மனிதன்
மனிதன் ஒரு விலங்கு இனம் தான் ஆனால் அந்த விலங்கு இனத்துக்கு இல்லாத அபூவர்வ சக்தி மனிதனிடம் இருக்கு . தனக்கு தேவையான போது பாராட்டி பேசி தேவையை தீர்த்து கொள்வதும் தேவை முடிந்ததும் மறந்து தூக்கி எறிந்து விட்டு போவதும் தான்.
தவறுகள் குற்றங்கள் செய்வது மனித இயல்பு . அவற்றை மன்னிப்பதும் , கொலை , கொள்ளை எனும் போது அதற்குரிய சிறை தண்டனையை அனுபவித்து வெளியே வருவதும் தான். தண்டனை என்பது அவனுக்கான பழி வாங்கல் அல்ல, அவன் திருந்துவதற்கான கால அவகாசம் என்றே கொள்ள வேண்டும். அதற்கான நேரமும் , மனமாற்றத்துக்கான காலமும் மட்டுமே எதையும் மாற்ற வல்லது.
மற்றும்படி ஏனைய தவறுகள் குற்றங்கள் , நாம் திருந்தி கொள்ள வாழ்க்கை ஒரு களமாக இயங்குகிறது. வாசித்தல் , பொது சாதன தொடர்புகள், மீடியாக்கள் எல்லாம் நல்லவற்றை சொல்ல விளைவுதான் நோக்கமே கெட்டதை சொல்லி , பின்னர் நல்லதுக்கான வழிகளை சொல்லி முடிகிறது .
நேர்மையான எண்ணங்கள் யாரையும் விரைவில் கவர்வதே இல்லை. எதிர்மறையான நிகழ்வுகள் பேச்சுக்கள் ஈர்க்கும் அளவுக்கு.
ஆனால் மனிதர் என்ன செய்கிறார்கள்? அவற்றில் நல்ல விடயங்களை விட , எவை எல்லாம் செய்ய தகாதோ அவை மிக விரைவில் மனதை கவர்ந்து , சேர கூடாத இடத்தில் சேர்த்து விடுகிறது , நதி கடலை தேடி போவது போல
தவறுகள் , குற்றங்கள் மன்னிக்க பட வேண்டும் , இவர் மட்டுமே மன்னிக்க வேண்டும் என்று இல்லை , எவரும் மன்னிக்கலாம் . மனிதர்கள் மன்னிக்கலாம் .
நாங்கள் எப்போதும் நல்லவர்கள் தான், எம்மை சார்ந்தவர்களுக்கு , எங்களை தெரிந்தவர்களும் , பிடித்தவர்கள் etc , ஆனால் நாம் அதையும் தாண்டி நல்லவர்களாக நியாயம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றால் அறிமுமில்லாத அந்நியர்ககளாக இருக்க வேண்டும் , அவர்களுக்கும் எம்மால் நியாயமாக நேர்மையாக எங்களை போல அணுக முடிந்தால் நலமே.
கருத்துகள்
கருத்துரையிடுக