இந்த கோவிட் வந்ததது தான் வந்தது பலரின் சுயரூபத்தை வெளிக் கொணர்ந்து விட்டது. எல்லோருக்கும் தொழில் என்று ஒன்று இருக்கும், கடமை என்று இருக்கும். ஒன்றரை வருடங்களின் முன் சம்பளத்துக்காக பயந்து வேலை செய்தார்கள். நடித்தார்கள் . ஆனால் இந்த கோவிட் வந்தாலும் வந்தது எல்லோரும், மிக எளிதாக வேலையை அடுத்தவர் தலையில் கட்டுவதும், பொறுப்புகளில் இருந்து விலகி கொள்ள ஒரு காரணியாக உபயோகிக்கிறார்கள், இந்த covid -19 ஒரு காரணியாக்கி தப்பிக்க செய்கிறார்கள் .
வங்கிக்கு போனால் வாசலில் வைத்தே துரத்தி விடுகிறார்கள். மிஞ்சி போனால் கணணியை பழகி விடுகிறோம் வராதீர்கள் என்கிறார்கள்.
யாரை கேட்டாலும் பொறுப்பான பதில்கள் வருவத்தில்லை, யாரை என்றாலும் கை காட்டி விட்டு நகர்ந்து விடுகிறார்கள்.கடமை, அவர்களின் செயற்பாட்டை மறந்து விடுகிறார்கள்.
கிரெடிட் காடுகள், வசதிக்கான கார்டுகள் எதுவாக இருந்தாலும் அதற்கான பொறுப்பான பதில்கள் வருவதில்லை. தென்று தெட்டான பதில்கள், சம்பந்தப்பட்டவர்கள் வருவதில்லை அதனால் வேலைகள் தேங்கி கிடக்கின்றன . கேட்டால் ஆட்கள் வேலைக்கு வருவதில்லை. யாருமே வேலைகளை விரும்பி செய்வது இல்லை . அதனால் , நடப்பது என்ன இருந்து போனை நொடிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த போன் பலரின் வேலை திறனை மழுங்கடித்து, அர்த்தமற்ற டிக் , டாக் , வாட்ஸ் அப், இன்ஸ்டரா என்று யூ டுயிப் என்றும் போனில் நேரத்தை கழிக்கின்றனர். மூளைகள் மக்கி பிடித்து போகிறது.
ஆனால் கடமையை செய்வதற்கு யாரும் முனைவது இல்லை, பாதிபேர் வீட்டில் இருந்து வேலை என்று பெயர். கனடாவில் மற்றுமொரு இலவச கொடுப்பனவுகள் வசதிகள் உண்டு. அவற்றை அரசாங்கத்தை ஏமாற்றி எப்படி எல்லாம் எடுக்கலாம், என்று அரிய கண்டுபிடிப்புக்களை கண்டு பிடித்து வேலைக்கு போகாமல் சுகமாக வாழ வழி செய்க்கொள்கின்றனர். வேலைக்கு அதிகாலையில் எழுப்பி பரபரத்து கொண்டு போவோர் எல்லாம் முட்டாள்களாக பார்க்க படுகின்றனர், கணிக்க படுகின்றனர்.
சமீபத்தில் ஒருவருக்கு, ரத்த பரிசோதனைக்காக lab க்கு போய் இருந்தார். வரவேற்பில் இருந்த பெண் , நீங்கள் தொலைபேசியில் அழைத்து பதிய வேண்டும், பரவாயில்லை, தனக்கு முன்னால் இருக்கும் மேஜையில் இருப்பவர்களிடம் போய் பதிய கேட்டுக்கொண்டார். இவரும் அங்கு போனால் மூன்று பேர் இருந்து ஊர் புதினம் பேசிக்கொண்டு இருந்தவர்கள் சம்பந்தப்பட்டவரிடம், ரத்த சோதனைக்கு பதிய மறுத்து வீட்டில் இருந்து , போனில் அழைத்து பதிய சொல்லி இருக்கிறார்கள். இவருக்கு சரியான கோபம். இவர் வேலையில் இருந்து சில மணி நேர லீவு எடுத்துக்கொண்டு போய் இருந்தார். வீட்டில் இருந்த அழைத்த போது அவர்கள் எந்த அப்பொய்ன்ட்மென்ட் வேண்டும், என்று கேட்டு இருக்கிறார்கள். இன்றும் இருக்கு வர முடியுமா என்று. அந்த நபர் அங்கே இருந்து வீட்டில் இருந்து அழைக்க இந்த பதில். எவ்வளவு அக்கறையாக தொழிலை செய்கிறார்கள்.
நாம் மற்றவர்களின் வேலையை செய்ய தேவை இல்லை. எங்கள் கடமையை எடுக்கும் சம்பளத்துக்கு பொறுப்பாக வேலை செய்தாலே போதுமானது. எங்களை நாங்களே போனை நோண்டிக்கொண்டு இருந்து ஏமாற்றி எங்களை மழுங்கி போக பண்ண கூடாது. எங்கள் பொறுப்புகளை, கஷ்டகாலத்தில் மற்றவருக்கு நகர்த்தி , இந்த சமூகத்துக்கு , செய்யும் தொழிலுக்கு பொறுப்பானவர்களாக எடுத்து காட்டாக .இனி வரும் எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக