நாங்கள் பலம் என்று நினைக்கும் , ஏன் சிந்திக்கும் சில விடயங்கள் தான் எம்மை பலவீனப்படுத்துகிறது, என்பதை அறிந்தது இல்லை. நாம் எதில் கூடுதலான கவனிப்பு , அக்கறை . ஆர்வம், விருப்பம், அன்பு என்று எதையெல்லாம் செலுத்துகிறோமோ, அதுவே எம்மை அடிமை படுத்தி விடுகிறது.
அன்பு எமது பலம் என்று எண்ணினால், நாம் அடிமையாக கோழையாக இது ஒன்றே போதும். வேறு புறக்காரணங்கள் ஏதும் அவசியமில்லை. எம் ஆக்கிரமிப்பு முழுதும் ஒரு புள்ளியில், குறியில் இருக்கும் போது அவற்றை சிதறவோ திசை மாற்றவோ எம் எண்ணங்கள் அனுமதிப்பது இல்லை. அப்படி ஒரு சிக்கல் உருவாகும் போது பலவீனப்படுத்த படுகிறோம்.
பிள்ளைகள் தான் பெற்றோரை பலவீனத்துக்கு முதல் காரணமே. குழந்தைகள் மீது உள்ள அளவற்ற பாசமே , பெற்றோர்கள் எந்த நிலைக்கும் இறங்கி போக தயாராகிறார்கள். அங்கே வசதி உள்ளவர்கள் இல்லாதவர்கள் என்ற பேதமே கிடையாது. வாழ்க்கையின் போராட்டமே மனிதரின் அதீத பற்று தான், அன்பு, பணம், பதவி ஏதோ ஒன்று.
எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. இலங்கையில் யுத்தம் நடந்துகொண்டு இருந்த போது , யாழ்ப்பாணத்துக்கு கொழும்புக்குமான போக்குவரத்துகள் முற்றாக துடிக்கபட்டு இருந்தது. அந்த நேரத்தில் உணவு பொருட்கள் பொதிகள் வந்த ஒரு டிரக் ஒன்றில் பதுங்கி தன் மனைவி குழந்தைகளை பார்க்க வேண்டும் வந்ததாக பத்திரிகைகளில் வாசித்தேன். அது குற்றம், ஆபத்து எல்லாம் இருக்கட்டும் எனக்கு அவர் ஹீரோவாக தான் தெரிந்தார் அப்போது , அவரது அளப்பரிய அன்பினால் , உயிரை துச்சமாக எண்ண வைத்தது , வர வைத்தது எது?
இன்று பலர் மனயுளைச்சல் காரணமாக விபரீத முடிவுகளை எடுக்கிறார்கள். எடுக்கும் போது கூட, தவறாக இருந்தாலும் அவர்கள் குழந்தைகளை தான் மிக பெரிய சொத்தாக , சொந்தமாக உயிருக்கும் மேலாக நேசிப்பதால் தான் அவர்களையும் தங்கள் விபரீதத்துக்குள் இழுத்து செல்கிறார்கள், பெற்றோராக.
அந்த ஒரு அதீத ஈடுபாடு தான் அதில் எதாவது இடர்கள் வரும் போது வலிமையுடன் போராடுகிறார்கள். அது வெற்றி பெறாது எனும் தருணத்தில், ஏற்றுக்கொள்ள முடியாத கோழைத்தனமான முடிவுகளை எடுக்கிறார்கள்.
காதலும் அந்த வகையறா தான் தீவிரமாக காதலித்து இணைய முடியாது எனும் போது , பித்து பிடித்து மனம் பேதலித்து இடையூறாக பல காரணங்கள் குறுக்கிடும் போது அவற்றை சரி செய்ய முடியாமல் , சோர்ந்து தோற்று போகும் போது , தோற்று போனதாக எண்ணுகிறார்கள் . இப்படி ஒரு இடக்கான முடிவை எடுக்க எல்லை மீறிய காதல் தான் காரணம்.
உலகில் தீர்க்க முடியாத பிரச்சனைகள் என்று எதுவும் இல்லை. எல்லாவற்றுக்கும் மாற்று வழிகள், தீர்வுகள் நிச்சயமாக உண்டு. எதுவும் நீங்கள் முயற்சி செய்யவில்லை என்றால் கூட ஏதோ ஒரு தீர்வு தானாகவே இயற்கை கொண்டு வரும். என்ன நாம் போராடி, முயற்சி செய்யும் போது கொஞ்சம் வேளைக்கு ஒரு தீர்வை காண கூடியதாக இருக்கும்.
பிரச்சனைகள் தான், போராடும் சக்தியையும், நமக்கு பிடிப்பையும் எமக்குள் ஏற்ப்படுத்தி , பலத்தையும் வெளிக்கொண்டு வருகிறது. இல்லை சக்கைமாடு போல இருபத்தில் என்ன சுவாரஸ்யம் இருக்க போகிறது.
எதையும் கடுமையாக போராடி அதற்கான பலன் பெறுகின்ற போது அது தனிப்பலம் . வாழ்க்கை சீரான பாதையில் எம் பற்றுகளோடு பயணிக்க கரடுமுரடு நிறைந்த பாதையிலும் , போராட்டங்களையும் தாண்டி தான் செல்ல வேண்டும், போராடுபவனுக்கே வாழ்க்கை. விசாலமான வாழ்வு எம்முன்னே விரித்து கிடக்கிறது , தொடர்ந்து பயணிக்க.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்