உள்ளுணர்வு
வாசுகியின் நடவடிக்கை விசித்திரமாக இருந்தது. வழமைக்கு மாறாக, அவள் 23 வயது நிரம்பிய காலேஜ் படிக்கும் பெண் என்பதை மறந்து ஒரு சின்ன குழந்தை போல குதூகலித்தாள் . இந்த குடும்பத்தில் இவள் தான் மூத்தவள் , இவளுக்கு இளையவள் ஒருத்தியும், ஒரு தம்பி இருக்கிறான்.
" அம்மா எனக்கு சாப்பாடு ஊட்டி விடுங்க"என்று தனது உணவு தட்டை தூக்கி கொண்டு அம்மாவிடம் வந்தாள். வாசுகியின் நடவடிக்கை "என்னடி இது புதுசா இருக்கு" என்று சிரித்தபடி தட்டை வாங்கிக்கொண்டு ஒரு கவளம் உணவை மக்கள் வாயில் ஊட்டி விட்டபடி, சிரித்தாள் அம்மா பெரிமிதமாக . எப்படி வளர்ந்தாலும் அம்மாக்களுக்கு எப்பவும் குழந்தைகள் தான். அந்த வளர்ந்த குழந்தைகள் செல்லம் கொஞ்சும் போது அது, இன்னும் கொஞ்சம் அதிக மகிழ்ச்சியை கொடுக்கும். அதில் என்னவோ தனிப்பெருமை .
“அம்மா அக்காவுக்கு லூசு போல இருக்கு” கிண்டல் பண்ணினாள் இளையவள்.
அப்பா மடியில் போய் இருந்து கொண்டு போனை நொண்டிய படி இருந்தாள் வாசுகி, விசித்திரமாக தம்பியும் தங்கையும் பார்ப்பதை வாசுகி அசட்டை பண்ணவே இல்லை.
“ உனக்கும் ஆசையாக இருந்தால் நீயும் அம்மாவிடம் ஊட்ட சொல்லு, அப்பா மடியில் இரு “ என்றபடி அப்பா மடியில் இருந்தபடி தன் தோழிக்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டு இருந்தாள் .
அன்று முழுவதும் அவளது நடவடிக்கை ஒரு குழந்தையை தனமாக இருந்தது.
அடிக்கடி அம்மாவை கட்டி முத்தம் கொடுத்தாள் . “ என்னடி ஆச்சு உனக்கு “ அம்மா கேட்டபோது “தெரியவில்லை அம்மா தோணிச்சு” என்றபடி அவள் தன் சேட்டைகளை தொடர்ந்தாள்.
தங்கையும் தம்பி கொஞ்சம் வியப்பாகவே வாசுகியை பார்த்தார்கள்.
“ஏதும் பாய் பிரின்ட் புதுசா கிடைத்து, இன்று இரவே ஓடப் போகிறாளோ தெரியவில்லை” இருவரும் ரகசியம் பேசிக்கொண்டனர்.
வசதியான குடும்பம் தான். சொந்த வீடு ஆளுக்கு ஒரு அறை , அப்பா வங்கியில் உயர் அதிகாரி, அம்மா பள்ளி ஆசிரியை.
நடுசாமத்தில் வாசுகி போய் “ அம்மா நான் உங்களுடன் படுக்கவா “ என்றாள் .
“என்னடி கேள்வி இது படுத்துக்கோ” என்ற படி பக்கத்தில் இடம் ஒதுக்கி மகளுக்கு கொடுத்தாள். தாயை கட்டிக்கொண்டு உறங்கி போனாள் வாசுகி.
இவளது நடவடிக்கை ஆச்சரியம் கொடுக்க, அம்மா அவசரமாக , மகள் தலையிடி என்று சொல்லவும் அதே சாட்டாக டாக்டரிடம் அழைத்து போனாள் வாசுகியை. நன்றாக பரிசோதித்து விட்டு ஒரு நோயும் இல்லை என்று வைட்டமின் மாதிரிகளை கொடுத்து அனுப்பி விட்டார்.
நடுசாமத்தில் வாஷ் ரூம் போன அம்மா , உள்ளே ரத்த வெள்ளத்தில் நடுவே விழுந்து கிடந்த வாசுகியை பார்த்து வீறிட்டு கத்தினாள். தலையில் இருந்து ரத்தம் பெருகிக்கொண்டு இருந்தது.பேச்சு மூச்சியற்று கிடந்த மகளை அப்புலன்ஸ் அழைத்து அள்ளி போட்டுகொண்டு போனார்கள். மயங்கி விழுந்த போது வாஷ்ரூமில் இருந்த மாபிள் கட்டில் தலை மோதியிருக்க வேண்டும்.
வைத்தியர்களும் போராடி பார்த்து தோற்று போனார்கள் பயனின்றி.குடும்பமே உடைந்து போனது.
எண்ணங்கள் பின்னோக்கி ஓடியது எப்படி வாசுகி கடந்த ஒரு வாரமாக குழந்தை போல கொண்டாடினால். எதனால் எதற்காக, எந்த உள்ளுணர்வு அவளை உந்தியது, விடையில்லாத கேள்விகள் எப்போது உண்டு. உள்ளுணர்வுக்கு மட்டுமே புரியும் . உனக்கும் எனக்கும் அது புதிர்.
மனிதனது உள்ளுணர்வு மகத்தான சக்தியுள்ளது. அது ஏழுகடல் தாண்டி, ஏழு உலகம் தாண்டி சிந்திக்க வல்லது.
கருத்துகள்
கருத்துரையிடுக