யாழ் ரயிலில் யாழ் போய்க்கொண்டு இருந்தேன் , என் கணவனுடன் தான், இந்த யாழ்ப்பாணத்து ஆட்கள்களுக்கு சீட்டில் இருந்து போவதை விட குரங்கு போல தொங்கிக் கொண்டு போவதும், உலக பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவது போல நாலு பேருடன் பாதையை மறித்துக்கொண்டு பேசுவது வாடிக்கையாக போச்சு.
நான் எப்பவும் போல ஏதோ ஓர் சஞ்சிகையுடன் இருந்தேன், எனக்கு பக்கத்தில் ஓரு இளம் பெண் என்னை போல, அவள் கணவனும் பக்கத்தில் அமர்ந்து இருக்க, எதிரே கொஞ்சம் அழகான இளம் பெண் அமர்ந்து இருந்தாள். அவள் சகோதரன் காபி or தேநீர் வாங்கி வந்து கொடுத்து விட்டு போக அந்த பெண் குடிக்காமல் கையில் வைத்துக் கொண்டு இருந்தாள்.
இந்த ஆண்களுக்கு ஓரு சுபாவம் கட்டிய மனைவி தண்ணி , மெண்ணி இல்லாமல் காய்ந்து கொண்டு இருப்பது தெரியாது ஆனால் பக்கத்து சீட்டில் இருப்பவள் என்ன குடிச்சாள் இல்லை என்று தெரியும். டீ ஆறுது குடியுங்கோ என்று என் பக்கத்தில் இருந்த பெண்ணின் கணவர் சொல்ல அந்த பெண் நாண பட்டுக்கொண்டு குடித்தது ,, மனைவி கணவனை புதுசா பார்க்க நானும் தான் , மண்டையில் போட்டால் என்ன என்று எனக்கே தோன்றியது. மனைவியின் முகத்தில் ஐந்து கிலோ கடுகு வறுக்க கூடியதாக எனக்கு தோன்றியது.
ஒவ்வொரு ஆணும் , முயற்சி உள்ளவர்கள் தான், போராட்ட குன்ம உள்ளவர்கள், உழைப்பாளி தான், குடும்பதுக்காக கஷ்டப்படுவர்கள் தான், எதையும் சாதிக்கும் வல்லமை கொண்டவர்கள் தான் எப்ப?என்பது தான் கேள்வி ஒரு பெண்ணின் கடைக்கண் பார்வை படும் வரை.
ஒவ்வொரு வெற்றி கொண்ட ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள், என்கிறார்கள் அது தவறு, நிற்கிறாள் பிடித்து தள்ளி விட 
. ஒரு ஆண் மகனால் எதுவும் சாதிக்க முடியும், ஆனால் ஒரு பெண்ணிடம் எதையும் சாதிக்க முடியாது. அப்படி சாதிக்க நினைத்தவர்கள் உடைச்சுக்கொண்டு போனால் தான் உண்டு.ஒரு மீற்றர்
நடக்கவே தாண்டி தாண்டி தள்ளாடி நடக்கும் ஒரு ஆண் மகனை ஒன்பது கிலோ மீற்றர் ஓட வைக்க ஒரு பெண்ணால் முடியும், அவள் கடைக்கண் பார்வையால் முடியும் ஏதோ தோணிச்சு சொல்லிட்டேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக