நாங்கள் எங்காவது பிரயாணம் செய்யும் போது குறிப்பாக சில இடங்களை பார்க்கும் அப்படியே மனசு பூரிச்சு போகும், இந்த இடத்தை தான் தேடினோம் என்பது போல. சில பாடல்களை கேட்கும் தான் தோன்றும் இதுதாண்டா பாட்டு என்று, இப்படி தான் எங்களுக்கே தெரியாமல் எங்கள் ஆழ் மனதுக்குள் ஒரு விருப்பம் இருக்கும், பலநேரத்தில் எங்களுக்கு அது புரிவதே இல்லை, அப்படி அவற்றை சந்திக்கும் போது மனது தன்னையும் மீறி உணர்ச்சி வசப்படும் தருணங்கள் உண்டு. சிலரின் நட்பும் அப்படிதான் எங்களுக்கே தெரியாமல் அவர்கள் எங்கள் ஆழ் மனதில் பதிந்து விடுவார்கள், அவர்களுக்கு ஏதும் ஒன்று என்றால் எங்களையும் மீறி கண்ணீர் எட்டி பார்க்கும் சந்தர்ப்பங்கள் உண்டு. எம் எண்ணங்களுக்கு அப்பால் எதோ ஒன்று எங்களை வசீகரிக்கிறது என்றால் அது எம் கட்டுப்பாட்டில் இல்லை என்பேன். எனக்கும் இந்த விடயத்தில் அப்படித்தான் நினைக்கிறேன் . ஒரு வாசகியாக நான் என்ன விரும்புகிறேன் என்று பல தடவை நான் கேட்டுக்கொள்வது உண்டு. சிலவற்றை அப்படி வாசித்து இருக்கிறேன், இருந்தாலும் தாகம் தீர்ந்தபாடு இல்லை. இது தான் என்று தேர்ந்தெடுத்து வாசிக்க ஒரு நோக்கம் இருக்க வேண்டும். என்னை எந்த வாசி...
இடுகைகள்
மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
நேசிப்பு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நேசிப்பது என்பது முடிவாகிய பின்னர், என்ன என்பது கேள்வியே அல்ல. அது ஒவ்வொன்றும் ஒவ்வொருவர் விருப்பம், குடும்பத்தை, குழந்தைகளை, நட்பை, காதலை, கடவுளை, இயற்கையை, உயிர்களை , நற்பணிகளை இப்படி நிறைய இருக்கிறது நேசிப்புக்கான வழிகள் . இந்த நேசிப்புகள் மனிதருக்கு ஆத்ம திருப்தியை தருவதாக இருக்க வேண்டும் மாறாக அது எங்களுக்கு மனயழுத்தை கொடுப்பதாக இருக்க கூடாது.ஒவ்வொருவரின் எல்லையும் எண்ணங்களும் அதன் சூழலுக்கு ஏற்ப மாறுபடுகிறது அல்லது வேறுபடுகிறது என்பதே உண்மை. அந்த பெண்ணின் பெயர் டோனா , நான் முதன்முதலில் அந்த பெண்மணியை சந்தித்தது, நமது சுற்றாடல் ஒன்று கூடலில். எனது பக்கத்து வீட்டில் தான் அவ இருக்கிறா, சில வருடங்களுக்கு முன் வந்த போது அறிமுகம் செய்து கொண்டோம். அவர் மனநல ஆலோசகராக பணிபுரிகிறார். அவர் பேசிக்கொண்டு இருந்த போது , அவரின் தொழிலை சொன்னதும் நான் கொஞ்சம் excited ஆகி விட்டேன். எனக்கு அதை பற்றி அறிய , தெரிந்து கொள்ள, ஆர்வம் நிறையவே இருந்தது உண்மை. ஆனால் பேசிக்கொண்டு போன போது , தனக்கு தெரிந்த ஒரு நண்பர் 40 வயது , நீச்சல் குளத்தில் விழுந்து அடிபட்டதால் இப்போ அவர் நிரந்தர படுக்கையில் என்று ச...