இடுகைகள்

ஜூன், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
அவள் பெயர் கண்ணு , அவளை நான் சந்தித்தது கொழும்பில், வெள்ளவத்தையில் தான். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வருவோருக்கு எல்லாம் குட்டி யாழ்ப்பாணம் வெள்ளவத்தை தான் காரணம் மொழிப் பிரச்சனை இல்லாமல் ஓரளவு சமாளிக்க கூடிய இடம் என்றால் இந்த பகுதி என்றால் மிகையாகாது.  ஏனைய இடங்களில் சிங்களம் அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். எனக்கு எந்த மொழி தடங்கல் இல்லாத போதும் ஒரு தற்காலிக பாதுகாப்புணர்வு தந்தது இந்த வெள்ளவத்தை. நான் குடியிருந்த வீட்டு உரிமையாளர் ஒரு தமிழர். மிகவும் உதவி மனப்பான்மை மிக்கவர்.  அவருக்கு வயது வந்த பெண் குழந்தைகள் இருப்பதால் எந்த ஆண்களுக்கும் வாடகைக்கு கொடுப்பதில்லை என்பது கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் என அங்கு உள்ளவர் மத்தியில் ஒரு நம்பிக்கை. அங்கே தான் கண்ணு ஒரு முப்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க, அவள் பத்து வயது மகன் கண்ணன். பெயருக்கேற்ற கண்ணன் குழப்படி செய்வதில். கண்ணு அப்படி ஒன்றும் அழகி கிடையாது.எப்போதும் முகத்தில் ஒரு கடுகடுப்பு, அழகு என்று சொல்ல தன்னை அலங்கரித்து கொண்டதில்லை.சிக்கல் நிறைந்த கூந்தலை அள்ளி முடித்தபடி, எப்போதும் கண்ணன் உடன் மல்லுக்கட்டி...
படம்
நான் யாழில் பிறந்திருந்தாலும் , வளர்ந்தது என்னவோ கொழும்பில் தான்.அதனால் எல்லா பள்ளி விடுமுறைகளுக்கு தவறாமல் ஊருக்கு அதாவது யாழ்ப்பாணத்துக்கு போய் விடுவோம். அதுவும் ரயிலில் தான் போவோம் யாழ்தேவி , உத்தரதேவி போன்ற ரயில்களில். அப்போது அறியாத பருவம், எம்மை தாண்டி ஓடும் மரங்களை எண்ணிக்கொண்டு இருப்பேன். பனை மரங்கள் வரத் தொடங்கியது யாழ்ப்பாணத்தை நெருங்கி விட்டோம் என்று நினைத்து அம்மா அப்பாவிடம் ஊருக்கு கிட்டே வந்து விட்டோம் தானே என்று கேட்டேன்.அப்பா அடுத்தது எந்த எந்த ரயில் நிலையங்கள் என்று சொன்னதும் எண்ணிக் கொண்டு இருப்பேன் யாழ்ப்பாணம் வரும் வரை . பனை மரங்கள் என்றால் யாழ்ப்பாணம் என்று தான் மனதில் பதிந்து இருந்தது. ஆனால் வளர்ந்து குறிப்பாக, அந்த பெரிய கலவரத்தின் பின் பல தடவை யாழ்-கொழும்பு போய் வந்து இருக்கிறேன். முன்னர் போன மனநிலைக்கும் பின்னர் போன மனநிலைக்கும் பாரிய வித்தியாசம். ஆனால் மனதில் வேறு மாதிரியான ஒரு பயத்துடன் தான். குறிப்பாக அனுராதபுரம் புகையிரத நிலையம் என்றால் எனக்கு அப்படி ஒரு பயம் என்னுள்ளேயே. அதை நான் வெளி காட்டிக் கொண்டது இல்லை .அந்த ரயில் நிலையத்தில் தான் ஒரு கலவரத்தின் போத...