நல்ல நட்பு வேண்டும், யாரையும் நம்ப முடியவில்லை. எல்லோரும் கள்ளர், இப்படி நிறைய முறைப்பாடுகள். முதலில் நல்லவரை நீங்கள் வெளியே தேட வேண்டாம், உங்கள் உள்ளே தேடுங்கள். நீங்கள் நல்லவரா, வல்லவரா இது ஒரு புலோவில் வந்து விட்டது. நீங்கள் நல்லவராக இருந்தால் மற்றவரும் நல்லவராகவே இருப்பார்கள் என்று முதலில் நம்ப வேண்டும். ஊர் முழுக்க நல்லவராக இருக்க வேண்டும் என்றால் புத்தரும், யேசுவும், காந்தியும் தான் நட்பாக இருக்க முடியும். எங்களிடம் நட்பு வைத்திருக்கும் எல்லோரும் உண்மையாகவும், நம்பிக்கையாகவும், பிரியமாகவும் தான் இருக்க வேண்டும் என்பதுக்கு எந்த உறுதியோ உத்தரவாதமோ இல்லை .ஆனால் நாங்கள் உண்மையாகவும் உறுதியாகவும் நல்ல நட்பை கொண்டவர்களாகவும் இறுதி வரை இருக்கலாம். அதற்கு நாங்கள் நல்ல நட்பை கொண்டவர்களாக இருக்க முடியும் , ஏன் உறுதியாக கூட சொல்ல முடியும். ஒரு நட்பின் சின்ன தப்பை பெரிசு படுத்துவதும் , கோபத்தை மனதில் வைத்து இருப்பதும், விட்டு கொடுக்காமல் இருப்பதும், எல்லாம் நட்பை பேண அடிப்படை தகுதிகள். நல்ல நட்பு என்பது ஒரு நாளில் கிடைப்பது இல்லை . அது சிற்பம் போன்றது கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி முழு சிற்பமாக மெருகு பெற காலம் செல்லும். அதுக்கு பொறுமையும், நம்பிக்கையும் வேண்டும். நல்ல நட்பு என்பது முதலில் நாங்களாக இருக்க வேண்டும், நீட்டும் கரங்கள் முதலில் நல்ல நட்புக்கு போலித்தனம் எனும் முகமூடியை கழற்றி வைத்து விட்டு சுத்தமாக இருந்தால் எல்லாம் நலமே அமையும் நட்பு உட்பட ![]()
நான் யாழில் பிறந்திருந்தாலும் , வளர்ந்தது என்னவோ கொழும்பில் தான்.அதனால் எல்லா பள்ளி விடுமுறைகளுக்கு தவறாமல் ஊருக்கு அதாவது யாழ்ப்பாணத்துக்கு போய் விடுவோம். அதுவும் ரயிலில் தான் போவோம் யாழ்தேவி , உத்தரதேவி போன்ற ரயில்களில். அப்போது அறியாத பருவம், எம்மை தாண்டி ஓடும் மரங்களை எண்ணிக்கொண்டு இருப்பேன். பனை மரங்கள் வரத் தொடங்கியது யாழ்ப்பாணத்தை நெருங்கி விட்டோம் என்று நினைத்து அம்மா அப்பாவிடம் ஊருக்கு கிட்டே வந்து விட்டோம் தானே என்று கேட்டேன்.அப்பா அடுத்தது எந்த எந்த ரயில் நிலையங்கள் என்று சொன்னதும் எண்ணிக் கொண்டு இருப்பேன் யாழ்ப்பாணம் வரும் வரை . பனை மரங்கள் என்றால் யாழ்ப்பாணம் என்று தான் மனதில் பதிந்து இருந்தது. ஆனால் வளர்ந்து குறிப்பாக, அந்த பெரிய கலவரத்தின் பின் பல தடவை யாழ்-கொழும்பு போய் வந்து இருக்கிறேன். முன்னர் போன மனநிலைக்கும் பின்னர் போன மனநிலைக்கும் பாரிய வித்தியாசம். ஆனால் மனதில் வேறு மாதிரியான ஒரு பயத்துடன் தான். குறிப்பாக அனுராதபுரம் புகையிரத நிலையம் என்றால் எனக்கு அப்படி ஒரு பயம் என்னுள்ளேயே. அதை நான் வெளி காட்டிக் கொண்டது இல்லை .அந்த ரயில் நிலையத்தில் தான் ஒரு கலவரத்தின் போத...
கருத்துகள்
கருத்துரையிடுக