கோப்பி டே

 எல்லோருக்கும் எப்படி எல்லாமோ விடியும் எனக்கு என்னவோ காலையில் மணக்க மணக்க கோப்பி போட்டு குடித்தால் தான் அன்றைய பொழுதுக்கே மகிமை.  அது என்னவோ தெரியாது அம்மாவிடம் நான் பழகிகொண்ட விடயங்களில் முதன்மையானது இந்த கோப்பி , அம்மாவின் மரண படுக்கையில் அதிகாலையில் கோப்பி போட்டு பருக்கிய போது , நீ போய் உன் கோப்பியை கொண்டு வந்து சுட சுட குடி என்றது என் மனதை விட்டு அகலவே இல்லை. 


இன்று கோப்பி பிரியர்களின் தேசிய நாளாம் அது எப்போதாவது குடிப்பர்களுக்கு எங்களுக்கு எப்பவும் , எப்போதும், எங்கேயும் கோப்பிக்குரிய நாள் தான். நான் வேலைக்கு எப்போதும் கோப்பி பிளாஸக்கில் எடுத்து செல்வேன் . வேலை இடத்தில் எல்லா வசதிகளும் கோப்பி தேனீருக்கு இருந்தாலும் என் கோப்பி எனக்கு ரொம்பவே பிடிக்கும். 


அது என்னவோ என் கோப்பியின் வாசனை கமகம என்று , எனக்கு மணப்பதை விட மற்றவர்களுக்கு ஜாஸ்தியாகவே மணக்கிறது போல. என் பிரேக்கில் வருவோர் போவோர் எல்லாம் என்ன உன் கோப்பி இப்படி வாசனை தூக்கியடிக்கிறது என்று கேட்காதவர்களே, இல்லை பாமா கோப்பி ஸ்பெஷல் . 


கியூபாவை சேர்ந்த ஓரு கறுப்பு இனத்தை சேர்ந்தவர் வாழ்க்கையில் கோப்பி குடித்து பழக்கம் இல்லாதவர் என் கோப்பி வாசனையில் மயங்கி தானும் கோப்பி குடிக்க கொண்டார் என்றால் பாருங்கள் , ஆனாலும் சொல்வார் அது என்னவோ பாமா நீ போடும் கோப்பியின் வாசனை என் கோப்பியில் வருவதில்லை என்று . எல்லாம் என கைவண்ணம் என்று பீத்திக்கொண்டாலும் முற்றது மல்லிகைக்கு வாசமில்லை என்பது உண்மை போல.  ஹேப்பி கோப்பி டே☕️

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்