டெக்னாலஜி



முன்பெல்லாம் எதோ காரணத்துக்காக மாதம் ஒருமுறை வைத்தியரை பார்க்க வேண்டும் எல்லோருக்கும், அவர்களை பார்க்கவில்லை என்றால் வருத்தம் முத்தி செத்து போவார்கள். அப்படி இருக்கும் பேச்சு. ஆனால் இப்ப யாருக்கும் வைத்தியரை பார்க்க எண்ணமே வருவது இல்லை, ஏன் உங்களுக்கு அந்த அப்பொய்ன்ட்மென்ட் இருக்கே போய் வருவோம் என்றால் கூட மாட்டோம் என்று

காத தூரம் ஓடுகிறார்கள் .




இந்த கறி சாப்பிட மாட்டோம், அது சாப்பிட மாட்டோம் என்றவர்கள் எல்லாம் இப்ப எதுவும் சாப்பிடுகிறார்கள். அது வாயு , இது வயிற்று பொருமல், இது சேமிக்காது , அந்த வார்த்தைகளை இப்ப கேட்கவே முடியவில்லை.




முடி வெட்டவில்லை, டை அடிக்கவில்லை என்று பியூட்டி பார்லோர் போனவர்கள் எல்லாம், இப்ப அவற்றை மறந்து , வாழ பழகி கொள்கிறார்கள். வெளியில் போகவில்லை என்றால் மண்டை காய்ந்து போகிற பலர் இப்போ வீட்டில் எப்படி பொழுதை போக்குவது என்ன செய்யலாம். என்று அட்டவணை போட்டு வாழ பழகி விட்டார்கள். வீட்டு தோட்டம், வீட்டை சுத்தம் செய்வது, தையல், உடல் பயிற்சி, இந்த டெக்னாலஜி ஒரு பக்கத்தில் பாரிய உதவியை செய்து கொண்டு இருக்கிறது. அவர்கள் பொழுதை போக அதே நேரம் இல்லாத பீதியை வேற கிளப்பி கொண்டு இருக்கிறது வதந்திகள் மூலம்.




உணவை வீணாக்குபவர்கள் கூட அதை வீணாக்க கூடாது என்று கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

வெளியில் அதாவது ரெஸ்டூரண்ட்ஸ் உணவை நாடி விரும்பி உண்டவர்கள் எல்லாம் , அங்கே போகாமல் வீட்டு உணவுகளை ருசி பார்க்க தொடங்கி இருக்கிறார்கள் அதன் மூலம் எவ்வளவு பணத்தை சேமிக்க முடியும் என்று கற்றுக் கொண்டு இருக்கிறார்கள். அத்தோடு அவற்றை சமைப்பது எப்படி என்றும் யூடூபில் தேடி பிடித்து கற்றுக்கொண்டு செய்ய தொடங்கி இருக்கிறார்க. இனிவரும் காலங்களில் ரெஸ்டூரண்ட்ஸ் எல்லாம் வியாபாரம் குறையும் சாத்தியக்கூறுகள் உண்டு.




கிட்ட போய் மோதாமல் எட்டி நின்று வழி விட வேண்டும் என்று குறிப்பாக அந்த நாகரீகத்தை பலருக்கு கற்று கொடுத்து இருக்கிறது. இடித்துக்கொண்டு excuse me சொல்லாமல் போனவர்கள் எல்லாம் மற்றவர்களுக்கு இடம் கொடுத்து விலகி நின்று போவதை பார்க்க கூடியதாக இருக்கிறது. நாகரிகம் கற்றுக்கொடுக்கிறது இன்றைய காலகட்டம்.




வாசிப்பு மறந்து போனவர்கள் , திரும்ப வாசிப்பை, தங்கள் அன்றைய பொழுது போக்கை தேடி போக ஆரம்பித்து இருக்கிறார்கள்.




நிறைய மருந்து வகைகளை அள்ளி போட்டு அந்த நோய் இந்த நோய் என்றவர்கள், இப்போது நோய் இல்லாமல் இருக்கிறார்களா இல்லை, நோய் குணமடைந்து விட்டதா தெரியவில்லை. பொதுவாக அலர்ஜி என்று முறைப்பாடு காணாமல் அல்லது குறைந்து போய் இருக்கிறது.




வீதிகள் ஓய்ந்து போய் , வாகனங்கள் சத்தமே இல்லாமல், கடைகள் எல்லாம் மூடப்பட்டு வெறிசோடி மயான அமைதியில் நகரம். எண்ணி பார்த்திருக்க முடியாத , ஆனால் சாத்தியமானது.




மொத்தத்தில் குறை சொல்லுவதும், சமாளிப்பதும், நிலைமைக்கு ஏற்றாப்போல் மாறுவதும் சாத்திய பட்டு இருக்கிறது. எதுவும் எல்லாமும் சாத்தியமே, என்ன நாம் அவற்றை செய்ய முனைவது இல்லை, காரணம் அதில் விருப்பமும் நாட்டமும் நிறையவே இருக்கிறது என்பதே. ஆனால் காலம் அதை செய்ய வைக்கிறது, செய்ய வேண்டிய நிர்பந்தம் வரும் போது அதை மீறி நடக்க முடியாது , அப்படி மீறினால் எங்கள் உயிர் போனால் வராது என்பதால் கட்டுப்படுகிறோம். எல்லாம் அனுபவம் கற்று தந்த பாடங்களுக்கு ஈடுயிணை இல்லை என்பதே நிஜம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்