காதலுக்கு கண்ணுண்டு
அவள் தியா நான் வேலை செய்யும் அந்த சாப்ட்வேர் கொம்பனியில் வந்து சேர்ந்த போது நானும் மகிழ்ந்து தான் போனேன்.அவளை பள்ளி பருவத்தில் இருந்தே தெரியும். மிகவும் துறு துறு என்று மகிழ்ச்சியான பெண். வாய் ஓயாமல் பேசுவாள், பேசா விட்டால் செத்தே போவாள் ,அந்த ரகம்.மிகவும் கலகலப்பான பெண் இருக்கும் இடத்தில் எல்லோரையும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டாட கூடியவள்.அவளை நான், அதுவும் இங்கு என் வேலை இடத்தில் சந்திப்பேன் என்று சற்றும் எதிர் பார்க்கவில்லை.
தியா என் டீமில் தான் வேலை செய்தாள், எதையும் வேகமாக, கிரகித்து கற்றுக்கொண்டு விடுவாள், நட்பாக எல்லோர் உடனும் பழகும் சுபாவம் அவளுக்கு. அந்த சுபாவம் தான் வம்பை கூட விலைக்கு வாங்கிக் கொண்டு வந்து நிற்பாள்.
எங்கள் ப்ராஜெக்ட் மானேஜர் ஒரு இளைஞர் .சரியான சிடுமூஞ்சி. யாரோடும் பேசவே மாட்டாது.தான் உண்டு தன் வேலை உண்டு. டெக்கனிகல் லீட் ஹாண்ட்யாக நான் வேலை செய்து கொண்டு இருந்தேன், அவள் சாப்ட்வேர் டெவலப்பர் ,. எங்கள் சிடுமூஞ்சி ப்ராஜெக்ட் மேனேஜர் பேசவே ரொம்பவே பஞ்சி படுவான், மிஞ்சி போனால் டீம் லீடர்ஸ் உடன் தான் நாலு வார்த்தை எண்ணினால் போல பேசுவான், அவன் பார்வையில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். கடுவன் பூனை போல பார்க்கும் பார்வையில், திரும்பி அவன் பக்கம் பார்க்கவே பார்க்க பயப்படுவார்கள். என்ன கறுப்பாக இருந்தாலும் களையான முகம்.அவன் பெயர் ஸ்ரீராம், வேலையில் அக்கறையும் ஆர்வமும் கொண்டவன், என்ன யாரிடமும் தேவையில்லாமல் பேசுவது இல்லை என்பதை தவிர எந்த குறையும் இல்லை. கொஞ்சம் மீறி போய் கொஞ்சம் குசலம் விசாரிக்க முற்பட்டவர்கள் முக்குடை படாமல் வந்ததே பெரிய விடயம் என்பார்கள்.
வேலைக்கு வந்து சில மாதங்களில், தியா கண்ணுக்குள் விழுந்தார் ப்ராஜெக்ட் மேனேஜர் ஸ்ரீராம். “என்ன அக்கா, இந்த கடுவன் பூனை சிரிக்க மாட்டாதோ “?என்று தியா ஒரு நாள் கேட்ட போது அடக்க முடியாமல் சிரித்து விட்டேன். “ உனக்கு எதுக்கு வீண் வம்பு” என்ற போதும் , அவள் விடவே இல்லை,
“எல்லோரும் ஒரு இடத்தில் வேலை செய்கிறோம், ஒன்றாக பேசி பழக வேண்டாமா என்று தான்,” என்றாள் சாதாரணமாக.
அடுத்த நாள் தியா சொன்னதோடு நில்லாமல் வலிய போய் “குட் மார்னிங் சார் “என்ற போது , அவன் பார்வையால் என்ன என்பது போல பார்க்க , லேசாக பயம் உள்ளே எட்டி பார்க்க பொசுங்கி போகாமல் வந்து தன் இருக்கையில் வந்து அமர்ந்தாள்.”சரியான சிடு மூஞ்சி, கடப்பாரை முழுங்கி” என்று முணுமுணுத்தபடி
நான் மெதுவாக ஸ்ரீராம் இருக்கும் இடத்தை கவனித்தேன். அவன் முகத்தில் எரிச்சல் தாண்டவம் ஆடியது. கடிச்சு குதறி விடுவேன் என்பது போல .அவனின் குணமறிந்து ஆண்கள், பெண்கள் யாருமே அநாவசியமாக ஸ்ரீராம் பக்கம் போவதே இல்லை. வேலையோடு சரி , அவன் யாரோடும் சிரித்து பேசி பார்த்ததும் இல்லை, போனில் பேசும் போது பேசின் நடுவில் தன்னை மறந்து சிரிப்பான், சிரித்து விட்டு , எதோ தவறிழைத்து விட்டது போல சுற்றும் முற்றும் திரும்பி பார்ப்பான். தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று.
தியா எப்படியும் அவனோடு பேச வேண்டும் என்பதில் ஆவலாக இருந்தாள். அதற்காக தினமும் முயற்சி செய்து கொண்டே இருந்தாள் .”நீ ஸ்ரீராம் இடம் நல்ல வாங்கி கட்ட போகிறாய்” என்று நான் தியாவுக்கு சொன்ன போது “ முயற்சி திருவினையாக்கும் என்று “ போய் விட்டாள்.
அன்றும் அப்படித்தான், தியா ஒரு தேவையை உருவாக்கிக்கொண்டு, ஸ்ரீராம் மேஜை அருகே போனாள். அவன் அவளை கவனிக்கவே இல்லை. “ஸ்ரீராம் சார் இன்று நம்ம பாலுக்கு பர்த்டே “ என்றபடி , ஸ்வீட்ஸ் நீட்டினாள்.
“ அதுக்கு உனக்கென்ன வேலை இங்கே “ என்றபடி, தட்டை ஒதுக்க முயல அது கை தவறுப்பட்டு அப்படியே விழுந்தது எதிர்பாராமல். தியா கொஞ்சம் ஆடிப் போய் விட்டாள் . சில நிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றவள், அடுத்த கணம் சுதாகரித்து கொண்டு , சாரி சார், கிளீன் பண்ணி விட்டு போகிறேன், என்ற படி பதிலுக்கும் காத்திராமல் , பேப்பர் டவல் எடுத்தவள் குனிந்து நிலத்தில் விழுந்து இருந்த ஸ்வீட்ஸ்யை துடைத்தவள் , அவனின் ஷூவில் இருந்த துணிக்கையையும் மெதுவாக துடைத்த போது , இன்னும் அதிகமாக கோபப்பட்டுக் கொண்டு, என்னை தேடி வந்த ஸ்ரீராம் “இந்த வாலை அங்கே யார் வர சொன்னது யார் “என்றான் ஆத்திரமாக. நான் மௌனமாக நிற்க புறப்பட்டு போனான்.
கொஞ்சம் முகம் வாட்டமாக வந்தாள் தியா .”அக்கா வாங்க என்று என்னை லஞ்ச் ரூமுக்கு கூட்டி போனவள் , ஒரு குத்து டான்ஸ் போட்டுகொண்டு இருந்தாள் .” என்னடி இவ்வளவு கோவமாக அந்த மனுஷன் கத்தி போட்டு போகிறான், உனக்கு வெட்கமாக இல்லையா “என்றேன்.
“வெட்கம் என்ன அழுகையே வந்து விட்டது, ஆனாலும் அந்த லூசு, சூவை லேசாக கொஞ்சம் தொட்டு பார்த்தேன் , அவன் எதோ பாம்பு கடிச்ச மாதிரி துடிச்சு பதைச்சு , கதிரையில் இருந்து குதிச்சு போனான்,” சொல்லிவிட்டு மீண்டும் பக்கத்தில் இருந்த கதிரை மேலே ஏறி குட்டி டான்ஸ் போட்டாள் . இவள் புரிந்து செய்கிறாளா இல்லை புரியாமல் செய்கிறார்களா , என்று சத்தியமாக எனக்கு புரியவில்லை.
சில நாட்கள் அவள் அந்த பக்கமே போகவில்லை. அதை வேலையினூடே கவனித்து கொண்டேன். அவளை கவனிப்பதே பெரும் வேலையாக இருந்தது. அவனை கடந்து போகும் போது வேண்டும் என்று பேனாவை, கையில் கொண்டு போகும் பொருளை வேண்டும் என்றே கீழே போடுவாள் கொஞ்சம் சத்தமாக, பிறகு ஐயோ என்றபடி எடுப்பாள். ஆனால் அவன் மட்டும் திரும்பி பார்க்கவே மாட்டான்.காலை மாலை இப்படியான சேட்டைகள் செய்தாள் தியா. ஆனால் அவன் மட்டும் திரும்பி பார்த்ததே இல்லை.
“அக்கா நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், இந்த ஸ்ரீராம் உடன் பேசாமல் விட மாட்டேன்.” என்று சபதமும் செய்தாள். எப்படியோ அவன் பிறந்த நாளை தேடி பிடிக்க , பல திருட்டு தனங்கள் செய்து, இறுதியில் கண்டு பிடித்தாள் .பிடித்தது மட்டுமல்லாமல் ஒரு அழகான பிறந்தநாள் வாழ்த்து அட்டையை தயார் செய்தாள் .அந்த வாழ்த்து அட்டையை ஸ்ரீராம் மேஜையில் பிறந்தநாள் அன்று வைத்து விட்டாள் , இப்படிக்கு எனும் இடத்தில் , முடிந்தால் கண்டு பிடிடா , கெஸ் மீ .என்று வைத்து விட்டு போய் விட்டாள் .
அன்று என்று அவனும் வேலைக்கு தாமதமாகவே வந்தான். தியாவால் அவனை நேரடியாக பார்க்க கூடிய இடத்தில் அவள் இல்லை, அவள் கொஞ்சம் உள்ளே வளைவில் திரும்பி போக வேண்டும். அங்கே தான் அவளின் இருப்பிடம். “ அக்கா ,முசுறு என்ன செய்யுது என்று கவனித்து சொல்லுங்கள், என்று போய் விட்டாள் .
தன் இருப்பிடத்துக்கு வந்த ஸ்ரீராம், மேஜையில் இருந்த அட்டையை தூக்கி பார்த்தான். மெதுவாக சுற்றும் முற்றும் சுற்றி பார்த்தான் யாரும் தன்னை கவனிக்கிறார்களா என்று. எனக்கு லேசாக தெரிந்தது, அவன் கோபமாக எழுந்து எங்கோ போகிறான் என்று. சில நிமிடம் கழித்து வந்தவன் புலி போல உறுமலுடன் இருந்தான். இன்டர்கோமில் என்னை அழைத்து தியாவை வர சொன்னான்.
மிகுதி நாளை…..
இன்று தொலைந்தாள் என்று எண்ணிக்கொண்டு, தியாவை அழைத்தேன். சிரித்து கொண்டு ஓடி வந்தாள் . “ஸ்ரீராம் உன்னை வரட்டுமாம்.”என்றேன். “இதுக்கு தான் தலைப்பாடாக அடித்துக் கொண்டேன் “ என்றேன் தியாவை பார்த்து.
அவள் லேசாக சிரித்துக்கொண்டு, கண்களில் ஒரு வித மிரட்சியுடன் , நானா அவரா என்று பார்த்து விடுவோம் , என்று என்னை பார்த்து கண்ணை சிமிட்டி விட்டு அவன் அறையை நோக்கி தியா நடந்தாள்.
ஸ்ரீராம் பேச பேச, தியா வார்த்தைகளின்றி அதிர்ந்து போய் சிலை போல நின்றாள்.”ஒருத்தன் கொஞ்சம், படிச்சு, நல்லா இருந்திட கூடாதே, உடனே எப்படியாவது வளைச்சு போட்டு விட வேண்டும் , என்பதில் குறியாக அலையிறதே சில பெண்களின் வேலை, அதில் நீயும் ஒருத்தி. இது எல்லாம் ஒரு புள்ளைப்பா , அவன் பேச பேச அவள் கூனி குறுகி போனாள் .கண்ணில் கண்ணீர் பாத்தி கட்டி நின்றது.
எந்த கணமும் உடைந்து விடுவேன் என்று,அவன் பேசி முடியும் வரை மௌனம் காத்து நின்றாள் தியா .
ஸ்ரீராம் ஒரு ஆட்டம் ஆடி தீர்க்க மெதுவாக, தன் இருக்கையில் வந்து அமர்த்தவளுக்கு, உலகமே இருண்டு போனது போல இருந்தது.
அதற்கு பின் நான் தியாவை காணவே இல்லை. அவள் வேலைக்கு வரவே இல்லை. ஊருக்கு போவதாக ஒரு டெஸ்ட் மெசேஜ். அவ்வளவு தான். எனக்கு ஸ்ரீராம் மீது அளவிட முடியாத வெறுப்பு வந்து இருந்தது. அந்த பெண் அப்படி என்ன குற்றம் செய்து விட்டாள் .
காலையும் மாலையும் குதியுயர்ந்த அந்த சப்பாத்து சத்தத்துடன் அடிக்கடி பேனாவை போட்டு விட்டு,
ஐயோ பேனா, புத்தகம் என்று சொல்லும் தியா இல்லாமல் , அந்த காரியாலயம் அமைதியாக இருந்தது. ஒருவரும் வேலை தவிர ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை.
ஸ்ரீராம் லேசாக தலையை நிமிர்ந்து கண்கள் சுற்றும் முற்றும் தேடுவது தெரிந்தது , அது தியாவையாக தான் இருக்க வேண்டும் , யாரும் தன்னை கவனிக்கிறார்களா என்று , டக்கென்று தலையை குனிந்து கொண்டான்.
அவள் வரவே இல்லை. வருடங்கள் சில ஓடி விட்டன.ஸ்ரீராம் விமான நிலையத்தில் , விமானத்துக்காக காத்து , வெளி இருக்கையில் அமர்ந்து போனை நோண்டிக்கொண்டு இருந்தான். ஒரு குழந்தை கண் மூடித்தனமாக ஓடி வந்து இவன் இருக்கை மேல் சாய்ந்து விழுந்த விழுப்பில், குழந்தையை துரத்திக்கொண்டு வந்த பெண்ணின் போன் கை தவறி விழுந்தது.”Excuse me sir , என்றபடி
குழந்தையை ஒரு கையால் பிடித்தபடி, மறுபடி போனை மறுகையால் எடுத்த கொண்டு நிமிர்ந்த பெண்ணை பார்த்த போது ஸ்ரீராம் , அதிர்ந்து போனான். அது தியா .
தியா குழந்தையை தூக்கிக்கொன்டு மெதுவாக கடந்து போனாள் . ஸ்ரீராம் முதல் முறையாக மனதுடைந்து போனான். அவமானத்தால்.
“தியா “ என்றான் திருப்பி பார்த்த அவளை, “இங்கே எங்கே “என்றான்.
சும்மா காலாற நடக்க வந்தோம், என்றாள் லேசாக சிரித்தபடி
நானும் குழந்தையும் அவுஸ்திரேலியா போகிறோம். என் கணவர் அங்கு டாக்டர் யாக இருக்கிறார்.” என்றபடி நடந்தாள் . அவளிடம் எந்த சலனமும் இல்லை. இயலப்பாக சொல்லி விட்டு நடக்க எத்தனித்தாள்.
நில்லு தியா , I am sorry , நான் அப்படி நடந்து கொண்டு இருக்க கூடாது. அந்த நேரத்தில் ஏதோ கோபத்தில் , ஆனால் நீ வேலையை விட்டு போன பின்பு நீ எவ்வளவு எனது மனதை பாதித்து இருக்கிறாய் என்று புரிந்து கொண்டேன். அதற்காக இன்றுவரையில் வருத்த படுகிறேன். மறக்க முடியாமல் . அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவே இல்லை.
தியா I am sorry என்றான் மீண்டும், ஆனால் தியா எதுவுமே சொல்ல வில்லை, மன்னிக்க இல்லையா , இல்லை மன்னிக்கும் அளவுக்கு சிறிய குற்றமா , இல்லையா. தியா எதாவது பேசு என்றான் , அவள் போக போகிறாள் என்பதில் அவசர பட்டான் .
“ஒருவரை ஒருவர் தேடி வருகிறார்கள் என்றால் அர்த்தம், அவர்களின் வசதியை, படிப்பை, பதவியை நேசிக்க தான் வருகிறார்கள் என்று எல்லோரையும் அர்த்தப்படுத்திக் கொள்ள கூடாது . ஏதோ ஒரு ஈர்ப்பில், பிடிப்பில் வந்தால் , பிடிக்கவில்லை, என்றால் நாகரீகமாக விலகுவது அழகு.அதை விட்டு அசிங்க படுத்துவது, காயப்படுத்துவது அழகில்லை. “ சார் , சரி நேரமாகுது என்று குழந்தையை தூக்கிக் கொண்டு புறப்பட்டவளை ,
“குழந்தைக்கு என்ன பெயர் “ என்றான் ஸ்ரீராம்.
“கண்ணன் “
தியா நிமிர்த்து ஸ்ரீராமை பார்த்து சிரித்தாள், நிறைய தமிழ் படம் பார்ப்பீர்களோ, நிச்சயமாக உங்கள் பெயரை வைக்க மாட்டேன். பிரியமானவர்கள் பெயரை தான் குழந்தைகளுக்கு வைப்பது எப்போதும் அழைக்க.
அதுக்கும் உங்களுக்கும் தான் சம்பந்தமே இல்லையே. என்றபடி குழந்தையோடு நடந்தாள் தியா .
கருத்துகள்
கருத்துரையிடுக