காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்
காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள் பார்வைகளை பரிசுத்தமாகும் வார்த்தைகள் கனிவாகும் குறைகள் மறையும் நிறைகள் தெரியும் காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள் மன்னிப்பு கேட்கவும் மண்டியிடவும் வைக்கும் ஈகோவை இளக செய்யும் கொழுப்பை கரைக்கும் நீயும் நானும் ஒன்றே என்று சொல்லும் காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள் வலிகளை துச்சமென எண்ணும் நம்பிக்கைதனை வலுவாக நம்பும் போராட கற்றுக்கொடுக்கும் பொறுமையை போதிக்கும் காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள் சிறகுகள் இல்லாமல் பறக்க தோன்றும் பசி மறக்கும் உற்சாகம் கொடுக்கும் உலகம் அழகாக தெரியும் காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள் பகைமை மறையும் கோபம் குறையும் பிரியம் நிறையும் ரசனைகள் பெருகும் கவிதைகள் பிடிக்கும் கற்பனை வளரும் எழுத தோன்றும் நேரம் குறையும் காதல் நிறையும் காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்