Quarantined
பாட்டி அந்த கால மனுசி, ரொம்பவே கெடுபிடியாக தான், சொன்னதை கேட்கணும் இல்லை , கெட்ட கோபம் வந்திடும். கலாவின் அம்மா கூட இருந்த பாட்டி , மகளின் மறைவுக்கு பின்னர் பேத்தி கலா கூட வந்து விட்டா .கலாவின் அம்மா பாட்டியின் ஒரே மகள் என்பதால் மகள் மீது அளவு கடந்த பிரியம், அந்த மாதிரி பேத்தி கலாவின் மீதும் அவள் அண்ணன் தீலிப் மீதும் , பாட்டி அளவில்லாமல் அன்பை வைத்திருந்தாள்.
கலா கல்யாணம் செய்து கணவர் , இரண்டு குழந்தைகள் உடன் இந்த வீட்டில் வசிக்கிறாள். இரண்டு மாடி வீடு.அவர்கள் அங்கே குடி வந்து சில வருடங்கள் தான், கலாவின் கணவர் இந்த வீட்டை குறிப்பாக வாங்க காரணமே தன் பிள்ளைகளின் படிப்புக்காக தான். கலா இரண்டு பெண் குழந்தைகளையும் பள்ளிக்கு கொண்டு போய் விட்டு ஏறி இறக்குவது தான் வேலை, வீட்டு சமையல், வீட்டை சுத்தப்படுத்துவது என்று பொழுது போய்விடும் அவளுக்கு .
கீழ் வீட்டு போர்ஷன் ஒரு இளம் தம்பதியர் வாடகைக்கு இருந்தனர். இவர்கள் முன் கதவு வழியாக போக வேண்டும் மற்றுப்படி எல்லாம் அவர்கள் தனியாக தான் இருந்தார்கள். இருவரும் மென்பொருள் துறையில் , சாப்ட்வேர் பொறியியலாளர்களாக வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் ஊருக்கு போனவர்கள், அப்படியே இந்த covid பிரச்சனையோடு அங்கே சிக்கி கொண்டார்கள்.
பாட்டிக்கு தன் உயிர் மீது அளவிலா பிரியம் எல்லோருக்கும் பிரியம் தான், இவாவுக்கு கொஞ்சம் அதிகம். வயது 90 . கலாவோ , கணவன் வசந்தோ வெளியே போய் வந்தால், கை கால் அலம்பி குளித்து தான் தன்னை பார்க்க வரவேண்டும்.அவ்வளவு கெடுபிடி. கோவிட் வந்ததால் இத்தனை பயம். கலாவும் , குழந்தைகள், கணவர் வெளியே போக கூடாது என்பது பாட்டியின் கடுமையான உத்தரவு. கலாவும் இயன்றவரை வெளியே அனாவசியமாக குழந்தைகளுடன் போகாமல் இருந்தாலும் , சில உணவு பொருட்களை வாங்க போகவே வேண்டி இருந்தது.பாட்டி அப்படியே 24 மணிநேர வீடியோ survillance , ஷட்டர் லைட் , கேமரா போல, கண்கொத்தி பாம்பாக கவனித்து கொண்டு இருப்பா.
அன்று தீடீர்யென்று இந்தியாவில் இருந்து பாரதி கால் பண்ணி இருந்தாள் .நானும் கணவரும் வருகிற வாரம் கனடா வருகிறோம் கலா , என்று சொல்லவும், " வா வா தனியாக இருந்து போரடிச்சு போச்சு, சீக்கிரம் வந்து சேர், எத்தனையோ விஷயம் இருக்கு பேச, கலா கலகல என் பேசிக்கொண்டு போனால், சரி நேரில் வா, என்று பேச்சை முடித்து கொண்டு திரும்பினாள். பாட்டியம்மா கலாவை பார்த்து கொண்டு நின்றாள் . "ம்கூம் , என்ன பாரதி வாறாளா, அவளும் புருசனும் வந்ததும் கடகட என உள்ளே இழுத்து வந்துடாதே, அது என்ன qurarantine னோ என்னமோ 20 நாள் இந்த பக்கமே, அடி எடுத்து வைக்க கூடாது, வயசான ஒருத்தி இருக்கிறேன் தெரியுமோ " பாட்டி பொரிந்து தள்ளினாள்.
"அதெல்லாம் தெரியும் பாட்டியம்மா , 14 நாள் தானே அந்த குரண்டினே, அது என்ன 6 நாளை கூடி வைச்சு 20 ஆக்கி இருக்கிறீங்க " சிரித்துக்கொண்டே கேட்டாள் கலா . " எதுக்கு 6 நாள் கூடவா இருந்தா குறைஞ்சா போய்டுவாள் , பாட்டி கடுகடுப்பாக பேசினாள் .
சொன்னாப்போல பாரதி அடுத்த வாரம் கணவனுடன் வந்தவள், மேலேயே வரவில்லை, தன் வீட்டில் கணவனுடன் இருந்தாள். அப்பப்ப போனில் மட்டுமே பேசினாள் , தேவை என்றால் ஏதும் வாங்கி வாசலில் வந்து வைத்தாள் கலா. பாட்டியம்மா கண்கொத்தி பாம்பு போல கவனித்து கொண்டு இருந்தாள் பேத்தி கலாவை .
அன்று அப்படித்தான் குழந்தைகள் அழுது அடம் பிடித்து கொண்டு இருந்தார்கள். வீட்டில் இருந்து போரடிக்குது வெளியே கூட்டி போக சொல்லி ."பாட்டியம்மா குழந்தைகளை, பார்க் வரை கூட்டி போய் வருகிறேன் , அங்கே இங்கே ஓடி திரியாமல் இருந்து டீவியை பாருங்க பாட்டியம்மா , சீக்கிரமாக வந்து விடுவேன், என்ற படி குழந்தைகளை கூட்டிக்கொண்டு, கதவை பூட்டிக்கொண்டு போனாள் கலா.
டிவி பார்க்கலாம் என்று போன பாட்டியம்மா , கண்ணாடியை, சாப்பாட்டு மேஜையில் மறந்து வைத்து விட்டு வந்தது ஞாபகம் வர , கண்ணாடியை எடுத்துக்கொண்டு திரும்பிய பாட்டியம்மாவுக்கு கிறுதி வந்து அப்படியே சுவரை பிடித்துக்கொள்ள திரும்பிய போது மேஜையில் இருந்த கிளாஸ் கை தட்டு பட்டு நிலத்தில் விழுந்து உடைந்தது சத்தத்துடன்.
இந்த சத்தம் தெளிவாக பாரதி காதிலும் தெளிவாக விழுந்தது, ஆபத்துக்கு பாவமில்லை என்று ஓடி வந்து விழாமல் பாட்டியை தாங்கிக்கொண்டாள்.ஜாக்கிரதையாக. பாட்டியை அப்புறப்படுத்தி , கண்ணாடி துண்டுகள் காலில் குத்தாமல் கூட்டி துப்பரவு செய்து , பாட்டியை கட்டிலில் கூட்டி வந்து படுக்க வைக்க முதல் சனிட்டிஸிர் கையில் கொடுத்து , பூசி துடைத்து கொள்ள சொல்லி விட்டு , மன்னிச்சு கொள்ளுங்கோ பாட்டியம்மா " என்றபடி பாரதி போய் விட்டாள் .
குழந்தைகளுடன் பார்க்கில் இருந்து வந்த கலா கையில் வாங்கி வந்த பழங்களை மேசை மீது வைத்தாள். வந்திட்டேன் பாட்டியம்மா என்ற கலாவை , முதலில் இந்த பழங்களில் கொஞ்சத்தை கொண்டு போய் பாரதிக்கு கொடுத்து விட்டு வா " என்ற பாட்டியம்மாவை ஆச்சரியமாக பார்த்தாள் கலா."இது என்ன புதுசா இருக்கு" என்ற கலாவுக்கு எந்த பதிலும் சொல்லாமல் மௌனமாக இருந்தாள் பாட்டியம்மா . யாரை எப்போது தேவைப்படும் என்று தெரியாது. எல்லோரிடமும் நல்லபடி நடப்பது எப்பவும் நல்லது.
கருத்துகள்
கருத்துரையிடுக