நாங்கள் எங்காவது பிரயாணம் செய்யும் போது குறிப்பாக சில இடங்களை பார்க்கும் அப்படியே மனசு பூரிச்சு போகும், இந்த இடத்தை தான் தேடினோம் என்பது போல. சில பாடல்களை கேட்கும் தான் தோன்றும் இதுதாண்டா பாட்டு என்று, இப்படி தான் எங்களுக்கே தெரியாமல் எங்கள் ஆழ் மனதுக்குள் ஒரு விருப்பம் இருக்கும், பலநேரத்தில் எங்களுக்கு அது புரிவதே இல்லை, அப்படி அவற்றை சந்திக்கும் போது மனது தன்னையும் மீறி உணர்ச்சி வசப்படும் தருணங்கள் உண்டு. சிலரின் நட்பும் அப்படிதான் எங்களுக்கே தெரியாமல் அவர்கள் எங்கள் ஆழ் மனதில் பதிந்து விடுவார்கள், அவர்களுக்கு ஏதும் ஒன்று என்றால் எங்களையும் மீறி கண்ணீர் எட்டி பார்க்கும் சந்தர்ப்பங்கள் உண்டு. எம் எண்ணங்களுக்கு அப்பால் எதோ ஒன்று எங்களை வசீகரிக்கிறது என்றால் அது எம் கட்டுப்பாட்டில் இல்லை என்பேன். எனக்கும் இந்த விடயத்தில் அப்படித்தான் நினைக்கிறேன் .
ஒரு வாசகியாக நான் என்ன விரும்புகிறேன் என்று பல தடவை நான் கேட்டுக்கொள்வது உண்டு. சிலவற்றை அப்படி வாசித்து இருக்கிறேன், இருந்தாலும் தாகம் தீர்ந்தபாடு இல்லை. இது தான் என்று தேர்ந்தெடுத்து வாசிக்க ஒரு நோக்கம் இருக்க வேண்டும். என்னை எந்த வாசிப்பு திருப்தி படுத்தும், என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் என்ன வாசிக்க எனக்கு பிடிக்கும் என்று எல்லாவற்றை வாசித்து தேடிக்கொண்டு இருக்கும் அடியேன் பலநேரத்தில், களனி பானைக்குள் கை விட்ட கதையாக நான் , வாசிக்கிறேன் ஆனால் அவை எனக்குள் திருப்தி தந்ததா என்றால் இல்லை என்றே சொல்வேன், எதையோ தேடுகிறேன் என்பது எனக்கு தெரிகிறது , அது ஆன்மாவோடு இணைந்து உணர்வோடு கலந்து , உயிரை கவருவதாக இருக்க வேண்டும், அதை வெறித்தனமாக , இரவு பகல் பாராமல் தூக்கம் மறந்து , உணவு , வேலைகள் , எல்லாம் மறந்து வாசிக்கும் வாசகியாக மனதை தொட வேண்டும்.
வாசிக்க வேண்டும் என்று மனம் சொல்கிறது . ஆனால் அது கதை , இலக்கிய என்பதை எல்லாம் தாண்டி, மனம் எதையோ தேடுகிறது.ஆனால் பார்த்ததும் இது தான் தேடியது என்று சொல்லும் அளவுக்கு அந்த புத்தகம் என் கைக்கு எட்டவில்லை, கண்ணுக்கு கிட்டவில்லை, தேடல் தான் வாழ்க்கை மறுக்கவில்லை. ஆனால் என்னவென்று தெரிய்மால, ஒரு தேடல் எனக்குள்ளே அது பைத்தியக்கார தனமாக கூட இருக்கலாம் ஆனால், என் தேடலில் இருக்கும் அந்த புத்தகம் என்னவென்று தெரியவில்லை, பைத்தியக்கார தனமாக எல்லா எழுத்தாளர்கள் எழுத்தையும் தான் மேய்கிறேன். என் உயிரை கலந்து , ஆன்மாவை தொடும் அந்த வாசிப்புக்குரியது என்ன என்பது தான் எனக்கு கேள்வி.
கருத்துகள்
கருத்துரையிடுக