இடுகைகள்

ஜூலை, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
கொழுப்பில் நாங்கள் சிறுவர்களாக இருந்த போது , மஹாபாகே என்ற இடத்தில் ஒரு வாடகை வீட்டில் இருந்தோம். அந்த வீட்டின் சொந்த காரருக்கு ஒரு மகன், ஒரு மகள் , மகன் திருமணம் செய்து நாங்கள் இருந்த முன் வீட்டில் மனைவி மகளுடன் இருந்தார், அவரின் மகள் பெயர் விசாகா அவள் கூட தான் நாங்கள் விளையாடுவோம், அதோடு நந்தி வீட்டுக்கு போய் கரம் , கிரிக்கெட் , கிட்டி என்று விளையாடுவோம். எங்கள் வீட்டு சொந்தக்காரனின் மகளை நந்தி என்று தான் கூப்பிடுவேன், அது சிங்களத்தில் மாமி என்று பொருள் படும், என் கூட நந்தியின் அண்ணா மகள் நெருங்கிய தோழி . அதனால் அவள் அழைப்பது போல நாங்களும் நந்தி என்று அழைத்து பழகி விட்டது. நந்தி கொஞ்சம் குட்டையான, நிறம் குறைந்தவர் , கல்யாண வயதை கொஞ்சம் தாண்டியவர், பேசி வரும் சம்பந்தங்கள் எல்லாம் அவரை பார்ப்பது குறைவு, அவர் பெயரில் இருக்கும் சொத்தில் தான் கண். கண்ணுக்கு லட்சணமாக நந்தி இருக்கவில்லை, ஆனால் பழகுவதற்கு மிகவும் இனியவர். அன்பானவர், பண்பானவர். நாங்கள் நந்தி உடன் நெருங்கி பழகியதால் எங்களுக்கும் அவ நெருங்கிய உறவாகி போய் விட்டார். நாங்கள் கரம் விளையாடும் போது எங்களிடம் தன் எண்ணத்தை பகிர்ந்து ...
ஒவ்வொருவரும் நினைத்து கொள்கிறார்கள், நாங்கள் டீசென்ட்ணானவர்கள் , மற்றவர்கள் டீசென்ட் இல்லை, நாங்கள் வசதியானவர்கள், அவர்களுக்கு வசதியில்லை, எங்களுக்கு சொந்த வீடு இருக்கிறது, அவர்கள் வாடகை வீட்டில் இருக்கிறார்கள். நாங்கள் படித்தவர்கள், அவர்கள் படிக்காதவர்கள், நாங்கள் நாகரீகம் உள்ளவர்கள் அவர்கள் நாகரீகமற்றவர்கள். இப்படி பல பல எண்ணங்கள், அந்த எண்ணங்கள் அந்தஸ்த்து என்று வந்து விடுகிறது. அப்படி எதுவுமே இல்லை போல தான் இருக்கிறது, நீங்கள் என்னோடு நல்ல மாதிரி பழகினால் நானும் அதற்கு எற்றா போல மாறுகிறேன் மாறுகிறோம். ஆனால் உண்மையில் நாங்கள் யார் , எங்களுக்குரிய உண்மையான இயல்பு என்ன, பழக்கம் என்ன ? யோசித்து பார்த்தால் நாங்கள் எதுவுமே இல்லை, அப்படி இருப்பதாக எண்ணிக்கொண்டு இருக்கிறோம் எல்லாம் போலியாக. அப்படி ஒரு இமேஜ் அதை மெயின்டெய்ன் பண்ணிக்கொள்கிறோம். அதை காப்பாற்ற நடிக்கிறோம். நாங்கள் நாங்களாக எப்போது எங்கே இருக்கிறோம். தர லோக்கல் போல எப்படி எங்கே பிழங்குகிறோம். யாரும் யாருமே இல்லை. எல்லோருமே இல்லாத ஒன்று இருப்பது போல எண்ணி கொண்டு வாழ்கிறோம் நடிக்கிறோம். எங்களை விட மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்று ந...