பலவீனம்

நிறைய விடயங்கள் நிறைகள் நிரம்பியது. ஆனால் வெள்ளை தாளில் மையால் வைக்கப்படும் கருப்பு புள்ளி போல குறைகள் கவனிக்க படுகின்றன. ஒருவனின் பலங்களோடு மோத முடியாமல், பலவீனங்கள் தேடித் தேடி , அங்கே இருக்கும் ஓட்டைகளை கொண்டு தாக்குவது தான் மனித இயல்பு. தன் தகுதிகளையும் திறமைகளையும் வளர்த்துக்கொண்டு , எதிராளியை வெற்றி பெறுவதை விடுத்து , சட்ட வல்லுனர்கள் , சட்டத்தரணிகள் கூட ஆயிரம் விஷயம் சரியாக இருந்தாலும் எனோ அந்த சட்டத்தில் இருக்கும் லூப் ஹோலை தான், சட்டத்தரணிகள் தேடுவார்கள். அதாவது குறைகள். பேச வாதாட குறைகள் பலவீனங்கள் தேவைப்படுகிறது மனிதனுக்கு.
மனிதன் பூரணமானவன் இல்லை . ஒருவன் தன்னை பூரமாக்கிக்கொள்ள பலமாக்கி கொள்வதற்கு, மூளை திறன், சிந்திக்கும் ஆற்றல், வாசிப்பு, சமூக கவனிப்பு எல்லாம் நிறையவே தேவை படுகிறது. அது சார்ந்த நேர்மறையான அதாவது பாசிட்டிவ் சிந்தனைகள், பெருந்தன்மையான எண்ணங்கள் தான் மனிதனை உயர்த்துகிறது. பூரணத்துவம் எனும் நிலைக்கு கொண்டு செல்லும் படிக்கட்டுகளாகும் .
பிறப்பில் எல்லா மனிதர்களும் சமமே.அவன் சூழ்நிலைகள் , வளர்ப்பு , பழக்கவழக்கம் , சமூகம், படிப்பு, மரபணு, எல்லாம் அவன் வாழ்வியலில் அவனது பங்கை காட்டுகிறது. நாம் எப்படி என்பது பலநேரங்களில் நமக்கு தெரிவது இல்லை. நம்மை சூழ உள்ளவர்கள் தான் தெளிவாக தெரிந்து வைத்து இருப்பார்கள்..
எங்கள் குறைகள் எங்களுக்கு தெரிவது இல்லை, ஏன் குறைகளாக கூட நினைப்பதே இல்லை. வெளிநாட்டில் வாழ்வதை வைத்து ஒருவரை சிறந்தவர்கள், எல்லாம் தெரிந்தவராக கணித்து விட முடியாது. எங்கு வாழ்ந்தாலும் சக மனுசாளை மதிக்கவும் மரியாதையை கொடுத்து பேச வேண்டியது பண்பாகும்.
சின்ன வயதில் நிறைகளை காட்டி, பாராட்டி வளர்க்கப்படும் குழந்தைகள், நாளை வளரும் போது மற்றவர்களுடன் போய் மல்லுக்கட்டிக்கொண்டு நிற்க போவதில்லை. அவர்கள் நிறைகளை பாராட்டி, குறைகளை சுட்டி காட்டிக்கொண்டு கடந்து போய்க்கொண்டு இருப்பார்கள்.
மேல் கூறப்பட்ட தகைமைகள் பல மேலதிகாரிகள் ஆவதற்கும், நாம் அவர்கள் கீழ் வேலை செய்வதற்கும் ,அதுவே அவர்களின் பலமும், அனுகூலமாகவும் அமையலாம்.
மிருகங்கள் வேட்டையாடும் போது பதுங்கி இருக்கும் அவை, தாம் நினைக்கும் நிலைக்கு (position ) வரும் வரை தாக்காது. மனிதனும் ஒரு விலங்கு தான். ஒருவரின் பலவீனம் எதுவென்று தேடும்.
பணமா, பெண்ணா, பிள்ளைகளா , பெற்றோரா, பாசமா? காதலா ?குடிவகை ? ஏதோ ஒன்றில் இருக்கும் அதீத பிரியத்தை தனக்கு சாதகமாக்கி அடித்து உடைப்பதே , காயப்படுத்துவதோ , தகர்ப்பதே சாதுர்யமாக எண்ணிக்கொண்டு இருக்கிறான் மனிதன்.
ஒவ்வொரு மனிதனும் பிறப்பால் நல்லவர்களாக இருந்தாலும் , உள்ளே இரண்டு பெரிய மிருகங்கள் வாயை பிளந்தபடி உள்ளே உறங்கிக் கொண்டு இருக்கின்றன. எந்த மிருகத்துக்கு நாம் தீனி போடுகிறோம் என்பது பொறுத்தே நாம் எப்படி எம்மை வளர்த்து கொள்கிறோம் என்பதே. எனவே நல்ல தீனியை போட்டு நாமும் நல்ல மிருகத்தை மட்டும் இல்லை, நம்மையும் நல்லவர்களாக வளர்ப்போமாக.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்