உண்மையில் யார் பணக்காரன் ? அதுதான் தெரியவில்லை. கார், வீடு, பணம், வசதிகள், கூப்பிட்ட  குரலுக்கு கையைக்கட்டி  சேவகம் செய்ய ஆட்கள்  உள்ளவர்களா ? ஒவ்வொருவரும் தமக்குள் ஒரு கணக்கை போட்டு விடுகிறார்கள். நான் பணக்காரன், நான் இது என்று . எல்லோரும் அவரவருக்கு ஏற்றாப் போல எண்ணிக் கொள்கிறார்களே தவிர , எதுவும் உண்மை இல்லை.


இங்குள்ள சூப்பர் மார்க்கெட், காஸ்கோ போன்ற இடங்களில் எல்லாம், இப்போது உணவு பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களை மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்பதை ஊக்குவிக்கிறார்கள். பலர் மாஸ்க் அணிந்து செல்கிறார்கள். சிலர் அணிந்தவது இல்லை. எதோ ஒரு காரணம் , அது எதற்காக  வேண்டுமானாலும் இருக்கட்டும்.


சமீபத்தில் காஸ்கோவில் பொருட்களை வாங்க என்று ஆறு அடி இடை வெளி விட்டு வரிசையில் நின்றேன். எனக்கு ஆறடிக்கு முன்பு ஒரு கணவனும் மனைவியும் வண்டில் உடன் நின்றார்கள் . வாசலில் காஸ்கோவில் வேலை செய்யும் ஒரு பெண்மணி நின்றபடி வரும் உணவு பொதியை தள்ளும் வண்டியை துடைப்பதற்கான சனிட்டிஸ்ர் நனைத்த தாளை, ஒவ்வொருகுக்கு கொடுக்க , இன்னொரு ஆண் கொஞ்ச தூரத்தில் நின்றபடி மாஸ்க் இன்றி வருவோருக்கு இலவசமாக மாஸ்க் கொடுத்து கொண்டு இருந்தார்.



எனக்கு முன்னுக்கு நின்ற கணவனும் மனைவியும் மாஸ்க் அணிந்து இருந்தார்கள். அவர்களை பார்க்கவே மிகவும் வசதியானவர்கள் என்பதை அவர்கள் நடையுடை பாவனை காட்டி கொடுத்தது, மிகவும் ஆடமபரமாக பெரிய பைகள் உடன், பார்ப்பதற்கு மிகவும் நாகரீகமாக  இருவரும் நின்றார்கள். தீடிர்யென அந்த பெண் தன் மாஸ்க்கை கழற்றி கைப்பையில் திணித்தார். கணவனிடம் ஏதோ சொல்ல கணவனும் தனது மாஸ்க்கை கழற்றி பாக்கெட்டில் திணித்து விட்டு , அங்கே இலவசமாக கொடுக்க படும் மாஸ்க்கை வாங்கி அணிந்து கொண்டார்கள். அதே நேரம் பலர் நம்மிடம் இருக்கு வேண்டாம் என்று , மாஸ்க்கை வாங்காமல் கடந்து போய் கொண்டு இருந்தார்கள்.


இதை பார்த்த எனக்கு ஒன்று தான் புரிந்தது, பணக்காரர் ஏழை என்பது எல்லாம் அவரவர் மனதை பொறுத்ததேயன்றி  அவர்களிடம் இருக்கும் சொத்து, வசதிகள் அல்ல. எவ்வளவு இருந்தாலும் அனுபவிக்க செலவழிக்க தெரியாதவர்கள் எல்லாம் ஏழைகளே . எதுவும் இல்லை என்றாலும் தேவைக்கு அதை உபயோக படுத்த செலவு செய்ய தெரிந்தவன் கோடீஸ்வரன் தான். 


நாம் எவ்வளவு வைத்திருக்கிறோம் என்பது அல்ல. எமது மனம் எப்படி திருப்தி படுகிறது கொண்டே 

எம் வசதிகள் தீர்மானிக்க படுகின்றன. இருப்பவன் எல்லாம் பணக்காரனுக்கு அல்ல, இல்லாதவன் எல்லாம்  ஏழையும் அல்ல. தகுந்த இடத்தில் அதை உபயோக படுத்த தெரிந்தால் அதுவே புத்திசாலி தனம் .


done

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்