கஞ்சி
அந்த காலத்தில் ரைஸ் குக்கர் எல்லாம் வரவில்லை. குத்தரிச்சியை உலையில் போட்டு கஞ்சி வடித்து சமையல் செய்வது தான் வழக்கம் . கஞ்சி வடிக்க அம்மா எங்களை விடுவதில்லை. கையில் கஞ்சியை ஊற்றிக் கொள்வோம் என்ற பயம், எங்களை விட அம்மாவுக்கு தான் அதிகம். குத்ததரிச்சி கஞ்சி மிக சத்தானது என்று அம்மா சொல்லுவா உப்பு போட்டு தேங்காய் பால் விட்டு குடிக்கலாம் என்று , ஆனால் அதில் இருக்கும் அந்த கசப்பு ஏனோ எனக்கு பிடிப்பது இல்லை. அம்மா உலை வைத்து , 11 காலை மணிக்கு கஞ்சி வடித்து விடுவா. ஊரில் கொஞ்ச காலமாக மாவிடிக்க மல்லிகா அக்கா தான் வருவா , கிழமைக்கு ஒருக்கா அல்லது இரண்டு கிழமைக்கு ஒருக்கா. வரும் போது தன் இரண்டு வயது குழந்தையும் தூக்கி வந்து முன்னுக்கு ஒரு பலகையை போட்டு இருத்தி வைப்பா மல்லிகா அக்கா. அந்த குழந்தையும் சமத்தா அம்மா பேச்சு கேட்டு இருந்த படியே விளையாடும். மல்லிகா அக்கா சமீபத்தில் தான் வீட்டுக்கு மாவிடிக்க வருகிறார். அவர் திருமணம் செய்து கணவரோடு கிளிநொச்சியில் வசித்து வந்து இருக்கிறா. சமீபத்தில் தான் கணவரோடு எதோ பிரச்சனையில் கணவர் அடிக்க குழந்தையையும் தூக்கிக் கொண்டு தாய் வீடு வந்து இ...