அதிகாலை நான்கு மணி, அலாரம் அடிக்க, சத்தம் போடாமல் பூனை போல நடந்து வந்து எலியை அமுக்குவது போல அலாரத்தை அழுத்தி நிறுத்தினேன். நிறுத்தி விட்டு இருட்டில் மேல் மாடியில் இருந்து மெதுவாக கீழே பூனை போல இறங்கி வந்து, உடற்பயிற்சி செய்ய, அந்த flight இல் ஏறினேன். அப்படித்தான் எனக்கு தோன்றும். அதில் ஏறி மிதிக்க ஆரம்பித்தேன். எண்ணங்கள எங்கேயும் ஓட மறுத்தது அதிகாலை, கண்கள் தூக்கத்தை மறக்க மறந்து நிற்க முன்னால் இருந்த CCTV கேமரா வீடியோ மீது பதிந்தது. அதை பார்த்தபடி ஓடிக்கொண்டு இருந்தேன் flight லில். வெளியே ஸ்நொவ் அதாவது பனிமழை பூ போல தூறிக்கொண்டு தூவிக்கொண்டு இருக்க அவை மல்லிகை பூ போல பறந்து கொண்டு இருந்தது. அதிகாலை வேளை என்பதால் CCTV கேமரா எல்லாம் கருப்பு வெள்ளையாக காட்சியளித்துக் கொண்டு இருந்தது. தீடீர்யென என் கண்கள் CCTV கேமரா மீது நிலை குத்தி நின்றது. ஒரு வெள்ளை உடை உடுத்தி உருவம், குடை பிடித்து கொண்டு இதுவரை எந்த கதையிலும் பேய் குடை பிடித்தது பற்றி வாசிக்கவில்லை .அந்தஉருவம் மெதுவாக வந்து எங்கள் வீட்டு கேட்டை திறந்து கொண்...
இடுகைகள்
அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
உண்மையில் யார் பணக்காரன் ? அதுதான் தெரியவில்லை. கார், வீடு, பணம், வசதிகள், கூப்பிட்ட குரலுக்கு கையைக்கட்டி சேவகம் செய்ய ஆட்கள் உள்ளவர்களா ? ஒவ்வொருவரும் தமக்குள் ஒரு கணக்கை போட்டு விடுகிறார்கள். நான் பணக்காரன், நான் இது என்று . எல்லோரும் அவரவருக்கு ஏற்றாப் போல எண்ணிக் கொள்கிறார்களே தவிர , எதுவும் உண்மை இல்லை. இங்குள்ள சூப்பர் மார்க்கெட், காஸ்கோ போன்ற இடங்களில் எல்லாம், இப்போது உணவு பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களை மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்பதை ஊக்குவிக்கிறார்கள். பலர் மாஸ்க் அணிந்து செல்கிறார்கள். சிலர் அணிந்தவது இல்லை. எதோ ஒரு காரணம் , அது எதற்காக வேண்டுமானாலும் இருக்கட்டும். சமீபத்தில் காஸ்கோவில் பொருட்களை வாங்க என்று ஆறு அடி இடை வெளி விட்டு வரிசையில் நின்றேன். எனக்கு ஆறடிக்கு முன்பு ஒரு கணவனும் மனைவியும் வண்டில் உடன் நின்றார்கள் . வாசலில் காஸ்கோவில் வேலை செய்யும் ஒரு பெண்மணி நின்றபடி வரும் உணவு பொதியை தள்ளும் வண்டியை துடைப்பதற்கான சனிட்டிஸ்ர் நனைத்த தாளை, ஒவ்வொருகுக்கு கொடுக்க , இன்னொரு ஆண் கொஞ்ச தூரத்தில் நின்றபடி மாஸ்க் இன்றி வருவோருக்கு இலவசமாக மா...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நாங்கள் பலம் என்று நினைக்கும் , ஏன் சிந்திக்கும் சில விடயங்கள் தான் எம்மை பலவீனப்படுத்துகிறது, என்பதை அறிந்தது இல்லை. நாம் எதில் கூடுதலான கவனிப்பு , அக்கறை . ஆர்வம், விருப்பம், அன்பு என்று எதையெல்லாம் செலுத்துகிறோமோ, அதுவே எம்மை அடிமை படுத்தி விடுகிறது. அன்பு எமது பலம் என்று எண்ணினால், நாம் அடிமையாக கோழையாக இது ஒன்றே போதும். வேறு புறக்காரணங்கள் ஏதும் அவசியமில்லை. எம் ஆக்கிரமிப்பு முழுதும் ஒரு புள்ளியில், குறியில் இருக்கும் போது அவற்றை சிதறவோ திசை மாற்றவோ எம் எண்ணங்கள் அனுமதிப்பது இல்லை. அப்படி ஒரு சிக்கல் உருவாகும் போது பலவீனப்படுத்த படுகிறோம். பிள்ளைகள் தான் பெற்றோரை பலவீனத்துக்கு முதல் காரணமே. குழந்தைகள் மீது உள்ள அளவற்ற பாசமே , பெற்றோர்கள் எந்த நிலைக்கும் இறங்கி போக தயாராகிறார்கள். அங்கே வசதி உள்ளவர்கள் இல்லாதவர்கள் என்ற பேதமே கிடையாது. வாழ்க்கையின் போராட்டமே மனிதரின் அதீத பற்று தான், அன்பு, பணம், பதவி ஏதோ ஒன்று. எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. இலங்கையில் யுத்தம் நடந்துகொண்டு இருந்த போது , யாழ்ப்பாணத்துக்கு கொழும்புக்குமான போக்குவரத்துகள் முற்றாக துடிக்கபட்டு இருந்தது. அந்த ...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
உலகத்தில் தாங்கள் பிறந்த நாட்டுக்கு போக பயம் படும் ஒரு இனம் என்றால் அது இலங்கை தமிழர்களாக தான் இருக்க முடியும். குற்றம் செய்தவன் பயப்படுவதில் அர்த்தம் உண்டு. ஆனால் குற்றமே செய்யாமல் பயப்படுவது என்றால் நாங்கள் தான். எனக்கு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் போக மட்டுமே நெஞ்சினுள் ஒரு பயம் கவ்வும். இலங்கையில் குற்றமே செய்யாமல் விமான நிலையத்தில் குற்றம் சாட்ட முடியும், இந்தியாவில் நீங்கள் எதுவுமே பேசாமல் விமான நிலையத்தில் மரியாதையை இல்லாமல் ஒருமையில் பேசுவார்கள், இரண்டு இடத்திலும் பணம் கறப்பதே முதல் வேலையாக இருக்கும். சீனாவை எவ்வளவு தான் நாங்கள் நையாண்டி கேவலமாக பேசினாலும் தைரியமாக எந்த வித பயமும் இல்லாமல் போக கூடிய நாடு என்னை பொறுத்தவரை. என் தந்தையை பார்க்க என்று ஊருக்கு போனேன் . என் தந்தையை பார்க்க போனால் நான் எங்கும் போக விரும்புவது இல்லை, அவருக்காக போகிறேன், அவரோடு பொழுதை கழிப்பதை தான் விரும்புவேன். அதனால் என் விடுமுறைகள் கொழும்பிலேயே அநேகமாக முடிந்து விடும். என் விடுமுறை முடிந்து புறப்படும் நாளும் அருகில் வர என் ஆருயிர் தோழி, வயதான அவர் தாயார், என் தோழியின் கணவர் , பிள்ளைகள் எல்லோரையும்...
கோப்பி டே
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
எல்லோருக்கும் எப்படி எல்லாமோ விடியும் எனக்கு என்னவோ காலையில் மணக்க மணக்க கோப்பி போட்டு குடித்தால் தான் அன்றைய பொழுதுக்கே மகிமை. அது என்னவோ தெரியாது அம்மாவிடம் நான் பழகிகொண்ட விடயங்களில் முதன்மையானது இந்த கோப்பி , அம்மாவின் மரண படுக்கையில் அதிகாலையில் கோப்பி போட்டு பருக்கிய போது , நீ போய் உன் கோப்பியை கொண்டு வந்து சுட சுட குடி என்றது என் மனதை விட்டு அகலவே இல்லை. இன்று கோப்பி பிரியர்களின் தேசிய நாளாம் அது எப்போதாவது குடிப்பர்களுக்கு எங்களுக்கு எப்பவும் , எப்போதும், எங்கேயும் கோப்பிக்குரிய நாள் தான். நான் வேலைக்கு எப்போதும் கோப்பி பிளாஸக்கில் எடுத்து செல்வேன் . வேலை இடத்தில் எல்லா வசதிகளும் கோப்பி தேனீருக்கு இருந்தாலும் என் கோப்பி எனக்கு ரொம்பவே பிடிக்கும். அது என்னவோ என் கோப்பியின் வாசனை கமகம என்று , எனக்கு மணப்பதை விட மற்றவர்களுக்கு ஜாஸ்தியாகவே மணக்கிறது போல. என் பிரேக்கில் வருவோர் போவோர் எல்லாம் என்ன உன் கோப்பி இப்படி வாசனை தூக்கியடிக்கிறது என்று கேட்காதவர்களே, இல்லை பாமா கோப்பி ஸ்பெஷல் . கியூபாவை சேர்ந்த ஓரு கறுப்பு இனத்தை சேர்ந்தவர் வாழ்க்கையில் கோப்பி கு...