அதிகாலை நான்கு மணி, அலாரம் அடிக்க, சத்தம் போடாமல் பூனை போல நடந்து வந்து எலியை அமுக்குவது போல அலாரத்தை அழுத்தி நிறுத்தினேன். நிறுத்தி விட்டு இருட்டில் மேல் மாடியில் இருந்து மெதுவாக கீழே பூனை போல இறங்கி வந்து, உடற்பயிற்சி செய்ய, அந்த flight இல் ஏறினேன். அப்படித்தான் எனக்கு தோன்றும்.
அதில் ஏறி மிதிக்க ஆரம்பித்தேன். எண்ணங்கள எங்கேயும் ஓட மறுத்தது அதிகாலை, கண்கள் தூக்கத்தை மறக்க மறந்து நிற்க முன்னால் இருந்த CCTV கேமரா வீடியோ மீது பதிந்தது. அதை பார்த்தபடி ஓடிக்கொண்டு இருந்தேன் flight லில். வெளியே ஸ்நொவ் அதாவது பனிமழை பூ போல தூறிக்கொண்டு தூவிக்கொண்டு இருக்க அவை மல்லிகை பூ போல பறந்து கொண்டு இருந்தது. அதிகாலை வேளை என்பதால் CCTV கேமரா எல்லாம் கருப்பு வெள்ளையாக காட்சியளித்துக் கொண்டு இருந்தது.
தீடீர்யென என் கண்கள் CCTV கேமரா மீது நிலை குத்தி நின்றது. ஒரு வெள்ளை உடை உடுத்தி உருவம், குடை பிடித்து கொண்டு இதுவரை எந்த கதையிலும் பேய் குடை பிடித்தது பற்றி வாசிக்கவில்லை .அந்தஉருவம் மெதுவாக வந்து எங்கள் வீட்டு கேட்டை திறந்து கொண்டு இருந்தது.
நான் என்னை மறந்து உடற்பயிற்சி செய்வதை விடுத்தது அந்த உருவத்தையே பார்த்துக் கொண்டு இருக்க , நேராக எங்கள் வீட்டு கதவுக்கு நேரே வந்து நின்றது, எனக்குள் பக் பக் என்றது.
இப்ப நான் என்ன செய்வது என்று, என் கண்கள் நான் நின்ற இடத்தை சுற்றி ஓடியது, எதாவது கையில் அகப்படுமா என்று, ஹாக்கி ஸ்டிக் தான் தெரிந்தது. மீண்டும் அந்த உருவத்தை பார்த்தேன் , அது இப்போ மெதுவாக திரும்பி போய்க் கொண்டு இருந்தது . வாசல் கதவருகில் என்ன செய்தது என்பது இந்த வீடியோவில் தெரியவில்லை. அந்த உருவம் உள் படியில் ஏறியதும் மறைந்து விட்டது.
இது பேயா, உருவமா, இல்லை மனப்பிரமையா , இல்லை திருடனா, யாராக இருந்தாலும் ஏன் திரும்பி போக வேண்டும், எதுக்காக வந்தது லேசாக மனதில் பல கேள்விகள் எழ , உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு ஹாக்கி ஸ்டிக் உடன் வந்து , அதை ஓரமாக வைத்து விட்டு குளித்து சாமி கும்பிட்டு வேலைக்கு புறப்பட்டேன், ஹாக்கி ஸ்டிக் உடன், உள்ளே பயமாக இருந்தது. வெளியே என்ன மாதிரி ஸ்நொவ் ஆசை தீர கொட்டி இருக்கு என்று எதிர் பார்த்த பார்த்தபடி , கதவை திறந்தேன்.
மெதுவாக மெயில் பாஸ்யை திறந்து பார்த்தேன், எதாவது இருக்கா என்று ஒன்றுமே இல்லை,
ஆனால் அந்த உருவம் நடந்து போன பாத சுவடுகள் மட்டும் அழகாக பதிந்து இருந்தது தெளிவாக அந்த வெள்ளை பனிமழையில் கூட. அப்ப இது பேய்யில்லை கால் இருக்கு, மற்ற பேய்கள் முடமாக இருக்கலாம் . ஆனால் என்னவோ, நிச்சயமாக இது முடமில்லை.
மாலை வீடு திரும்பியதும் , கணவரிடம் சொன்னேன், இப்படி அதிகாலையில் இத்தனை மணியளவில் யாரோ ஒரு உருவம் குடையுடன் வந்தது என்றதும் என் கணவருக்கு லேசாகபார்வையில் கிலி பிடித்தது போல இருந்தது.
மெதுவாக இவர் வீடியோ பார்த்துக்கொண்டு இருந்தவர், “ஒன்றையும் இந்த வீடியோவில் காணவில்லை “என்றதும்” கொஞ்சம் அதிகமா இப்ப பயந்தேன்.அப்படி உருவமே இல்லாமல் நான் பார்த்தேன் என்றால் எனக்கு ஏதோ ஆயிரத்து என்று அல்லவா ஆகி போக போகிறது. கடவுளே மதுரைக்கு மட்டுமா சோதனை இந்த வான்கூவர் , அதுக்கும் இல்லையா சோதனையாக போகிறது”, என்ற பயத்தில், “நீங்கள் விலகுங்கள், நான் பார்க்கிறேன்” , எப்படியாவது அந்த உருவத்தை வீடியோவில் பிடித்து விட வேண்டும் என்ற மனம் பதைபதைக்க , இல்லை என்னை என்னவோ ஆக்கி விட போகிறார்கள் என்ற பயம் அதைவிட அதிகமாக. நான் கண் இமைக்காமல் வீடியோவை பார்த்த கொண்டே இருந்தேன் அந்த உருவம் குடையோடு மெதுவாக வர, “ அவர் வந்திட்டார் , அவர் வந்திட்டார் ஓடி வந்து பாருங்கோ” என்று சந்தோசமாக கூவ, இப்போ என் கணவர் கண்களில் பீதி தொற்றிக்கொண்டது. எங்கே என்று பார்த்து கொண்டு இருந்தவர், அப்போ அப்போ அங்கே அந்த வீடியோ நின்று விட்டது தீடீர்யென்று ….
கருத்துகள்
கருத்துரையிடுக