நயப்பட உரைத்தல்
எல்லோருக்கும் நம்மோடு யார் பேசினாலும் பண்பாக, மரியாதையாக பேசினால் ரொம்பவே பிடிக்கும். அவர்கள் ஒரு உதவி கேட்டால் கேட்டதற்கு அதிகமாகவே செய்து கொடுப்போம் காரணம் நயம் பட பேசுதல் தான். சின்ன குழந்தைகளை நாம் தூக்கி செல்லம் கொஞ்சி விளையாடும் போது பட்டு குட்டி, புச்சி குட்டி, செல்ல குட்டி என்று எல்லாம் இல்லாத வார்த்தைகளை சொல்லி எங்கள் அன்பை வெளிக் கொணர்கிறோம் இல்லையா? குழந்தையும் மகிழ்ச்சியாக ஆரவாரமாக எங்களை கொண்டாடி மகிழ்கிறதே ஏன் அந்த மொழி புரிந்தா இல்லை, அதில் இருக்கும் கனிவு, சொல்லப்படும் விதம், அன்பு, எல்லாம் வார்த்தையில் காட்டும் அழகு. நாங்கள் வளர்ந்த குழந்தைகள் அன்பை அதிகாரமாக, ஒரு ஆயுதமாக , கண்டிப்பாக சொன்னால், எங்களுக்கு அதை மகிழ்ச்சியாக செய்ய மனம் ஒப்புவது இல்லை. காரணம் அதை செய்ய சொல்ல படும் விதமே அன்றி வேறில்லை. எல்லோருக்கும் வேண்டியது, மரியாதை, பண்பு, அது சின்னவர் பெரியவர் என்ற வேறுபாடு பேதம் கிடையாது. "இதை செய், என்பதுக்கும் "தயவுசெய்து இதை ஒரு முறை செய்து தர முடியுமா " என்று கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அதிகார தோரணை யாருக்குமே பிடிப்...