வார்த்தைகளை கையாள , எங்கே எதை பேசுவது என்று தெரியாத , மற்றும் வார்த்தைகளின் பாதிப்பு ஒருவரை எந்த அளவு காயப்படுத்தும் , வீழ்த்தும் என்று புரியாமை கூட காரணமாக இருக்கலாம். அதனால் எப்பவும் இழப்புகள், கஷ்டங்கள் , துன்பங்கள் ஏன் யாரோடும் எப்பவும் பேசும் போது அவர்களுக்கு எதிர்மறை சிந்தனையான எண்ணங்கள் வராத மாதிரி நல்ல வார்த்தைகளை , எண்ணங்களை பேச கற்றுக்கொள்ள வேண்டும். எங்கள் பேச்சு எண்ணம் அடுத்தவரை எப்படி பாதிக்கும் என்பதை எண்ணி பார்க்க தெரியாவிட்டால் கூட, காயப்படுத்தாமல் இருக்க பழகிக் கொள்ள வேண்டும். நாம் ஒருவருக்கு நல்ல...

கரடிபொம்மை

படம்
வேக நெடுசாலையில் இரவு பன்னிரண்டு மணிக்கு வாகனத்தில் தனியாக டிரைவ் பண்ணிக்கொண்டு இருந்தாள் மாயா , மஞ்சள் நிறத்தில் பாப் பண்ணிய , எரிபொருள் குறைவு குறியை பார்த்த போது நடுங்கி போனாள் , இன்னும் ஒரு 15 km ஓடலாம் , ஆனாலும் அதற்கிடையில் எரிபொருள் நிரப்பியே ஆக வேண்டும் என்பதற்காக , நெடுசாலையில் இருந்து வெளியே வந்து எரிபொருள் நிரப்ப இடம் தேடிய போது அந்த இடத்தில் ஒரு கரடிபொம்மை ஒன்று குடையை பிடித்தவாறு மழைக்கு ஒதுங்கி நின்று கொண்டு நிற்பது தெரிந்தது, பக்கத்தில் பழைய உடுப்புகளை போடும் cloth bank . யாரோ இதையும் போடுவதற்கு கொண்டு வந்து இருக்க வேண்டும் அந்த உடைகள் போடும் உண்டியலில் இதை போட முடியாமல் வெளியே வைத்து விட்டு போய் இருக்க வேண்டும். முதலில் எரிபொருளை நிரப்புவோம், என்று பார்த்த போது அந்த மஞ்சள் நிறம் மறைந்து காஸ் அதாவது எரிபொருள் அரை டேங்க்கு மேலேயே இருந்தது, ஒரு கணம் குழம்பி போனாள் மாயா. அது எப்படி அப்போது எரிபொருள் பற்றாது என்று காட்டியது இப்போ, அப்போ என் பார்வையில் எதாவது கோளாறா எதுவாக இருந்தால் என்ன வந்தது வந்தோம் என்று கேஸை நிரப்பிக்கொண்டு மீண்டும் வெளியேற நினைத்த போது கரடி பொம்மை இவள...