யாழ் ரயிலில் யாழ் போய்க்கொண்டு இருந்தேன் , என் கணவனுடன் தான், இந்த யாழ்ப்பாணத்து ஆட்கள்களுக்கு சீட்டில் இருந்து போவதை விட குரங்கு போல தொங்கிக் கொண்டு போவதும், உலக பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவது போல நாலு பேருடன் பாதையை மறித்துக்கொண்டு பேசுவது வாடிக்கையாக போச்சு. நான் எப்பவும் போல ஏதோ ஓர் சஞ்சிகையுடன் இருந்தேன், எனக்கு பக்கத்தில் ஓரு இளம் பெண் என்னை போல, அவள் கணவனும் பக்கத்தில் அமர்ந்து இருக்க, எதிரே கொஞ்சம் அழகான இளம் பெண் அமர்ந்து இருந்தாள். அவள் சகோதரன் காபி or தேநீர் வாங்கி வந்து கொடுத்து விட்டு போக அந்த பெண் குடிக்காமல் கையில் வைத்துக் கொண்டு இருந்தாள். இந்த ஆண்களுக்கு ஓரு சுபாவம் கட்டிய மனைவி தண்ணி , மெண்ணி இல்லாமல் காய்ந்து கொண்டு இருப்பது தெரியாது ஆனால் பக்கத்து சீட்டில் இருப்பவள் என்ன குடிச்சாள் இல்லை என்று தெரியும். டீ ஆறுது குடியுங்கோ என்று என் பக்கத்தில் இருந்த பெண்ணின் கணவர் சொல்ல அந்த பெண் நாண பட்டுக்கொண்டு குடித்தது ,, மனைவி கணவனை புதுசா பார்க்க நானும் தான் , மண்டையில் போட்டால் என்ன என்று எனக்கே தோன்றியது. மனைவியின் முகத்தில் ஐந்து கிலோ கடுகு வறுக்க கூடியதாக எனக்கு தோன்ற...
இடுகைகள்
ஜனவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
நானும் ......
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இந்த உலகம் ஆண்களுக்கானது தான். என்ன தான் பெண்கள் தங்களுக்கான பிரச்சனைகள் , அசௌகரியங்கள் , கஷ்டங்கள், வலிகளை முன் வைத்து நீதி, நியாயம் கோரி போராடினாலும் அவை எல்லாம் வீண் வாதமும், சக்தி விரயமும் தான். எதாவது எழுதினால் பேசினால் பெண்ணியம் என்று முத்திரையை குத்தி விடுகிறார்கள். இந்த பதிவை ஆண்கள் தங்களுக்கு எதிரான பதிவாக கருத கூடாது. ஒரு பெண்ணுக்கு இழைக்க படும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் என்பது என் சகோதரிக்கோ, தோழிக்கோ, மனைவிக்கு , அல்லது மகளுக்கு , நடந்தால் என்ன நிலைமை என்று எண்ணிட வேண்டும். பெண்ணுக்கு உடல் ரீதியில் அசௌகரியம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஐந்து பெண்ணுக்கு ஒரு பெண் என்ற கணக்கின் படி பெண்கள் வன்முறைக்கு உற்படுத்த படுகிறார்கள் அல்லது காயப்படுத்த படுகிறார்கள். இது எல்லா வயதினை உடையோரையும் பாதிக்கறது. RAINN தகவலின் படி 12-17-15% , 18-34 -54%, 35-64 -28%, 65 - 3% என்ற வீகிதத்தில் துன்புறுத்த படுகிறார்கள். பல சொல்லப்படாமல் போகிறது, மறைக்க படுகிறது. இதில் அன்போ பொறாமையோ இல்லை துஷ்பிரயோகம் என்பது அது ஆண்களின் பலமும், கட்டுப்படுத்து...
பலவீனம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நிறைய விடயங்கள் நிறைகள் நிரம்பியது. ஆனால் வெள்ளை தாளில் மையால் வைக்கப்படும் கருப்பு புள்ளி போல குறைகள் கவனிக்க படுகின்றன. ஒருவனின் பலங்களோடு மோத முடியாமல், பலவீனங்கள் தேடித் தேடி , அங்கே இருக்கும் ஓட்டைகளை கொண்டு தாக்குவது தான் மனித இயல்பு. தன் தகுதிகளையும் திறமைகளையும் வளர்த்துக்கொண்டு , எதிராளியை வெற்றி பெறுவதை விடுத்து , சட்ட வல்லுனர்கள் , சட்டத்தரணிகள் கூட ஆயிரம் விஷயம் சரியாக இருந்தாலும் எனோ அந்த சட்டத்தில் இருக்கும் லூப் ஹோலை தான், சட்டத்தரணிகள் தேடுவார்கள். அதாவது குறைகள். பேச வாதாட குறைகள் பலவீனங்கள் தேவைப்படுகிறது மனிதனுக்கு. மனிதன் பூரணமானவன் இல்லை . ஒருவன் தன்னை பூரமாக்கிக்கொள்ள பலமாக்கி கொள்வதற்கு, மூளை திறன், சிந்திக்கும் ஆற்றல், வாசிப்பு, சமூக கவனிப்பு எல்லாம் நிறையவே தேவை படுகிறது. அது சார்ந்த நேர்மறையான அதாவது பாசிட்டிவ் சிந்தனைகள், பெருந்தன்மையான எண்ணங்கள் தான் மனிதனை உயர்த்துகிறது. பூரணத்துவம் எனும் நிலைக்கு கொண்டு செல்லும் படிக்கட்டுகளாகும் . பிறப்பில் எல்லா மனிதர்களும் சமமே.அவன் சூழ்நிலைகள் , வளர்ப்பு , பழக்கவழக்கம் , சமூகம், படிப்பு, மரபணு, எல்லாம் அவன் வாழ்வியலில்...