காதல்
நானும் வெளிநாட்டுக்கு வருவதற்காக கொழும்பில் , வெள்ளவத்தையில் 37th ஒழுங்கையில் வாடைக்கு இருந்தேன் . நான் இருந்த வீட்டின் மேல்மாடியில் ஒரு தாயும் மகளும் ஒரு அறையில் வாடைக்கு இருந்தார்கள் . தாய் சற்று மனநலம் குன்றிய மாதிரி கதைப்பார் . பார்த்தால் தெரியாது . மகள் பெயர்
மேகலா . மிகவும் நல்ல பெண், தாயுடன் கனடா செலவதட்காக தங்கி இருந்தார்கள் . அவர்களது சகோதரின் ச்போன்செர் சரி வரும் வரை . நாங்கள் ஒரே வீட்டில் இருந்ததால் எங்களுக்குள் நல்ல நட்பு ஒன்று உருவாகி இருந்தது. தினசரி நாங்கள் காலை எட்டு மணிக்கு வெளிக்கிட்டு அருகில் உள்ள சர்ச்க்கு போய்விட்டு , வரும் போது மரக்கறிகள் , சமையலுக்கு தேவையான பொருட்கள் வாங்கி வருவோம் . இது வாடிக்கையாக இருந்து .
மேகலாவுக்கும் அவரது தாயாருக்கும் கனடாவுக்கு போக வேண்டிய ஒழுங்குகள் ஒரளவுக்கு சரி வந்து கொண்டு இருந்த நிலையில் , மருத்துவ பரிசோதனைக்கு போக வேண்டி வந்ததது . அதற்கு டாக்டர் திருமதி . நவரத்தினமிடம் போக வேண்டி இருந்தது . மேகலாவுக்கு ஒரே பயம் ,அங்கு போனால்
டாக்டர் கேட்பா “கனடாவுக்கு போய் என்னத்தை கிழிக்க போறாய் ?உனக்கு இங்கிலிஷும் தெரியாது , பிறகு உனக்கு என்ன கேட்டுக்கு கனடா ? என்று கண்ட மாதிரி திட்டுவது சகஜம் . இந்த மெடிக்கல் செக் அப் வந்த நாளில் இருந்து ஏதோ “மெடிக்கல் காலேஜ் எக்ஸாம் எழத போவது போல ஒரே பரபரப்பு, டென்ஷன், உடன் மேகலா உலவிக்கொண்டும் புலம்பிக் கொண்டும் இருந்தா . அப்போதைக்கு எனக்கு தோன்றியது ஒரு யோசனை “மேகலா இந்த டாக்டர் இடம் போகாமல் வேறு ஒருவரிடம் போனால் என்ன“ என்று கேட்டேன். “போகலாம் அக்கா ஆனால் எனக்கு பாசை தெரியாதே என்றார். “ அதுக்கென்ன எனக்கு சிங்களம் தெரியும் நான் கூட்டி போறேன் என்று சொல்லி கூட்டிப் போய் , மெடிக்கல் பரிசோதனைக்கு ஆசிரி ஹோபிடல்லுகு போய் , வேலையை இலகுவாக நடந்து ஏறியது .
மேகலாவின் அம்மாவுக்கு அடிக்கடி கோவம், சந்தேகம் வரும் . வந்தால் வாய்க்கு வந்த மாதிரி திட்டி தீர்த்து விடுவா . சிலநேரம் திட்டும் போது பார்த்தால் உண்மையில் சுகயீனம் எங்களுக்கோ என்ற ஐயமே வந்திடும் . “உன்னை படுகையில் வெட்டிப்போட்டு சிங்களவன் வெட்டிட்டான் என்று சொல்லுவேன் “என்று மேகலாவின் தாயார் சொல்லும் போது பல தடவை அந்த சந்தேகம் எனக்கே வரும் . மகள் ஆசை பட்டு ஒரு உடுப்பு வாங்குவதற்கு கேட்டால் கூட நூறு விசாரணை , அது எவ்வளவுக்கு காலம் பாவிக்கும் என்று வார்ரன்ட்டி கொடுக்க வேண்டும், என்று அடம் பிடிப்பா . நல்லதே வாங்குவேன் என்று என்னில் என்று ஏதோ நம்பிக்கை, ஆனால் அது அவவின் எண்ணம் அதுவே தவிர அது உண்மை இல்லை.
வழமைப் போல காலை சர்ச்க்கு போய்டு வீடு திரும்பிக்கொண்டு இருக்கையில் தீடீர்யென மேகலா “அக்கா அந்த பக்கம் போவோம் “என்று என் பதிலுக்கும் காத்திராமல் ரோட்டை ஓடிக் கடந்தார் .
நானும் விசர் நாய் துரத்த ஓடுவது போல காரணமே தெரியாமல் மேகலா பின்னால் ஓடினேன் . “ஏன் மேகலா என்ன பிரச்னை “என்று கையை பிடித்துக் கொண்டு கேட்டேன் . “ஒன்றும் இல்லை அக்கா “என்றபடி வேகமாக நடந்தாள் மேகலா . எனக்கு ஒன்றும் புரியவில்லை . ஒன்றும் இல்லாத ஒன்றுக்கா இந்த ஒலிபிக் ஓட்டம் ஒன்றுமே புரியவில்லை. அடுத்த நாள் வழமைப் போலவே சர்சுக்கு போய் வந்த போது அதே அவசரம் மேகலாவிடம் . என் CID மூசா மூளை வேலை செய்ய தொடங்கியது . “சொல்லு யாரடி அவன் “ என்றேன் . “யாரக்கா “என்றாள் மேகலா கொஞ்சம் கலவரமாக . “அதுதான் நீ பயந்து ஓடி வந்தியே யாரோ ஒருத்தனை பார்த்து , என்ன லவ்வா ?என்றேன் . மேகலாவின் முகத்தில் ஒரு மகிழ்ச்சியின் மின்னல் தோன்றி மறைந்து ஒரு கலவரம் படர்ந்தது. இந்த காதல் போல பைத்தியகார தனமான விளையாட்டு ஏதும் இல்லை .இருமலும் காதலும் மறைக்க முடியாது என்பது உண்மைதான் . “ஓம் அக்கா இப்ப கொஞ்ச நாளா தான் அக்கா, அம்மாவிட்டை சொல்லி போடாதேங்கோ “என்றாள் மேகலா . “யாரவன் “என்றேன் . “கொஞ்சம் தயக்கமாகவே கிட்டடியில் தான்” என்றாள் . “யாரவன் அந்த Jaffna foods காரனா “என்றேன் .”அக்கா “அவள் கொஞ்சம் சத்தமாகவே கத்தி விட்டாள் . “சத்தம் போடாதே , நீ சொல்ல தேவையில்லை, உன் அம்மா இப்பவே உன்னை கத்தியால் வெட்டி கொண்டுடுவா “. “அக்கா உங்களுக்கு எப்படி தெரியும் அவர் தான் என்று” மேகலா ஆர்வமாக கேட்டாள் . “இது உலக மகா அதிசயம் , கண்டு பிடிக்க , இதில் இருக்கிறது இரண்டு சிங்கள கடை , அவங்களுக்கு காதலிக்க நேரம் இல்லை , Sea bird , அந்த இடத்துக்கு போறது குறைவு . மற்றது இந்த jaffna பூட்ஸ் என்று வேனில் சாமான் வைத்துக்கொண்டு இருப்பவன் . அவனை பார்த்தாலே பொறுக்கி என்று எழுதி ஒட்டி இருக்கு நெற்றியில், அவனும் அவன் பார்வையும் . அவன் நல்லவன் இல்லை மேகலா “ என்றேன் . இந்த காதலிக்கும் கூட்டத்துக்கு புத்தி சொல்லவே கூடாது இருந்தும் மனசு கேட்காமல் சொன்னேன். “அது சரி உன் அண்ணன் கனடாவில் இருப்பது தெரியுமா” என்றேன் . “ஓம்”அக்கா என்றாள் . நீ வடிவாக மாட்டிவிட்டாய் “ஆனால் அவன் நல்லவன் இல்லை என்று அறுத்து உருத்து சொன்னேன் , அத்தோடு அந்த கதையை நான் கதைக்கவில்லை .
இரண்டு வாரங்கள் சென்று இருக்கும் . மேகலாவுக்கும் , அம்மாவுக்கும் கனடியன் விசா வந்து சேர்ந்தது.
அப்பத்தான் மேகலா பதறியடிச்சுக்கொண்டு வந்தா . “அக்கா ஒரு பெரிய பிரச்னை . எனக்கு கனடா போறதில் , அவன் மோகன் , என்னை ரெஜிஸ்டர் பண்ணிபோட்டு போகடாம் , அதை செய்யாவிட்டால் போக விட மாட்டானாம்.அது ஏலாது . அண்ணைக்கு தெரியாமல் செய்ய ஏலாது , அண்ணையிடம் கதைத்து சம்மதம் கேட்கிறன் என்றால் , முடியாது என்று கொஞ்சம் மிரட்டுகிறார் .எனக்கு பயமாக இருக்கு அக்கா இப்ப என்ன செய்ய “? “இப்ப என்ன செய்யிறது அவனை கட்டிக்கொண்டு நல்லா இரு . அம்மா கனடா போகட்டும் . “ என்றேன் சாதாரணமாக, ஆளை நோட்டம் பார்க்க , “இல்லை அக்கா அப்பா இல்லாமல் எங்களுக்காக இண்டைக்கு வரைக்கும் அண்ணன் கஷ்ட படுகிறார் அவர் அனுமதி இல்லாமல் நான் செய்ய மாட்டன், அது மட்டும் இல்லை அக்கா நான் எழுதிய ஒரு கடிதம் அவன் கையில் இருக்கு . அதை அவன் இந்த வீட்டு அங்கிள் (நாங்கள் இருக்கும் வீட்டு சொந்தக்காரர் )எல்லாருக்கும் போட்டோ காப்பி அனுப்புவனாம்” தீர்க்கமாக மேகலா சொல்ல , அப்ப “நல்லதா போச்சு நானும் இந்த லவ் லெட்டெர் படிச்சு கனகாலம் , எனக்கும் ஒரு காபி என்ற போது” அவளுக்கு வந்தே கோவம். “அக்கா உதவி செய்வீங்களா மாட்டீர்களா “? என்றாள் உறுதியாக .
“சரி என் மாமா வெள்ளவத்தை போலீஸ் ஸ்டேஷன்லில் தான் இன்ஸ்பெக்டர்யாக இருக்கிறார் மேகலா ” என்றேன் .”நீங்கள் இதுவரை சொல்லவே இல்லை அக்கா” மேகலா சந்தோசமாக சொன்னாள் “இருந்தால் தானே சொல்ல என்று மனதுக்குள் நினைத்துகொண்டு , மாமாவுக்கு பிடிகாது தன் பெயரை தேவை இல்லாமல் பாவிப்பது , அது தான் சொல்லவில்லை”என்றேன் ஒரு முழு பொய்யை . முதல்வன் படத்து ஒரு நாள் பிரதமர் மாதிரி என் அம்மாவுக்கு இல்லாத ஒரு சகோதரை ஒரு நாள் தத்து எடுத்தேன் . எனக்கும் அம்மாவுக்கு ஒரு சகோதரம் சகோதரி இருந்தால் ஒரு சித்தி , பெரியம்மா, மாமா இருந்து இருப்பார்கள்” என்று ஒரு அற்ப ஆசை, பரவாயில்லை ஒரு மாமாவை யூஸ் பண்ணுவோம் . “மேகலா உன் ஆளிடம் போய் சொல்லு , கடிதம் காபி போடும் போது கொஞ்சம் அதிகமாக போடச் சொல்லி, அங்கிள்கு மட்டும் இல்லை போலீஸ்க்கு ஸ்டேஷன்கும் சில கோபி கொடுக்கலாம், அத்தோடு எனக்கும் என்று . மேகலா பயந்துகொண்டே போனாள். இல்லாத மாமா இருப்பதாக நம்பிக்கொண்டு. நானும் காத்திருந்தேன் மேகலவுகளாக , அடுத்த நாள் காலை மேகலா தானே தனிய சர்ச்க்கு போய்டு வரும்போது “என்ன சொன்னாய் “என்றேன் மேகலாயிடம் .“நீங்கள் சொன்னதை அப்படியே சொன்னேன் “ அவர் முகம் கறுத்து போயிடுது , இது சரி வராது அக்கா , என்னை பிளாக் மெயில் பண்ணி செய்ய முடியாது. என்ற மேகாலவை “முகத்தில் கருக்க என்ன இருக்குது , அவனும் முகம் முடியும் ஒரு மாதிரி தான் “என்று ஆத்திரமாக சொன்னேன் .“ நீ வீட்டில் படு எதுக்கும் நான் போலீஸ் ஸ்டேஷன் நில் படுப்பது தான் நல்லது” என்று ரூம்க்கு போய்விட்டேன் . உள்ளே ஒரே பயம் , சும்மா மாமா மசான் என்று எடுத்து விட்டேனே ஒழிய , ஒருதரையும் உருப்படியாக தெரியாது , எல்லாம் சும்மா பீலா . ஆனால் அடுத்த நாள் , மேகலா உள்ள கடவுளை எல்லாம் கோன்புஸ் பண்ணி விட்டு , அந்த மோகனை போய் சந்தித்தாள் . சந்தித்து விட்டு மேகலா ஓடி வந்தாள் “அக்கா அக்கா பாமா அக்கா “என்னையே ஏலம் போட்டாள் . அவளைவிட அதிகமாக நான் பயந்து போனேன். “என்னடி” என்றேன் “இதோ லெட்டரை தந்திட்டான், நான் நினைக்கவே இல்லை” மிக சந்தோசமாக வந்தாள் மேகலா . இப்போதும் சந்தோசமாகவும் மேகலா கனடாவில் இருக்கிறாள் .“கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் “ இந்த பாடல் கேட்கும் போது இந்த சம்பவம் தான் ஞாபகம் வரும் .
கருத்துகள்
கருத்துரையிடுக