அந்த ஒரே ஒரு ஆசை
அந்த ஒரே ஒரு ஆசை
சொல்ல முடியாத , அந்த ஒரே ஒரு ஆசை எல்லோர் ஆழ் மனதிலும் உண்டு. எதோ ஒரு காரணம் அதை சொல்லிட விடாமல் தடுக்கும். என்றோ ஒரு நாள் அதை சொல்லிட வேண்டும் என்று சகலர் மனதிலும் எண்ணம் ஒன்று இருக்கும். ஆனால் என்ன அதற்கான நேரமும் காலமும் கூடி வரும் என்று காத்திருப்பார்கள். காதல், கோபம், எரிச்சல் பொறாமை, பெருந்தன்மை , ஏதோ ஒன்று. சொல்ல முடியாது என்று எதுவுமே இல்லை. இதை சொல்வதால், எதோ ஒரு விதத்தில், அவர்கள் இமேஜ் உடைந்து போகலாம் என்ற தயக்கம், அச்சம், பயம், விளக்கிட முடியாத ஒன்று உள்ளே இருக்கும். யோசித்து பார்த்தால் , உங்களுடன் கூட வாழ்ந்த பெற்றோர், கணவன் , மனைவி, குழந்தைகள், நண்பர்கள் , உறவினர்கள், சகோதரர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், அந்த தருணம் வரும் வரை பலர் காத்து இருக்கிறார்கள்.
என்ன பலநேரம் அந்த சந்தர்ப்பம் வராமலே போய் விடும். அப்படி போவதால் ஒன்றும் நட்டமே இல்லை. சொல்ல முடியாமல் இருக்க என்ன காரணமோ இருந்தது என்றால் அதை சொல்லாமல் போவதில் பாதிப்பே இல்லை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஹா மறந்து போனேன் இதை எழுதவே காரணம் இந்த சம்பவம் தான், என் தோழியின் பெற்றோர் , இவர்களை எல்லோரும் ஆதர்ஷ தம்பதிகள் என்று தான் சொல்வார்கள். கணவன் பள்ளி, அதிபர், மனைவி பள்ளி ஆசிரியை , திருமணத்தின் பின் வேலையை குடும்பத்துக்காக விட்டு , கணவனுக்கு சேவை செய்வதே பாக்கியம் என்று, குழந்தைகளை மிக அழகாக பராமரித்து வாழ்ந்தவர். அவர் தனது கடைசி காலத்தின் போது நோயுற்ற போது கூட கணவனை பற்றி கவலையிலே இருந்தார். ஒரு நாள் என் தோழியின் தாயார் கடும் சுகவீனம் உற்ற போது , pain killer Morphine கொடுத்தார்கள். அந்த மருந்து போதை போல தான் , அந்த மருந்தின் தாக்கம் , அவர் மயக்க நிலை அல்ல தூக்கம் எதுவோ , தன் கணவரை பற்றி பேசினா பாருங்கள், அவ்வளவு வேதனைகள் உள்ளே புதைந்து இருந்து இருக்கிறது. அதை என்றும் சொல்லவே நினைத்து இருக்க மாட்டார் போல. படித்த என்னை சுயநலமாக குடும்பம் பிள்ளைகள் என்று கட்டி போட்டு விட்டது. எனக்கென்று ஒரு நாள் கூட என்னால் வாழ முடியவில்லை , இதை பற்றி என் கணவர் சிந்திக்கவே இல்லை .இப்படி பல, அன்று எல்லோருமே ஆடிப்போனார்கள். அம்மாவுக்குள் இவ்வளவு உள்ளே இருந்து இருக்கிறதா ?
எல்லோருக்குள்ளும் இருக்கு என்பதே உண்மை . சொன்னாலும் சொல்லவில்லை என்றாலும் சரிதானே?
கருத்துகள்
கருத்துரையிடுக