இந்த கோவிட் வந்ததது தான் வந்தது பலரின் சுயரூபத்தை வெளிக் கொணர்ந்து விட்டது. எல்லோருக்கும் தொழில் என்று ஒன்று இருக்கும், கடமை என்று இருக்கும். ஒன்றரை வருடங்களின் முன் சம்பளத்துக்காக பயந்து வேலை செய்தார்கள். நடித்தார்கள் . ஆனால் இந்த கோவிட் வந்தாலும் வந்தது எல்லோரும், மிக எளிதாக வேலையை அடுத்தவர் தலையில் கட்டுவதும், பொறுப்புகளில் இருந்து விலகி கொள்ள ஒரு காரணியாக உபயோகிக்கிறார்கள், இந்த covid -19 ஒரு காரணியாக்கி தப்பிக்க செய்கிறார்கள் . வங்கிக்கு போனால் வாசலில் வைத்தே துரத்தி விடுகிறார்கள். மிஞ்சி போனால் கணணியை பழகி விடுகிறோம் வராதீர்கள் என்கிறார்கள். யாரை கேட்டாலும் பொறுப்பான பதில்கள் வருவத்தில்லை, யாரை என்றாலும் கை காட்டி விட்டு நகர்ந்து விடுகிறார்கள்.கடமை, அவர்களின் செயற்பாட்டை மறந்து விடுகிறார்கள். கிரெடிட் காடுகள், வசதிக்கான கார்டுகள் எதுவாக இருந்தாலும் அதற்கான பொறுப்பான பதில்கள் வருவதில்லை. தென்று தெட்டான பதில்கள், சம்பந்தப்பட்டவர்கள் வருவதில்லை அதனால் வேலைகள் தேங்கி கிடக்கின்றன . கேட்டால் ஆட்கள் வேலைக்கு வருவதில்லை. யாருமே வேலைகளை விரும்பி செய்வது இல்லை . அதனால் , நடப்பது என்ன இருந்...
இடுகைகள்
மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
"நான் வேலையை விட போகிறேன்" என்று ஒரு தீடீரென முடிவு எடுத்து அதை கணவரிடம் சொன்ன போது , வேலையை விட்டுட்டு என்ன செய்ய உத்தேசம் என்றார், மிக சாதாரணமாக .அங்கே ஆச்சரியம் இல்லாமல் கேள்வி விழுந்தது எனக்கு ஆச்சரியமாக, இருந்தது. " நான் ஆசை பட்டதை செய்ய போறேன், வேலைக்கு போய் காசு உழைச்சது போதும் , இனி எனக்கு பிடிச்சதுகள் செய்ய போறேன், " என்றேன். "ஓ அப்ப இவ்வளவு நாளும் பிடிக்காததை செய்தது போல , ஒரு பார்வை பார்த்தார். "நான் கதை எழுத போறேன் , புத்தகம், ஆசை தீர வாசிக்க போறேன், இடைக்கிடை, தன்னார்வ வேலைகள், யோகா, உடற்பயிற்சி. நான் என் லிஸ்டை எடுத்து விட்டேன். " ஓ கதை, எதை பற்றி " என்றார். "தெரியாது , இனிமேல் தான் யோசிக்க போறேன் , தனியாக ஒரு ரூமில் இருந்து பேப்பர், பேனாவுடன் இருந்தால் கற்பனை வரும் "என்றேன், அவர் பேசாமல் போய் விட்டார். பிரம்ம முகூர்த்தத்தில் , விளக்கு ஏற்றி சாமி கும்பிடுவது மிக நல்லது , எப்பவும் வேலைக்கு போகும் போது அதிகாலை வழிபாடு செய்து பழகி விட்டது. அதிகாலை 3.30 மணி மாடியில் இருந்து இறங்கி போய் கொண்டு இருந்தேன். ஒரு மோட்டார் சைக்கிள் ஒ...