முடிவு

ஒரு பழைய கிழிந்த இத்துப் போன டி ஷர்ட், டெனிம் பாண்ட் , கையில் ஒரு சின்ன பையுடன் இவர்களை கடந்து போய் கொண்டு இருந்தான் அவன். விமான நிலத்தில் இவளும் கணவனும் விடுமுறையை கழிக்க ஜப்பான் சென்று கொண்டு இருக்கிறார்கள். அதற்காக விமானத்தைதில் ஏறுவதற்க்காக  என்று தான் தங்களுக்கான தரிப்பிடத்தை நோக்கி நடந்து கொண்டு இருந்தார்கள். அவர்களை கடந்து போன அவனை கண்டதும் சேகர், மிக சகஜமாக “அந்துவன்” என்று அழைத்தான். இதை பார்த்த சேகர் மனைவி சிந்துக்கு தூக்கி வாரி போட்டது. அந்த அவனாக இருக்குமோ? இல்லை வேற யாருமாக இருக்குமோ.

அந்துவன் அவனா இவன் கொஞ்சம் உற்று கவனித்த போது ஆடி போய் விட்டாள் . அவனே தான் இவன் , எப்படி மாறி போனான் ? எப்படி இப்படி ? மிக நேர்த்தியாக சேர்ட்டுக்கு ஏற்ற டை , அதுக்கு ஏற்றாப்போல கொஞ்சம் கடும் நிறத்தில் பாண்ட் , சீராக வாறப்பட்ட கூந்தல். பார்த்தாலே திருப்பி இன்னொரு முறை பார்க்க வைக்கும் முகம். எல்லோருக்குமே அவன் கூட பேச வேண்டும் என்று ஆவலை தூண்டும்  வசீகரம். 

ஆனால் இன்று , ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போய் இருந்தான். இவனையா ஒரு காலத்தில் காதலிச்சோம், பிச்சைக்காரனை விட மோசமாக இருக்கும் இவனையா ? அதிர்ந்து போனாள் . ஆனாலும் எதுவுமே பேசாமல் கணவனுடன் நின்றுக்கொண்டு இருந்தால் சிந்து.  . திரும்பி பார்த்த அந்துவன்

“ஹாய் டாக்டர் , எப்படி இருக்கிறீங்க” என்றான் . “நான் கேட்க வேண்டிய கேள்வியை நீங்கள் கேட்டால் எப்படி” என்று அந்துவன் தோளில் தட்டி சிரித்தான் சேகர்.

செல் போன் மணி ஒலித்தது, excuseme என்ற படி சேகர் சற்று தள்ளி போனான். "எப்படி இருக்கிறாய், சிந்து’ என்றான் அந்துவன் .அவளுக்கு எதுவும் பேச பிடிக்கவில்லை. மௌனமாக நின்றாள். என்ன கேட்பது நல்லா இருக்கிறாய் என்பது தெரிகிறது. எனக்கு மிகவும் மகிழ்ச்சி சிந்து.என்னை கல்யாணம் செய்து இருந்தால் நிச்சயமாக நீ மிகவும் கஷ்டப்பட்டு இருப்பாய். என்ற போது சேகர் வந்து சேர்ந்தான்.

என்ன எல்லா மருந்துகளும் ஒழுங்காய் எடுக்கிறீர்கள் தானே, மறுபடி சேகர் அவன் தோளில் பிரியமாக தட்டினான். சிந்துவுக்கு தெரியும் சேகருக்கு யாரையும் பிடித்து விட்டால் தோளில் தட்டி தான் பேசுவான்.எல்லாம் உங்கள் புண்ணியத்தால் என்ற படி புறப்பட்டான் அந்துவன் .

"சிந்து இவர் என் பேஷண்ட் , இவன் ஒரு பெரிய கொம்பனியின் CEO , "

சேகர் சொன்னபோது மௌனமாக கேட்டுக்கொண்டு இருந்தாள் தெரியாதது போல. .

ஒருமுறை வீட்டில் ஏணியை வைத்து கூரையில் ஏறி எதோ செய்ய போனபோது விழுந்து விட்டான். அன்று அது பெரிசா ஒன்றும் செய்யவில்லை. சில நாட்களின் பின் ஏதோ பிரச்சனை என்று வந்தவனை நரம்பு சம்பந்தமானாக இருக்க என்னிடம் வந்தார் .  இவனை பரிசோதித்தல் தெரிய வந்தது இவனுக்கு ஒரு வகை மறதி . இன்று பேசியது நாளை மறந்து போகும் , அடுத்த சில நாட்களில் ஞாபகம் வரும். இந்த வருத்தத்தால்  இவனுக்கு எல்லாமே மாறிபோய்  விட்டது .இவனது வேலை போய் விட்டது.

இவன் காதலியும் விட்டு விட்டு போய் விட்டாள் . இவனிடம்  காதலி கல்யாணம் பற்றி பேச வர , நான் எங்கே உன்னை காதலித்தேன் என்று கேட்டு இருக்கிறான்.  இப்படி எத்தனை பேர் கிளம்பி இருக்கிறீங்க என்று அவன் சொன்ன ஒரு வார்த்தையை கேட்டு  கோபத்தில் போனவள் தான் திரும்பி வரவே இல்லை. இவனுக்கு ஞாபகம் வந்து அவளை தேடி போன போது அவள் தயாராக இல்லை இவனுடன் பேச , எல்லாமே ஒரு விபத்தால் திசை மாறி போய் விட்டது.


அவன் அண்ணன் கூட தான் இருக்கிறான். இப்படித்தான் எங்கேயாவது போவான் , வருவான். சேகர் மிக சாதாரணமாக சொல்லி முடிக்க ,சிந்து இடிந்து ,மனதுக்குள் நொறுங்கி போனாள். 

அன்று ஒரு நிமிடம் நின்று நிதானமாக யோசித்து இருக்கலாம். ஆனால் என்ன எங்களுக்கு பிரியமானவர்கள் எங்களை முற்றாக புரிந்து இருப்பார்கள், இருக்க வேண்டும் என்று நம்புகிறோம். ஆனால் அவர்களுக்கும் பிரச்சனை இருக்கும் என்று எண்ண தோன்றுவதே இல்லை. அவர்களை நாங்கள் புரிந்து கொண்டு விட்டோம், என்று நினைக்கிறோம் நாம் மற்றவர்களுக்கு கொடுக்கும் அவகாசத்தை கூட சிலநேரம் நாம் நேசிப்போருக்காக கொடுப்பது இல்லையா, காது கொடுத்து கேட்பது இல்லையா தெரியவில்லை. எல்லா நேரமும் எல்லோரும் சரியாக இருக்க முடியாது, அந்த தவறான ஒரு கணத்தில் நாங்கள் முடிவு சிலநேரத்தில் எடுத்து விடுகிறோம் அவசரப்பட்டு தவறாக. 







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்