இடுகைகள்

செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலுக்கு கண்ணுண்டு

அவள் தியா நான் வேலை செய்யும் அந்த சாப்ட்வேர் கொம்பனியில் வந்து சேர்ந்த போது நானும் மகிழ்ந்து தான் போனேன்.அவளை பள்ளி பருவத்தில் இருந்தே தெரியும். மிகவும் துறு துறு என்று மகிழ்ச்சியான பெண். வாய் ஓயாமல் பேசுவாள், பேசா விட்டால் செத்தே போவாள் ,அந்த ரகம்.மிகவும் கலகலப்பான பெண் இருக்கும் இடத்தில் எல்லோரையும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டாட கூடியவள்.அவளை நான், அதுவும் இங்கு என் வேலை இடத்தில் சந்திப்பேன் என்று சற்றும் எதிர் பார்க்கவில்லை. தியா என் டீமில் தான் வேலை செய்தாள், எதையும் வேகமாக, கிரகித்து கற்றுக்கொண்டு விடுவாள், நட்பாக எல்லோர் உடனும் பழகும் சுபாவம் அவளுக்கு. அந்த சுபாவம் தான் வம்பை கூட விலைக்கு வாங்கிக் கொண்டு வந்து நிற்பாள். எங்கள் ப்ராஜெக்ட் மானேஜர் ஒரு இளைஞர் .சரியான சிடுமூஞ்சி. யாரோடும் பேசவே மாட்டாது.தான் உண்டு தன் வேலை உண்டு. டெக்கனிகல் லீட் ஹாண்ட்யாக நான் வேலை செய்து கொண்டு இருந்தேன், அவள் சாப்ட்வேர் டெவலப்பர் ,. எங்கள் சிடுமூஞ்சி ப்ராஜெக்ட் மேனேஜர் பேசவே ரொம்பவே பஞ்சி படுவான், மிஞ்சி போனால் டீம் லீடர்ஸ் உடன் தான் நாலு வார்த்தை எண்ணினால் போல பேசுவான், அவன் பார்வையில் எள்ளு...

உன்னைத்தாண்டி

ஒரு பெண்ணுக்கு இதைவிட பெரிய அவமானம் வந்து விட முடியாது. அந்த அவமானத்தால் வெட்கி கூனிக் குறுகி போனாள் மாலு. எனக்கா இதை சொல்கிறான் . இவனை நம்பியா, அம்மா, அப்பா ,சகோதரங்கள் எல்லோரையும் விட்டு மலைப்போல இவனையும், இவன் பெற்றோரையும் நம்பி திருமண பந்தத்தில் இணைந்து 10 வருடங்கள் வாழ்ந்து இருக்கிறாள். எத்தனை விசாலமான நம்பிக்கைகள் , எதிர்பார்ப்புகள், எல்லாவற்றையும் அரை செக்கனில் தவிடு பொடியாக்கி விட்டானே. இவனால் எப்படி முடிந்தது , இதை இப்படி சொல்ல. இப்படி ஒரு நிலை வரும் என்று அவள் என்றுமே சிந்தித்து பார்த்தது இல்லை. ஒன்றாக சிரித்துப் பேசி, இன்பம் துன்பம் பகிர்ந்து, ஒன்றாக உறங்கி எழுப்பி, இது எப்படி சாத்தியம். “ மாலு நீ இதே வீட்டில் இருக்கலாம் “ அவன் மெதுவாக சொன்னான். இது சலுகையா , அனுமதியா இல்லை விருப்பமா, இல்லை அனுதாபமா மாலு அவனை பார்த்த, பார்வையின் வீச்சு தாங்காமல் அவன் தன் பார்வையை திருப்பிக் கொண்டான். இன்று அவன் பெற்றோர் விருப்பப்படி இரண்டாவது திருமணத்துக்கு தயார் ஆகி விட்டான். தனக்கு ஒரு வாரிசு வேண்டும். தன் பெற்றோரின் ஆசைக்கு, ஒரு பேரக்குழந்தையை பெற்று கொடுக்க அவன் சந்ததியை காக்க தயாராகி வி...

முடிவு

ஒரு பழைய கிழிந்த இத்துப் போன டி ஷர்ட், டெனிம் பாண்ட் , கையில் ஒரு சின்ன பையுடன் இவர்களை கடந்து போய் கொண்டு இருந்தான் அவன். விமான நிலத்தில் இவளும் கணவனும் விடுமுறையை கழிக்க ஜப்பான் சென்று கொண்டு இருக்கிறார்கள். அதற்காக விமானத்தைதில் ஏறுவதற்க்காக  என்று தான் தங்களுக்கான தரிப்பிடத்தை நோக்கி நடந்து கொண்டு இருந்தார்கள். அவர்களை கடந்து போன அவனை கண்டதும் சேகர், மிக சகஜமாக “அந்துவன்” என்று அழைத்தான். இதை பார்த்த சேகர் மனைவி சிந்துக்கு தூக்கி வாரி போட்டது. அந்த அவனாக இருக்குமோ? இல்லை வேற யாருமாக இருக்குமோ. அந்துவன் அவனா இவன் கொஞ்சம் உற்று கவனித்த போது ஆடி போய் விட்டாள் . அவனே தான் இவன் , எப்படி மாறி போனான் ? எப்படி இப்படி ? மிக நேர்த்தியாக சேர்ட்டுக்கு ஏற்ற டை , அதுக்கு ஏற்றாப்போல கொஞ்சம் கடும் நிறத்தில் பாண்ட் , சீராக வாறப்பட்ட கூந்தல். பார்த்தாலே திருப்பி இன்னொரு முறை பார்க்க வைக்கும் முகம். எல்லோருக்குமே அவன் கூட பேச வேண்டும் என்று ஆவலை தூண்டும்  வசீகரம்.  ஆனால் இன்று , ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போய் இருந்தான். இவனையா ஒரு காலத்தில் காதலிச்சோம், பிச்சைக்காரனை விட மோசமாக இருக்க...

காதல்

நானும் வெளிநாட்டுக்கு வருவதற்காக கொழும்பில் , வெள்ளவத்தையில் 37th ஒழுங்கையில் வாடைக்கு இருந்தேன் . நான் இருந்த வீட்டின் மேல்மாடியில் ஒரு தாயும் மகளும் ஒரு அறையில் வாடைக்கு இருந்தார்கள் . தாய் சற்று மனநலம் குன்றிய மாதிரி கதைப்பார் . பார்த்தால் தெரியாது . மகள் பெயர் மேகலா . மிகவும் நல்ல பெண், தாயுடன் கனடா செலவதட்காக தங்கி இருந்தார்கள் . அவர்களது சகோதரின் ச்போன்செர் சரி வரும் வரை . நாங்கள் ஒரே வீட்டில் இருந்ததால் எங்களுக்குள் நல்ல நட்பு ஒன்று உருவாகி இருந்தது. தினசரி நாங்கள் காலை எட்டு மணிக்கு வெளிக்கிட்டு அருகில் உள்ள சர்ச்க்கு போய்விட்டு , வரும் போது மரக்கறிகள் , சமையலுக்கு தேவையான பொருட்கள் வாங்கி வருவோம் . இது வாடிக்கையாக இருந்து . மேகலாவுக்கும் அவரது தாயாருக்கும் கனடாவுக்கு போக வேண்டிய ஒழுங்குகள் ஒரளவுக்கு சரி வந்து கொண்டு இருந்த நிலையில் , மருத்துவ பரிசோதனைக்கு போக வேண்டி வந்ததது . அதற்கு டாக்டர் திருமதி . நவரத்தினமிடம் போக வேண்டி இருந்தது . மேகலாவுக்கு ஒரே பயம் ,அங்கு போனால் டாக்டர் கேட்பா “கனடாவுக்கு போய் என்னத்தை கிழிக்க போறாய் ?உனக்கு இங்கிலிஷும் தெரியாது , பிறகு உனக்கு என்ன க...

Quarantined

 பாட்டி அந்த கால மனுசி, ரொம்பவே கெடுபிடியாக தான், சொன்னதை கேட்கணும் இல்லை , கெட்ட கோபம் வந்திடும்.  கலாவின் அம்மா கூட இருந்த பாட்டி , மகளின் மறைவுக்கு பின்னர் பேத்தி கலா கூட வந்து விட்டா .கலாவின் அம்மா பாட்டியின் ஒரே மகள் என்பதால் மகள் மீது அளவு கடந்த பிரியம், அந்த மாதிரி பேத்தி கலாவின் மீதும் அவள் அண்ணன் தீலிப் மீதும் , பாட்டி அளவில்லாமல் அன்பை வைத்திருந்தாள். கலா கல்யாணம் செய்து கணவர் , இரண்டு குழந்தைகள் உடன் இந்த வீட்டில் வசிக்கிறாள். இரண்டு மாடி வீடு.அவர்கள் அங்கே குடி வந்து சில வருடங்கள் தான், கலாவின் கணவர் இந்த வீட்டை குறிப்பாக வாங்க காரணமே தன் பிள்ளைகளின் படிப்புக்காக தான். கலா இரண்டு பெண் குழந்தைகளையும் பள்ளிக்கு கொண்டு போய் விட்டு ஏறி இறக்குவது தான் வேலை,  வீட்டு சமையல், வீட்டை சுத்தப்படுத்துவது என்று பொழுது போய்விடும் அவளுக்கு .  கீழ் வீட்டு போர்ஷன் ஒரு இளம் தம்பதியர் வாடகைக்கு இருந்தனர். இவர்கள் முன் கதவு வழியாக போக வேண்டும் மற்றுப்படி எல்லாம்  அவர்கள் தனியாக தான் இருந்தார்கள். இருவரும் மென்பொருள் துறையில் , சாப்ட்வேர் பொறியியலாளர்களாக வேலை செய்த...
 எல்லோர் இல்லங்களிலும், தேவையில்லாத, ஆடம்பரமான , பொருட்கள் நிறையவே இருக்கும். ஆனால் சில அத்தியாவசியமான பொருட்கள் ஆனால் அன்றாட பாவனைகளில் இருக்காது, அதனால் அவற்றை நாம் வாங்கி வைக்க எண்ணுவது இல்லை. தேவை வரும் போது ஒரு மாதிரி சமாளிப்போம் , ஒன்றை வாங்க வேண்டும் என்று நினைப்போம். அபோதாதைய தேவை தீர மீண்டும் மறந்து போய் போய் விடுகிறோம். தொடுக்கிலும் ஞாபகம் வரவே வராது.  குறிப்பாக இந்த covid -19 காலங்களில் எல்லோரு இல்லங்களிலும் இருக்க வேண்டும். இருப்பவர்கள் yes /ஆம்  போடலாம் இல்லை என்றால், பிரச்சனை இல்லை, அடுத்ததடவை வாங்கி கொள்ள விரும்புவர்களுக்கும் yes , ஆம் போடலாம். அது அவசியம் என்று நினைப்பவர்களும் , yes ஆம் போடலாம்.  சில அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றை இனி வரும் சனி கிழமைகளில் ஞாபக படுத்தலாம் என்று இருக்கிறேன். பலரிடம் இருக்கும் அநேகமானவை. இருப்பவை வைத்து இல்லை கணிப்பு, இல்லாதவர்கள் வாங்கிக்கொள்ள, நினைவூட்ட தான் இது. முதலுதவி , முதலாவது ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டியது , காய்ச்சல் பார்க்கும் வெப்பமானி , பலருக்கு இந்த வார்த்தை புதுசா இருக்கும். Themometer  என்று ஆ...