அவள் பெயர் கண்ணு , அவளை நான் சந்தித்தது கொழும்பில், வெள்ளவத்தையில் தான். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வருவோருக்கு எல்லாம் குட்டி யாழ்ப்பாணம் வெள்ளவத்தை தான் காரணம் மொழிப் பிரச்சனை இல்லாமல் ஓரளவு சமாளிக்க கூடிய இடம் என்றால் இந்த பகுதி என்றால் மிகையாகாது. ஏனைய இடங்களில் சிங்களம் அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். எனக்கு எந்த மொழி தடங்கல் இல்லாத போதும் ஒரு தற்காலிக பாதுகாப்புணர்வு தந்தது இந்த வெள்ளவத்தை. நான் குடியிருந்த வீட்டு உரிமையாளர் ஒரு தமிழர். மிகவும் உதவி மனப்பான்மை மிக்கவர். அவருக்கு வயது வந்த பெண் குழந்தைகள் இருப்பதால் எந்த ஆண்களுக்கும் வாடகைக்கு கொடுப்பதில்லை என்பது கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் என அங்கு உள்ளவர் மத்தியில் ஒரு நம்பிக்கை. அங்கே தான் கண்ணு ஒரு முப்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க, அவள் பத்து வயது மகன் கண்ணன். பெயருக்கேற்ற கண்ணன் குழப்படி செய்வதில். கண்ணு அப்படி ஒன்றும் அழகி கிடையாது.எப்போதும் முகத்தில் ஒரு கடுகடுப்பு, அழகு என்று சொல்ல தன்னை அலங்கரித்து கொண்டதில்லை.சிக்கல் நிறைந்த கூந்தலை அள்ளி முடித்தபடி, எப்போதும் கண்ணன் உடன் மல்லுக்கட்டி...
இடுகைகள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நான் யாழில் பிறந்திருந்தாலும் , வளர்ந்தது என்னவோ கொழும்பில் தான்.அதனால் எல்லா பள்ளி விடுமுறைகளுக்கு தவறாமல் ஊருக்கு அதாவது யாழ்ப்பாணத்துக்கு போய் விடுவோம். அதுவும் ரயிலில் தான் போவோம் யாழ்தேவி , உத்தரதேவி போன்ற ரயில்களில். அப்போது அறியாத பருவம், எம்மை தாண்டி ஓடும் மரங்களை எண்ணிக்கொண்டு இருப்பேன். பனை மரங்கள் வரத் தொடங்கியது யாழ்ப்பாணத்தை நெருங்கி விட்டோம் என்று நினைத்து அம்மா அப்பாவிடம் ஊருக்கு கிட்டே வந்து விட்டோம் தானே என்று கேட்டேன்.அப்பா அடுத்தது எந்த எந்த ரயில் நிலையங்கள் என்று சொன்னதும் எண்ணிக் கொண்டு இருப்பேன் யாழ்ப்பாணம் வரும் வரை . பனை மரங்கள் என்றால் யாழ்ப்பாணம் என்று தான் மனதில் பதிந்து இருந்தது. ஆனால் வளர்ந்து குறிப்பாக, அந்த பெரிய கலவரத்தின் பின் பல தடவை யாழ்-கொழும்பு போய் வந்து இருக்கிறேன். முன்னர் போன மனநிலைக்கும் பின்னர் போன மனநிலைக்கும் பாரிய வித்தியாசம். ஆனால் மனதில் வேறு மாதிரியான ஒரு பயத்துடன் தான். குறிப்பாக அனுராதபுரம் புகையிரத நிலையம் என்றால் எனக்கு அப்படி ஒரு பயம் என்னுள்ளேயே. அதை நான் வெளி காட்டிக் கொண்டது இல்லை .அந்த ரயில் நிலையத்தில் தான் ஒரு கலவரத்தின் போத...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஒரு உலகம் எவ்வளவு தான் மறுமலர்ச்சி அடைந்து இருந்தாலும், முன்னேறி இருந்தாலும் இன்னும் ஆண்கள் மத்தியில் பெண்களுக்கான அங்கீகரிப்பு என்பது பரிபூரணமாக இல்லை என்பதே உண்மை. அது வார்த்தைகள் மூலமும் மேடைகளிலும் வேண்டுமானால் மறுதலிக்கலாம். ஆனால் உணர்வு ரீதியாக சொன்னால் அது உண்மையில்லை. அடுத்து பெண்களின் கலை சார்ந்த பங்களிப்பு பெரிதாக கண்டு கொள்ள படுவது இல்லை, இதில் எவ்வளவு திறமை இருந்தாலும் பெண்களுக்கு பின்னடைவு செய்வதற்கான வழிமுறைகள் உள்ளன. மீடியா, சினிமா துறையை பொருத்தவரை Couch casting , அவர்களோடு ஒத்துழைக்க வேண்டும், அவற்றை தாண்டி வெற்றி அடைந்தவர்களும் உண்டு. இப்படி எந்த துறை எடுத்து கொண்டாலும் பெண்கள் என்றால் நேரடியாகவோ மறைமுகமாகவோ நெருக்கடிகள் உண்டு. இன்று சோசியல் மீடியாவை எடுத்து கொண்டால் முகநூல், இன்ஸ்ட்ரா இங்கேயும் உள்பெட்டியில் முகம் தெரியாத நபர்களால் இடைஞ்சல் செய்யும் கூட்டம் , இவற்றை எல்லாம் கடந்து போக கற்றுக் கொண்டாலும், எம் கூடவே இருந்து நையாண்டி செய்யும் ஆண்கள் சிலர் இருக்கவே செய்கிறார்கள். அவர்களை நாம் கண்டு கொள்ள இல்லை என்றால் கூட , உலகின் எந்த மூலைக்கு போனாலும் மனதளவில் பின்தங்க...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஒரு பழைய சேலையில் தன்னால் சுமக்க கூடிய சில உடைகள் , சில பொருட்களை போட்டு கட்டிக்கொண்டு கொண்டு பக்கத்தில் ஓட்டை பாயில் பசியால் சுருட்டு போய் படுத்து இருக்கும் இரண்டு மகள்களையும் பார்த்தாள் தங்கம்மா . மூத்தவள் 21வயது , இரண்டாவது 13 வயது , . இரண்டு நாளாக வெறும் பச்சை தண்ணீரை குடித்து குடித்து இப்ப தண்ணீரை குடிக்கவே வாந்தியாக வந்து கொண்டு இருந்தது. பசி உயிரை வாட்டி எடுத்தது , பிச்சை எடுக்க தன்மானம் இடம் கொடுக்கவில்லை. அந்த கிராமத்தில் மரியாதையை உடன் வாழந்த குடும்பம் என்ற பெயர் எடுத்தவர்கள் , ஆனால் எல்லாமே ஒரு நாள் வாழ்வை புரட்டி போட்டது . கணவர் கடைகளுக்கு கணக்கெழுதி கொண்டு வரும் பணத்தில் மரியாதையோடு சிவனே என்று நிம்மதியாக வாழ்ந்தவர்கள் . மகன் சேது சொல்லாமல் கொள்ளாமல் பள்ளியில் இருந்து ஓடிப்போனான் , அனுப்பி வைத்த புத்தகங்களுக்கு இடையே ஒரு துண்டு கடுதாசி. “ நாட்டுக்காக போராட போராளி ஆகிறேன். அன்று உடைந்து போனார் சேதுவின் தந்தை, ஆனாலும் மனைவி , மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் கருதி , உயிர் இருந்தும் இல்லாத மாதிரி போனார், பலன் வேலையை ஒழுங்காக செய்ய முடியவில்லை, அதனால் வேலையில் இருந்து நீக்கப்...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரின் ஆழ் மனதிலும் நிறைய கனவுகள் இருக்கும். நான் சொல்லுவது , தங்கம் , வெள்ளி, உடைகள், பாத்திரம் பண்டங்களும் , இந்த பாண்டசி பொருள்களையும் அல்ல. அதையும் தாண்டி அவர்களுக்கான ஆத்மார்த்தமான கனவுகள் இருக்கும். அது எத்தனை வீதமான பெண்களுக்கு ஈடுயேறுகிறது என்றால் ஒரு எட்டு சதவீதம் என்கிறது கணக்கெடுப்பு. அதில் 5வீதம் நினைத்தை விட்டு வேற ஒன்றில் வெற்றி அடைந்து இருக்கலாம். பெண் பிறந்த வீட்டில் தன் கனவை வளர்த்து கொள்கிறாள். ஆனால் அது திருமணத்தின் பின் மறந்து போக வைக்கிறது அவளது குடும்ப வாழ்க்கை அதன் அமைப்பும். நிறைய பெண்களின் கேரியர் தொடர முடியாமல் போக காரணம் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். முன்னுரிமை கொடுக்கிறார்கள். அது இயற்கையின் அதிசயம் தாய்மை. எதை முன்னுக்கு கொண்டு வந்தாலும் குழந்தையின் முன் அவை இரண்டாம் பட்சமே. அவர்கள் கனவுகளை அவர்கள் முடக்கி கொள்கிறார்களா என்றால் , நிச்சயமாக ஆம் தான். அவர்களின் முன்னுரிமை ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு மாதிரி அமைகிறது. கணவனின் தொழிலுக்கும் , அவரின் கனவுகளுக்கும் , குழந்தைகளின் எதிர்காலத்துக்கும் என்று ஒவ்வொர...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வான்கூவர் , அமெரிக்கா பார்டர் 30 நிமிட தொலைவில், அதே போல பக்கத்தில் வேறு சில அமெரிக்கா போர்டர்களும் உண்டு. போர்டேரை கடந்தால் பொருட்களை மலிவாக வாங்கலாம் என்று இங்குள்ளோர் அடிக்கடி போவார்கள் ஒவ்வொரு வாரமும் , அதில் குறிப்பாக பால், பாஸ்டா , முட்டை, பிராண்ட் நேம் உடைகள் உலர்ந்த பலவகைகள். என்று ஏராளம். எனக்கு தெரிந்த ஒரு கணவரும் மனைவியும் போர்டேரை கடந்து போன போது குறிப்பாக இங்கு உள்ளவர்கள் காஸ்கோ போய் தான் தேவையான பொருட்களை வாங்குவார்கள். அங்கு உள்ள இடங்களில் எல்லாம் சுற்றி விட்டு காஸ்க்கோவில் பழங்களை கண்ட போது , பிளம் பழங்களை ஒரு கூடை வாங்கினார்கள், அதை பார்டர் கடக்கும் போது கொண்டு வர முடியாது என்று தெரியும் இருந்தும், வருவதற்குள் அதை காரில் இருந்தவர்கள் சாப்பிட்டு முடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் வாங்கினாங்கள் . வாங்கிய உடன் சில பழங்களையும் சாப்பிட்டு விட்டு, மறந்தும் போனார்கள்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
எல்லோருக்கும் வீட்டைக் விட்டு கிளம்பும் போது ஒரு மகிழ்ச்சி வரும் அது போகும் இடத்தை பொறுத்தது. அதிலும் vacation என்றால், அதாவது நீண்ட கால விடுமுறை என்றால் சொல்லவே வேண்டாம் எல்லோரும் மிக மகிழ்ச்சியாக ஆரவாரமாக , காத்திருந்து காத்திருந்து எதிர்பார்த்து பயணிப்பார்கள். அதற்காகவே நீண்ட காலமாக பிளான் பண்ணி இந்த பயணத்தின் போது நாம் எத்தனை பைகளை காவி கொண்டு போகிறோம், என்ன பார்க்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பது வரை. இது எனது அனுபவம் மட்டுமில்லை, பலருக்கு நடந்து இருக்கும் . எப்போதும் ஆண்கள் தங்களுக்கான ஒரு hand luggage, உடன் புறப்பட்டு விடுவார்கள். அதை கையில் கொண்டு போய் விடுவார்கள். அவர்கள் தங்களுக்கான அதிகமான பொருட்களை எடுத்து செல்வதில்லை, போடும் ஒரு சப்பாத்து, அதை விட உள்ளாடைகள், சில டீஷர்ட் மற்றும் பெல்ட் அவ்வளவே. ஆனால் பெண்கள் அப்படியில்லை, என்னை வைத்து தான் நான் சொல்கிறேன். அநேகமான பெண்கள் அப்படித்தான். எத்தனை நாட்கள் நிற்கிறோம் , அதற்கான நாட்களை எண்ணி அவற்றுக்கான உடைகள், அவற்றுக்கான சப்பாத்துகள் , மேக்கப் பொருட்கள், க்ரீம் , கூந்தல் அழுத்தி (hair str...
அழகானவை
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
காட்சி ஒன்று தான் ஆனால் என்ன ஆளுக்கு ஆள் மாறுபட்ட சிந்தனைகள் தோன்றும், கற்பனைகள் உருவாகும். அந்த சிந்தனை எண்ணம் எல்லாம் சரியாக தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை, அப்படித்தான் எனக்கு தெரிந்த மொழியில் பாஷையில் இந்த மலையை காணும் போது சிந்தனை தோன்றியது. Squamish, Sea to sky, என்ற சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து போகும் இடங்களில் மற்றும் ஒன்றான Whistler, Blackcomb. இங்கு வாழும் மலையும் , மலை தொடர்களும் அப்படி தான் சொல்ல தோன்றுகிறது, ஆண்டாண்டு காலமா இருக்கிறது, அது எப்போது தோன்றியது, அதற்கான வரலாறு வேண்டுமானால் சரித்திரங்கள், ஆய்வுகள் சொல்லாம், அந்த அறிவியல் அல்லது விஞ்ஞானம் . ஆனால் எனக்கு என்னவோ அந்த மலைகளையும் அதன் தொடர்களையும் காணும் போது மனதில் தோன்றியது எல்லாம், அந்த மலையில் சிவபெருமான் இருக்கிறார் என்று. அதில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம், அது அவரவருக்கு ஏற்ப எண்ணங்கள் மாறலாம். எதையும் காணும் போதும் அதில் நல்லவற்றை காண்பதே மனதுக்கும் சிந்தனைக்கும் சிறந்தது, குறைகள் இல்லாமல் எதுவும் இல்லை, ஒன்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் அந்த மலை வழிச்சு துடைச்சா போல இருந்தால...
அப்பா
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஜானு கோபமாக போய் அடித்து கதவை சாத்திக்கொண்டாள் . அவள் போன திக்கையே பார்த்துக்கொண்டு நின்றார் கந்தசாமி. "என்னப்பா யோசிக்கிறீங்க , விடுங்கோ , நாங்கள் இந்த நாட்டுக்கு வந்தது பிழை, பிள்ளைகள் இப்படி எடுத்தெறிஞ்சு பேசுவார்கள் என்று யார் கண்டது " அம்மா சரசு அலுத்துக் கொண்டாள் . "இல்லை சரசு, அதுக்காக நான் வருத்த படவில்லை. ஜானு என்ன சொன்னாலும் எல்லாத்தையும் தாங்கி அவளை கரை சேர பண்ணி விட வேண்டும், அதுதான் எங்கள் கடமை, அவளை தன் சொந்தக்காலில் நிற்க பண்ண வேண்டும் , அது ஒன்று தான் என் ஆசை " என்றார் கந்தசாமி . நந்தன் அவன் தான் கந்தசாமி சரசு தம்பதிகளின் முத்த மகன், அவன் ஏஜென்ட் மூலம் களவாக கனடா வந்து, அகதியாக இருந்து , பெற்றோரையும் தங்கை ஜானுவையும் இங்கே ஸ்பான்ஸர் பண்ணி அழைத்து இருந்தான், வந்த பெற்றோர்களும் சும்மா இருக்கவில்லை, கடுமையாக இரவு பகல் பார்க்காமல் உழைத்தார்கள், கிளீனிங், கேட்டரிங் , டிஷ் வாஷிங் என்று ஓடி ஓடி உழைத்து இந்த அழகான வீட்டை, டொரொன்றோ மாநகரத்தில் வாங்கி விட்டு இருந்தார்கள். ஜானு வளரும் போது கொஞ்சம் வசதியும் சேர்ந்து கொண்டது மட்டுமில்லை. ஜானு அழகியாக மட்டுமில்லை...
ஞானம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஞானம் என்றால் என்ன? எங்களை நாங்கள் பக்குவப்படுத்திக் கொள்வது, எங்களை நாங்கள் நாங்கள் பக்குவப்படுத்தி கொள்வதன் நோக்கம் என்ன.யாரையும் நாங்கள் காயப்படுத்த கூடாது, யாருடைய தப்பையும் பெரிசு படுத்த கூடாது . அவற்றை எல்லாம் இது வாழ்வில் கடந்து போக வேண்டிய நிகழ்வுகள் என்று எண்ணும் எண்ணத்தை வளர்த்துக் கொள்வது . எங்களை நாங்கள் நேர் வழிகாட்டலில் கொண்டு செல்வது, வாழ்வில் எதிர்பார்ப்புகளை எதிர்பார்க்காமல் வாழ கற்றுக்கொள்வது. எதிர்பார்ப்புகள் தான் ஏமாற்றத்தை கொடுக்கும், அந்த ஏமாற்றம் தான் வலியை கொடுக்கும் , அந்த வலிகள் வராமல் இருக்க வழியை தேடிக்கொள்வது தான் இந்த பக்குவ படுத்திக்கொள்ளல் . இவ்வுலகில் யாரையும் நாம் திருத்த முடியாது, யாரையுமே நாங்கள் சிருஷ்டிக்க இல்லை. அது கடவுளாலே முடியாத போது . நாம் பெற்ற குழந்தைகளையே கட்டுப்படுத்த முடியாது, அதுவே வாழ்வின் நிதர்சனம். நாம் எம்மை திருத்திக்கொள்வது , எம்மை நாம் மாற்றி அமைப்பது , எம்மை நாம் பக்குவ படுத்தி கொள்வது எல்லாம் ஞானம். உலகில் யாரையும் திருத்த ஞானம் முக்கியம் அல்ல, இந்த சிக்கல் நிறைந்த உலகில், சிக்கலே இல்லாமல் வாழ பழகுவது தான் ஞானம். எரிச்சல் , க...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இரவு ஒரு மணி இருக்கும், நவரச என்ற சில எபிசொட்களை நெட்ப்பிலிக்ஸில் படம் பார்த்து விட்டு, கதவுகள் எல்லாம் சரியாக பூட்ட பட்டு இருக்கா , அலாம் எல்லாம் ஓன் பண்ணியாச்சா என்று கீழே இறங்கி போய் பார்த்தேன், அதுவும் பிரான்சில் தாய், மகள் என்று கொள்ளை அடிக்க போன இடத்தில் கொலை எல்லாம் வாசித்தேனா அதன் தாக்கம் வேற. எல்லாம் சரி பார்த்துக்கொண்டு மேலே வந்த நான் மெதுவாக யன்னல் வழியாக எட்டி பார்த்தேன். அங்கே ஒரு உருவம் மெதுவாக எங்கள் கேட்டை தாண்டி நின்று கொண்டு இருந்தது. கருப்பு பாண்ட்ஸ் , கருப்பு நிற ஹூடி தலையை சேர்த்து மூடிக்கொண்டு இருந்தது. மெதுவாக அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தது ,கால் இருக்கா என்று ஊர்ஜித படுத்திக்கொண்டேன். எந்த வீட்டை போவது என்று யோசித்து கொண்டு இருப்பது போல இருந்தது, சரியாக எந்த வீட்டினுள் நுழைவது என்று தீர்மானிக்காத மாதிரியும் இருந்தது. ஒரு டாக்ஸி வந்து யாரையோ இறக்கி விட அந்த உருவம் தெருவோரத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து கொண்டது மட்டுமில்லாமல் மெதுவாக எங்கள் வீட்டின் மேல் மாடி யன்னலை பார்த்தது, யாரவது பார்க்கிறார்களா என்று ,லேசாக ஒரு சின்ன வெளிச்சம், ஒளி என் பிள்ளை...