கரடிபொம்மை

வேக நெடுசாலையில் இரவு பன்னிரண்டு மணிக்கு வாகனத்தில் தனியாக டிரைவ் பண்ணிக்கொண்டு இருந்தாள் மாயா , மஞ்சள் நிறத்தில் பாப் பண்ணிய , எரிபொருள் குறைவு குறியை பார்த்த போது நடுங்கி போனாள் , இன்னும் ஒரு 15 km ஓடலாம் , ஆனாலும் அதற்கிடையில் எரிபொருள் நிரப்பியே ஆக வேண்டும் என்பதற்காக , நெடுசாலையில் இருந்து வெளியே வந்து எரிபொருள் நிரப்ப இடம் தேடிய போது அந்த இடத்தில் ஒரு கரடிபொம்மை ஒன்று குடையை பிடித்தவாறு மழைக்கு ஒதுங்கி நின்று கொண்டு நிற்பது தெரிந்தது, பக்கத்தில் பழைய உடுப்புகளை போடும் cloth bank . யாரோ இதையும் போடுவதற்கு கொண்டு வந்து இருக்க வேண்டும் அந்த உடைகள் போடும் உண்டியலில் இதை போட முடியாமல் வெளியே வைத்து விட்டு போய் இருக்க வேண்டும். முதலில் எரிபொருளை நிரப்புவோம், என்று பார்த்த போது அந்த மஞ்சள் நிறம் மறைந்து காஸ் அதாவது எரிபொருள் அரை டேங்க்கு மேலேயே இருந்தது, ஒரு கணம் குழம்பி போனாள் மாயா. அது எப்படி அப்போது எரிபொருள் பற்றாது என்று காட்டியது இப்போ, அப்போ என் பார்வையில் எதாவது கோளாறா எதுவாக இருந்தால் என்ன வந்தது வந்தோம் என்று கேஸை நிரப்பிக்கொண்டு மீண்டும் வெளியேற நினைத்த போது கரடி பொம்மை இவளையே பார்த்து கொண்டு இருப்பது போல தோன்றியது. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் எந்த சனசந்தடியும் இல்லை, காரை திருப்பாமல் அங்கேயே நிறுத்தி விட்டு இறங்கி போய் அந்த பொம்மையை தொட்டு பார்த்தாள் . அது ஒன்றும் குளிர்ந்ததாக தெரியவில்லை, அந்த மழையில் நின்றுகொண்டு இருந்தாலும் , இதமாகவே இருந்தது. மீண்டும் காரில் ஏற என்று அவள் திரும்பிய போது அவளது முடியை யாரோ பிடித்தது போல தோன்ற திருப்பி பார்த்தாள் மாயா. குடையில் இருந்த கம்பியில் முடி சிக்குப்பட்டு இருந்தது.
ஏனோ இனம்புரியாத உணர்வு, அந்த பொம்மையை இங்கேயே விட்டு தனியாக போக மனது ஒப்பவில்லை, இது டொனேஷன் க்கு வைத்தது தான் என்றாலும்,இதை யாரும் எடுக்கலாம், எடுத்துக்கொண்டு போகலாம், அவளிடம் அப்படியொன்றும் வசதி குறைவு இருக்கவில்லை தான், ஆனாலும் இனம்புரியாத ஈர்ப்பு ஒன்று , ஏதோ ஒன்று மனதில் உந்தியது இந்த பொம்மையை கொண்டு போக என்று , மீண்டும் இறங்கி போய் கரடி பொம்மையை தூக்கி வந்து முன் சீட்டில் தன் பக்கத்தில் இருக்க வைத்தாள் .
குடையை மடித்து வெளியில் cloth bank machine பக்கத்தில் வைத்து விட்டு , காரை ஸ்டார்ட் செய்து வீட்டை நோக்கி புறப்பட்டாள்.
ரோட்டை பார்த்து கொண்டு ஓடியவள் பார்வை மெதுவாக பக்கத்தில் இருந்த கரடி பொம்மை மீது திரும்பியது. கரடி பொம்மை ரோட்டை பார்த்தவாறு இருந்தது. மீண்டும் பாதை மீது கவனத்தை செலுத்தியவள் , யாரோ தன்னை உற்று பார்ப்பது போல உணர திரும்பி கரடி பொம்மையை பார்த்தாள். எந்த அசுமாத்தமும் இல்லை. எதோ காரின் உள்ளே இன்னும் யாரோ ஒருவர் தன்னை பார்த்துக்கொண்டு இருப்பது போலவே தோன்ற பின் இருக்கையை திரும்பி பார்த்து யாருமில்லை என்று உறுதி படுத்திக்கொண்டாள் மாயா.
வீட்டை அடைந்ததும், காரின் கதவை திறந்து கரடி பொம்மையை ஒரு கையிலும் ஒரு கையில் கைப்பையை கொண்டு கார் கதவை பூட்டிக்கொண்டு வீட்டுக்கு சென்றவள் வீட்டின் சாவியை எடுத்து இருட்டில் சாவித்துளையை பார்த்து சாவியை துளைக்க விளைந்த போது கதவு திறந்து கொண்டது. ஒரு கணம் பயந்து போனாள் மாயா. என்ன நான் திறந்தேனா கதவை இல்லை தானாக திறந்து கொண்டதா என்று புரியாமலே நிற்க உள்ளே “என்ன அக்கா இவ்வளவு லேட்டா போச்சு “ என்றபடி லியா சிரித்துக்கொண்டு நின்றாள் மாயாவின் தங்கை.
“ஓமடி மீட்டிங் முடிஞ்சு, பார்ட்டி, எல்லாம் முடிஞ்சு வர,இடையில் காஸ் வேற இல்லை. போய் அடிச்சு இங்கே பார் இந்த கரடி பொம்மை, “ என்று அதன் கதையை சொல்லி முடித்தாள் மாயா.
சரி குழந்தை தூங்கி விட்டது தானே, நான் குளித்து விட்டு படுகிறேன், தேங்க்ஸ் டி என்றபடி வாஷ்ரூம் உள்ளே நுழைந்தாள் மாயா. தன்னை பிரெஸுப் பண்ணிக்கொண்டு கரடி பொம்மையை வந்து தூக்கியவள் இந்த பொம்மையை எங்கே வைப்பது என்று இடம் தேடி படுக்கையறையில் ஒரு மூலையில் கொண்டு போய் நிறுத்தி வைத்தாள் . தூங்கி கொண்டு இருந்த குழந்தையை பார்த்துக்கொண்டு இருந்தவள் சிறிது நேரம் , தானும் போய் படுக்கையில் விழுந்தாள் .
அப்படியே களைப்பால் அசந்து தூங்கி போனாள் . குழந்தை கத்த முடியாமல் வீறிட்டு கத்தியது, யாரோ குழந்தையின் கழுத்தை நெறிப்பது போல தோன்ற, வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தாள் மூன்றே வயதான மகள் சிணுங்கிக்கொண்டு இருந்தாள் , மெதுவாக அவளை தட்டி கொடுத்துக்கொண்டு, இருந்தவள் எண்ணம் எங்கோ ஓடிக்கொண்டு இருந்தது. அது எப்படி என்ன கனவு, இப்படி கொடூரமாக என்று , திரும்பி பார்த்தாள் மூலையில் கரடி பொம்மை.
மீண்டும் படுக்கையில் வந்து படுத்தவள், தூங்கி போனாள் . யாரோ மெதுவாக நடந்து போவது போல ஒரு சத்தம், கண்ணை மூடிய வாறே உற்று கவனித்து கேட்டால் , நிச்சயமாக யாரோ அறையினுள் நடப்பது போல இருந்தது , தங்கையை கூப்பிடலாமா என்று எண்ணினாலும் அவளை வீணாக எதிலும் மாட்டி விட கூடாது என்று உள் மனது சொல்ல, அந்த காலடி சத்தம் மிக அருகில் கேட்க இன்னும் கொஞ்சம் கண்களை இறுக்கி மூடிக்கொண்டு தலைமாட்டில் இருந்த , போனை தடவினால் , கையில் அகப்பட்டது, அதை அழுத்த கொஞ்சம் வெளிச்சம் பரவியது, மெதுவாக திரும்பி கரடி பொம்மையை பார்த்தால், அது இருந்த இடத்திலேயே இருந்தது. எந்த சத்தமும் நினைத்தது போல இல்லை, எல்லாம் வெறும் பிரமை தான் என்று முடிவு செய்து கொண்டு தூங்கி போனாள் .
விடிய எழும்பியவள் கரடி பொம்மை எப்படி இருக்கிறது என்று அருகில் போய் பார்த்தாள் , பொம்மை கொஞ்சம் தள்ளி இருந்தது , பொம்மை நடக்குமா என்ன என்று யோசித்துக்கொண்டே திரும்பியவள் பார்வையில் பக்கத்தில் கிடந்த அவள் மணிபர்ச் , பொம்மையின் அடி பாதத்தில் ஒட்டிக்கொண்டு இது எப்படி சாத்தியம், “ஓ இரவு காவிக்கொண்டு வரும் போது கைப்பை கூட இருந்ததே அத்தோடு சேர்ந்து தவறுதலாக விட்டு இருப்பேன், என்று நினைத்தபடி பொம்மையை தூக்கி அடிப்பாகத்தை பார்த்த போது , மற்றொமொரு மெல்லிய பர்ஸ் , திறந்து பார்த்தவள் அதிர்ந்து போனால் பதினைந்து நூறு டாலர் தாள்கள், அத்துடன் வீட்டின் முகவரி எழுதப்பட்ட ஒரு அட்டை பர்சில் இருந்தது.
“ ஓ இந்த கரடி பொம்மையை வைக்க வந்த போது தவற விட்டு இருக்கலாம் , அதுதான் முகவரி இருக்கே , போகும் போது இந்த பர்ஸை கொண்டு போய் கொடுத்து விடலாம் “என்று எண்ணிக்கொண்டு , அவசரம் அவசரமாக வீட்டு வேலை, குழந்தை , என்று எல்லா கடமைகளையும் முடித்துக்கொண்டு மறக்காமல் அந்த பர்ஸை கொண்டு கிளம்பிய போது கரடி பொம்மை, அவளையே பார்த்துக்கொண்டு இருப்பது போல இருக்க, அதை கவனிக்காமல் காரில் ஏறினாள் மாயா. ஒரு பதினைந்து நிமிட ஓட்டத்தின் பின் காரை நிறுத்தி விட்டு இறங்கி போய் 2900 இலக்கத்தை சரி பார்த்துக்கொண்டு கதவு திறக்கப்பதற்கான பட்டனை அழுத்தினால் , கதவு திறந்தது அங்கே …...


கதவு மெதுவாக கதவு திறந்து கொண்டது, உள்ளே யாரும் இருப்பது போல தெரியவில்லை.ஆனால் அங்கே நிலத்தில் இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தான் , அவள் கணவன் வசந்த் . அப்படியே விறைத்து போய் நின்றாள், வாய் விட்டு கத்த சத்தம் வரவே இல்லை .
இவன் எங்கே இங்கே எப்படி? மெதுவாக சென்று நாடியை பிடித்து பல்ஸ் இருக்கா என்று பார்த்தால் , சுத்தமாக எதுவுமே இல்லை.உடம்பு சிலிற்று இருந்தது.
வெளியூருக்கு வேலையை விஷயமாக சென்றவன் எப்படி , இந்த வீட்டுக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு, என்ன செய்வது தோன்றாமல் அது தன் கணவன் தானா என்று ஊர்ஜிதம் செய்ய பயத்துடன் சற்று கீழே குனிந்து பார்த்தாள் , ஆம் வசந்தே தான் , அவளால் நம்ப முடியாமல் இருந்தது. அவனை கொலை செய்ய என்ன மோட்டிவ் , அப்படி அவளுக்கு தெரிய யாருமே பகைவர் என்று இல்லை, மிக நட்பானவன். யாருடனும்
இனிமையாக
பழக கூடியவன். அவளை பொறுத்தவரை மிக அன்பான நல்ல கணவன்.
தன் கைப்பையை திறந்து போனை எடுத்தாள் , அவள் கரங்கள் நடுங்கி கொண்டு இருந்தது, கண்களில் அவளையும் மீறி கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது . போலீஸ்க்கு போன் பண்ண வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டு போனை பார்த்த போது பக்கத்தில் ஒரு சின்ன கழுத்து சங்கிலி கீழே கிடந்தது, அதை தூக்கி பார்த்தவள் அப்படியே அதிர்ந்து போனாள் , அவளுக்கு மிக பரிச்சயமான சங்கிலி, இதை இவளே தான் போய் ஆர்டர் கொடுத்து தங்கை லியாவின் பிறந்த நாளுக்கு பரிசாக கொடுத்து இருந்தாள் . அப்படி என்றால் லியா தான் தன் கணவன் வஸந்தை கொன்றாளா , லியா எதுக்கு வஸந்தை கொல்ல வேண்டும் , குழம்பி போய் , வேதனை, பயம், எல்லாம் ஒன்று சேர அழுதாள் .
பக்கத்தில் கிடந்த கத்தி , இறந்து போய் கிடந்த வசந்த் , இந்த சங்கிலி , கொலையின் போது நடந்த இழுபறியில் சங்கிலி அறுந்து விழுந்து இருக்க வேண்டும். அவசரம் அவசரமாக அந்த சங்கிலியை கை பையில் போட்டு கொண்டு அவசர போலீசை அழைத்தாள் மாயா.
Image may contain: tree and outdoor

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்