எல்லோருக்கும் வீட்டைக் விட்டு கிளம்பும் போது ஒரு மகிழ்ச்சி வரும் அது போகும் இடத்தை பொறுத்தது. அதிலும் vacation என்றால், அதாவது நீண்ட கால விடுமுறை என்றால் சொல்லவே வேண்டாம் எல்லோரும் மிக மகிழ்ச்சியாக ஆரவாரமாக , காத்திருந்து காத்திருந்து எதிர்பார்த்து பயணிப்பார்கள். அதற்காகவே நீண்ட காலமாக பிளான் பண்ணி  இந்த பயணத்தின் போது நாம் எத்தனை பைகளை காவி கொண்டு போகிறோம், என்ன பார்க்க வேண்டும், என்ன செய்ய வேண்டும்  என்பது வரை. 

இது எனது அனுபவம் மட்டுமில்லை,  பலருக்கு நடந்து இருக்கும் .  எப்போதும் ஆண்கள் தங்களுக்கான ஒரு hand luggage, உடன் புறப்பட்டு விடுவார்கள். அதை கையில் கொண்டு போய் விடுவார்கள். அவர்கள் தங்களுக்கான அதிகமான பொருட்களை எடுத்து செல்வதில்லை, போடும் ஒரு சப்பாத்து, அதை விட உள்ளாடைகள், சில டீஷர்ட் மற்றும் பெல்ட் அவ்வளவே. ஆனால் பெண்கள் அப்படியில்லை, என்னை வைத்து தான் நான் சொல்கிறேன். அநேகமான பெண்கள் அப்படித்தான். எத்தனை நாட்கள் நிற்கிறோம் , அதற்கான நாட்களை எண்ணி அவற்றுக்கான உடைகள், அவற்றுக்கான சப்பாத்துகள் , மேக்கப் பொருட்கள், க்ரீம் , கூந்தல் அழுத்தி (hair strainer), என்று இத்தியாதிகள் , அது இரண்டு சூட்கேஸ் வரை வந்து விடும். இது தனியாக பயணித்த போது கொண்டு போனது. 

குறிப்பாக இந்த விமானத்தில் இந்த luggage எல்லாம் போட்டு, சுங்க அனுமதியை (custom clearnce ) முடிந்து போனால் தான் நிம்மதி . என்ன அதில் சப்பாத்தில் இருந்து பாண்ட் பெல்ட் வரை உருவி போட வேண்டும் கழுத்தில் உள்ளது கையில் உள்ளது எல்லாம் கழற்றி போட அப்படி போட்டாலும் உள்ளே போக விடமால் கீ கீ என்று கத்தும் , அதில் ஒருவர் தடியோடு நின்று ஏற இறங்க ஏதோ கடத்திக் கொண்டு போறது போல பார்ப்பார். அவர்களை கடந்து போனாலே பாதி பயணம் முடித்த நிம்மதி. இவற்றுக்காக என் கணவர் முன்னமே அலெர்ட் , எல்லாம் பார்த்து பார்த்து தன்னை அப்படி தூக்கி அப்படியே நைசாக வைக்கட்டும் என்பது போல முன்னேற்பாடு உடன் போவார். 

நான் எப்போது போல மிக கேசுவலாக போவேன் , அதில் கீ என்று கத்தும் ஓ பெல்ட் என்று அதை கழற்றி போடுவேன், பிறகும் அவர்கள் இனி வா என்று சொல்ல போக மற்ற தரம் கீ கீ என்றும் ஓ chain என்று அதையும் நிறுவைக்கு போடுவேன். முடிவில் வெளியே ஹாயாக வருவேன். என் கணவர் கடுகடுத்துக்கொண்டு நிற்பார். அப்பவே சொன்னேன் , அதில் வந்து நின்று எத்தனை அலுப்பு என்று. "அவர்கள் எடுக்கிற சம்பளத்துக்கு வேலை செய்கிறார்கள், நான் எதுவும் களவு செய்யவில்லை. இது இலங்கையோ இந்தியாவோ இல்லை, செய்யாத குற்றத்துக்கு பிடிக்க " என்று சொல்லிக்கொண்டு வருவேன். 

பின்னாளில் என் மகன்கள்  USA யில் வேலை என்று இருவரும் இரண்டு இடம் . நான் கொண்டு போன பெட்டியின் எண்ணிக்கை கூடி போச்சு. என் பையன்கள் என்ன சாப்பிடுவார்கள், அங்கே அவர்களுக்கு தேவையான உணவு வகைகள் தான் அதை தவிர ஒன்றும் கொண்டு போவதில்லை. என் கணவருக்கு பயத்தில் உயிர் போகும்.

இந்த ஏர் போட்டில் நிறைய பொதிகளை வைத்துக்கொண்டு நிற்பவர்கள் அதிகமாக ஒன்று இந்தியர்கள், இலங்கையர்கள், சைனீஸ் தான், இந்த வெள்ளைக்காரர்கள் சின்ன ஒரு பொதியோடு உலகம் முழுக்க சுற்றி வருவார்கள். நாங்கள் எங்கள் luggage எல்லாம் தூக்கி சுமந்து எல்லையை கடப்பது பெரிய ரிஸ்க். ரிஸ்க் என்பது எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுவது போல தான் நான் போவேன் துணிந்து . 

என் கணவர் விமான நிலையத்துக்கு வந்து விட்டால் அவர் தனியே பிளை பண்ணுவபவர் போல தான் நிற்பார். பொதியை அவர் பெயரில் போட்டு விட்டால் பிரச்சனை தனக்கு வந்து விடும் என்ற பயத்தில். இப்படித்தான் ஒருமுறை New york  போன போது , இரண்டு பெட்டிகள், ஒரே ஆளின் பெயரில் போட்டால் அதிகமான பணம் செலுத்த வேண்டி வரும் என்பதால் , ஒரு பெட்டியை அவரின் பெயரிலும் மறு பெட்டியை என் பெயரிலும் போட சொல்லி விட்டார் . என் மகனுக்கும் மகனின் நண்பர்களுக்கும் நண்டு கறி பிடிக்கும் என்பதால் அதை சமைத்து அதை பதபடுத்தி கொண்டு போனேன். இவர் சொல்லி விட்டார் இந்த நண்டு எல்லாம் கொண்டு போக முடியாது. பிடிப்பார்கள் என்று. நான் தான் சொன்னேன் பிடித்தால் பிடிப்பவருக்கும் ஒரு நண்டு கால் கொடுப்பேன், அது என் பொறுப்பு என்று. அவரும் என்னை பேசி பேசி தான் புறப்பட்டார்.

பெட்டிகளை போடும் அவதானமாக என் பெயரில் நிறைய பொருட்கள் உள்ளத்தையும் , ஈஸியான பொருட்களை தன் பெயரிலும் போட்டார் ஆனால் . சுங்க இலாகா அனுமதிக்கு வந்த போது என் பாஸ்போர்ட் பார்த்து விட்டு போக சொல்ல நானும் போய் கொண்டு இருந்த நான் திரும்பி பார்த்தேன். இவரிடம் கேள்விகள் பல கேட்க படுவது தெரிந்தது என்ன என்று புரியவில்லை, எதோ my wife என்று காதில் விழ , "excuse me , சொல்லி விட்டு திரும்பி அவர் நிற்கும் இடத்துக்கு ஓடிப்போய் , இது நான் தான் பேக் பண்ணினேன் , என்று பட பட என்ன உள்ளது என்று சொல்ல " போக சொல்லி அனுப்பி விட்டார்கள்.

"இதுக்கு தான் அப்பவே சொன்னான் என்றார் அவர், "இதுக்கு தான் நானும் அப்பவே சொன்னான் நான் பெட்டியை கட்டும் போது உள்ளே என்ன உள்ளே வைக்கிறேன் என்று பார்க்க வேண்டும் என்று, சொல்லி ஒரு மாதிரி விமானத்தில் ஏறி New york வந்தால், என் கணவர் சொன்னார் "உங்கள் நண்டு பெட்டியை அவர்கள் நிச்சயமாக திறந்து பார்ப்பார்கள், நீங்கள் அவர்களின் செக்கிங் இடத்துக்கு மறுபடி போக வேண்டி வரும் என்று, நானும் போய் என் பெட்டியை எடுத்துக்கொண்டு வந்து இருக்கலாம் விலங்கத்துக்கு போய் , பெட்டியை செக் பண்ண போறீங்களா " என்று அங்கு நின்றவர் இடம் கேட்க " இல்லை இல்லை, நீங்கள் போங்க என்று மற்றவர்களை பரிசோதித்து கொண்டு நின்றார் அந்த ஆபிசர்.


(இன்னும் வரும் )

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்